சொல்ல விரும்பினேன் - 2 !!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

லீவ் ஒரு மாசத்துக்கு மேலே எடுத்த்தாச்சு. பதிவு போடுவதற்கு மட்டும்தான் விடுமுறை, அப்பப்போ வந்து பார்வையிட்டுக் கொண்டுதான் இருந்தேன். இடையில் ஒரு சமையல் குறிப்பு, முதல் தடவையாக ஃபோட்டோஸ் எடுத்து அனுப்பி இருந்தேன். இஷானிக்கு ஒரு பதிவு போட்டிருந்தேன்.

2 வாரம் முன்னால், NHM WRITER வேலை செய்யலை. New Horizon Media வெப் சைட்டில் பார்த்து, அவங்க சென்னை ஆஃபிஸுக்கு ஃபோன் செய்து கேட்டேன், Kaspersky Internet Security (வைரஸ் தடுப்பிற்காக) உபயோகிக்கிறீங்களான்னு கேட்டாங்க, ஆமாம்னு சொன்னேன். அவங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கோம், 2-3 நாளைக்கு அப்புறம் திரும்பவும் டவுன் லோட் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அப்படின்னு சொன்னாங்க. அதே போல செய்தேன்.சரியாகி விட்டது. NHM ஆஃபிஸிலிருந்து சில நாட்களுக்குப் பிறகு, ஃபோன் செய்தும் கேட்டாங்க, சரியாகிடுச்சான்னு. நன்றி சொன்னேன்.

இப்போ 2-3 நாளாக, அறுசுவை ஓபன் செய்தால், முகப்பு பக்கம் வருது, பிறகு, இழைகள் பார்வையிடும்போது, ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் பார்வையிட முடியலை. "Internet Explorer cannot open this page, operation aborted" அப்படின்னு மெசேஜ் டிஸ்ப்ளே ஆகுது. நான் Mozilla firebox பிரவுசர் உபயோகிப்பதில்லை. அதில் தமிழ் ஃபாண்ட் எனக்கு சரியாக வருவதில்லை. மற்ற வெப் பக்கங்கள்(யாஹூ, ஹாட்மெயில் ஓபன் செய்வதில் எதுவும் பிரச்னை இல்லை)

பட்டி மன்றத்தில் பதிவு போடுவதற்காக, 3 நாளாக ட்ரை பண்றேன். இன்னிக்கு ஒரு வழியாக பதிவு செய்து விட்டேன்.

வேறு யாருக்கும் இந்த மாதிரி பிரச்னை வந்ததா?

அன்புடன்

சீதாலஷ்மி

உங்கள் பதிவுப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. பேரன் நல்லாயிருக்கிறாரா. நீங்களும் வனியும் இல்லாம அருசுவை கொஞ்சம் தொய்வாபோக இருந்ததை கவிசிவா தனது விடாமுயற்சியால் திரும்பவும் களைகட்ட வைச்சிருக்கார். மோகனா மாமியும் இடையில் சென்னை பயணம் மற்றும் சில காரணங்களால் வர இயலாமல் போனது. ஜெ.மாமி அப்பப்ப வந்து தட்டிக் கொடுக்கிறாங்க. தளிகாவின் பதிவுகளும் இப்ப அடிக்கடி பாக்க முடியுது. ஆமினா, ரம்யா, பவி, ராதா இப்ப ரங்கலக்ஷ்மின்னு எல்லாருமே நட்சத்திரங்களா ஜொலிச்சுட்டு இருக்காங்க.
உங்களுக்கு படித்தேன் ரசித்தேன் பகுதிக்கு ஏராளமான அருசுவை தோழிகளின் கதை காத்துட்டு இருக்கு. இன்னும் பல நல்ல விஷயங்களும், அவ்வப்பொழுது வரும் சின்ன இடர்களுமா அருசுவை களை இழக்காமல் போய்ட்டிருக்கு.
நீங்களும் வனியும் இல்லாதது மட்டும் குறை . இனி அதுவும் இருக்காதுன்னு நினைக்கும் போது இன்னும் உற்சாகம் பிறக்குது. எல்லா அருசுவைத்தோழிகளுக்கும் அப்படியே இருக்கும்னு நினைக்கிறேன்.

சீதாம்மா, ஆமாம் எனக்கும் “Internet Explorer Cannot open page, operation aborted " அடிக்கடி வந்து தடங்கல் ஏற்படுத்தும். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் வரை கூட தொடர்ந்து ஏற்பட்டிருக்கு. 403 Forbidden அப்படினும் வரும். அட்மின் அவர்களுக்கு மினஞ்சலில் எனது ஐ.பி நம்பரும் அனுப்பி வைத்தேன். இப்ப அவ்வாறு தொடர்ச்சியா ஏற்படலைன்னாலும் சில சமயம் பதிவு போடமுடியாமல் பார்வையாளராக இருந்திருக்கிறேன். எனக்கும் அருசுவையில் மட்டுமே இவ்வாறு ஏற்படுகிறது.

கோமு அவர்களுக்கு NHM வேலைசெய்யவில்லைனு ஒரு முறை சொன்னார்கள். இப்ப அவங்களுக்கு அது சரியானதா என்று தெரியவில்லை. அவர்களாலும் இடமாற்றம் காரணமா பழையபடி வர இயலாத சூழ்நிலை.

