சென்னையில் அப்பாட்மென்ட்...

சென்னையில் அப்பாட்மென்ட் வாங்குவது நல்லதா? அல்லது மனை வாங்குவது நல்லதா? தோழிகள் பலருக்கு அனுபவம் இருக்கும்.பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்களுக்கும் இந்த IDEA உள்ளது.நம் தோழியர் யாறும் பதில் சொல்லறாங்களா என்று பார்க்கலாம்.

Hai veje... தங்கள் பதிலுக்கு நன்றி.

ஹாய் தோழி முதலில் பார்பது லொக்கேசன் ஏன் என்றால் பக்கதில் பள்ளி,மளிகை கடை மருந்து கடை பஸ் வசதி மழை பெய்தால் தண்ணீர் தேங்கக்கூடாது இதுக்கும் மேல் துட்டு வசதி தனி வீடு என்றால் பாதுகாப்பு வசதி எல்லாம் பார்க வேண்டும் ப்ளாட் என்றால் பாதுகாப்பு வசதி இருக்கும் மனை வாங்கி வீடு கட்டுவது நம் வசதிக்கு கட்டிக்கலாம் ப்ளாட் என்றால் அப்படியே குடிபோகலாம் எதுவாக இருந்தாலும் நமக்கு திருப்தி வேண்டும் விசாரித்து முடிவு எடுக்கவும்

சிறு வயதுக்காரர்கள் தங்கள் வேலை செய்யுமிடத்திற்கு அருகில் அவரவர் சக்திக்கேற்றபடி ஒரு ஃப்ளாட் வாங்கிக்கொண்டு, கூடவே ஒரு கிரவுண்டும் வாங்கிபோடலாம். ஓய்வுக்காலம் வரையில் அபார்ட்மெண்ட்டிலும், பிறகு நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு போகலாம். அது அவரவர்கள் குடும்ப அங்கத்தினர்களின் வசதியையும், பொருளாதார நிலையையும் பொருத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
எஸ்.ஏ.பூரணி
அன்பே சிவம்

AnbE Sivam

முதலில் ப்ளாட் வாங்குவது தான் என்னை பொறுத்தவரை பெஸ்ட். அதுக்கு பிறகு நல்ல மனையா வாங்கலாம்.
மனை வாங்குவது என்றால் நல்ல தரகர், நம்பகமான நபரை வைத்து முடிக்க வேண்டும். கடைசி வரை நிலத்தின் ஓனர் முகத்தையே காட்டாமல் புரோக்கரே பேசுவார். அது போன்ற ஆட்களை நம்பாமல் இருப்பது மேல்.

உங்க பட்ஜெட்,பொருளாதார நிலை எப்படி என பார்த்து வாங்குவது நலம்.

பணம் பாக்க மட்டும் என்றால் மனை வாங்கலாம். கண்டிப்பாக 5 வருடத்தில் பல மடங்கு அதிகரிக்கும். சென்னைக்குள் காலி இடம் கிடைப்பது அரிது. அதையும் யோசிக்கணும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மனைகளில் சில சமயத்தில் ஆக்ரமிப்புக்கள் பயங்கர தலைவலி உண்டாக்கும்.நிறைய போலி ரியல் எஸ்டேட்ஸ் உண்டு கவனமாக தேர்வு செய்யுங்கள் .அப்பார்ட்மெண்ட்ஸ் நல்ல பில்டர்ஸ் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை.

சென்னை யில் இப்பொழுது எங்கு பிளாட் அல்லது அப்பார்ட்மென்ட் வாங்க சரியான இடம் ?. குறைந்தபச்சம் முதலீடு செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும்? please தெரிந்தவர்கள் கூறவும் .

அன்பு ஸ்ரீஷா,

இதே கேள்விதான் எங்க மனசிலயும் இருக்கு. இப்ப சென்னையில் ஃப்ளாட் வாங்கணும்னா, குறைந்தபட்சம் 35 லட்சம்(இது நடுத்தர பில்டர்கள் தருவது), பிரபலமான பில்டர்கள் என்றால் 45 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரைக்கும் கூட இருக்கும். எல்லாமே ஓ.எம்.ஆர் சாலை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், ஜி.எஸ்.டி.சாலை, இப்படித்தான் சொல்றாங்க. சமீபத்தில் ஒரு நண்பர், கூடுவாஞ்சேரியில் ஒரு தனி வீடு வாங்கியிருக்காங்க. 37 லட்சம் ஆச்சுதுன்னாங்க. கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து, இன்னொரு 10 நிமிஷம் ஆட்டோவில் போகணும்.

பில்டர்களிடம் முதலில் புக் செய்கிறப்ப, 10% பணம் கட்டணும். பிறகு ஒரு மாதத்திற்குள் இன்னொரு 10% கட்டணும். மீதமுள்ள தொகை, கன்ஸ்ட்ரக்‌ஷன் ரிலேடட் - அதாவது கட்டுமானம் தொடரும் அளவைப் பொறுத்து, கட்ட சொல்வாங்க. நீங்க பாங்க் லோன் வாங்கினால், அது இ.எம்.ஐ ஆக கட்டும்படி இருக்கும்.

இன்னும் தோழிகள் வந்து சொல்வாங்கன்னு நினைக்கிறேன். நானும் மேலதிக தகவல்கள் தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

i