எல்லாத் தடைகளும் மறைந்து இன்னும் அருசுவை களைக்கட்ட வேண்டும் என்ற ஆசையில்,

அன்புடன்
ஜெயா

Don't Worry Be Happy.

இன்னொன்னு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துட்டேன்.

அருசுவையின் முக்கிய பகுதியான் சமையல் குறிப்பில் இப்ப தினமும் பல குறிப்பு கொடுத்து அசத்திட்டு இருக்காங்க தோழிகள். கவிதா, ஹர்ஷா (அன்பரசி), ஆமினா, தளிகா இன்னும் பல பேர் போட்டி போட்டுட்டு இருக்காங்க;-)

Don't Worry Be Happy.

//ஆமினா, ரம்யா, பவி, ராதா இப்ப ரங்கலக்ஷ்மின்னு எல்லாருமே நட்சத்திரங்களா ஜொலிச்சுட்டு இருக்காங்க.//நன்றி ஜெயலஷ்மி

//403 Forbidden அப்படினும் வரும்//இது வேறு ஒன்றும் இல்லை. நாம் நமது பதிவை மாற்றுவை க்ளிக் பண்ண மாற்ற முயலும் போது அதுக்குள்ள நமது பதிவுக்கு வேறு யாரவது பதிலளி கொடுத்திருந்தால் இந்த மாதிரி வரும். பயம் தேவை இல்லை. அட்மின் அண்ணா சரிதானே!

அன்புடன்
பவித்ரா

என்ன பவி நன்றினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கண்ணுகலங்க வைச்சுட்டீங்க. நான் சொல்லைனாலும் வேறு யாராவது சொல்லியிருப்பாங்க. உண்மை அதுதானே ;-)
இன்னும் பல பெயர்கள் விட்டுபோயிருக்கலாம், அது எனக்கு தெரியாததால் இருக்கும். அதனால்தான் எல்லாருமே நு மற்ற தோழிகளையும் சேர்த்து இதில் தோழர்களும் அடக்கம் ;) குறிப்பிட்டு சொல்லியிருக்கேன்.

Don't Worry Be Happy.

en problam ninaivu vassirukkingkle? innamum sari aakalai. n h m
download aahavee mattengkuthu. ippa veli uril vera irukken poyiththaan
paakkanum

இழையை பார்க்க வேண்டாம்

யாரோ மிக கேவலாமான ஒரு விஷகிருமி மீண்டும் அறுசுவை தாக்க நினைக்கிறான். யாரும் குழந்தை வளர்ப்பு பயனுள்ள வீடியோ இழையை பார்க்க வேண்டாம். சட்டை செய்ய வேண்டாம். தோழிகளே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாபு அண்ணாக்கிட்ட சொல்ல அந்த விஷக்கிருமியின் பதிவை எடுக்க சொல்லலாமே!

அன்புடன்
பவித்ரா

ஆமாம் ஜெயலஷ்மி, கதை மலரில் வெளி வரும் எல்லா சிறுகதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு. அறுசுவை, இப்போ கிட்டத்தட்ட ஒரு மாகஸின் மாதிரி, எல்லா அம்சங்களுமே ரொம்ப சிறப்பாக இருக்கு. இப்பல்லாம் அறுசுவை ஓபன் செய்ததும், நான் முதலில் படிப்பது, சிறுகதைகள்தான். அந்த அளவுக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

மோகனா மாமிகிட்ட ஒரு நாள் ஃபோனில் பேசினேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

வனிதாவும் வந்தாச்சு. இனி கலக்குவாங்கன்னு நினைக்கிறேன்.

சமையல் குறிப்புகளை அப்பப்போ பாத்துகிட்டு இருக்கேன். பதிவுதான் போட முடியலை. வாழ்த்துகள் பகுதிக்கு டைப் செய்து வச்சிருக்கேன். பதியணும்.

இதுவரைக்கும் சினிமா சம்பந்தப்பட்ட பட்டிமன்றமே நடந்தது இல்ல, இந்த தடவை, ராதா நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் கலந்துக்கணும்னு ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.(நான் சரியான சினிமா பைத்தியமாச்சே, அதுவும் பழைய படங்கள், காமெடி ரொம்பப் பிடிக்கும்). கலந்துக்க முடியாம போயிடுச்சு. ஆனாலும் நிறைவுப் பகுதியாக ஒரு பதிவு போடணும்னு நினைச்சிருக்கேன். பாக்கலாம்.

ரம்யாவுக்கு பட்டிமன்ற தீர்ப்புக்கு அப்புறம் பதிவு போட முடியலை. அதுவும் செய்யணும். அது தவிர, அந்த பட்டியில் கவிசிவா வாதாடினது, ரொம்ப பிரமாதம். என்னை மிகவும் யோசிக்க வச்சுட்டாங்க. அவங்களுடனும் பேசணும்.

இந்தப் பதிவு, காலையில் இருந்து, ரெண்டு ரெண்டு லைனாக டைப் செய்து, இப்பதான் பதியறேன். டைம் சரியாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி

அப்பாடா வந்துட்டிங்களா.?. உங்களைத் தான் ரொம்ப மிஸ் பண்ணினோம். அப்பப்ப ஜெ மாமி கூட இருந்ததால பரவாயில்லை.. நல்லா இருக்கிங்களா. பேரன் மற்றும் மருமகள் நலமா.. ?

உங்க படித்தை ரசித்தவை எப்பவுமே சூப்பர்.. இம்முறை ரொம்பவே நல்லா இருந்தது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்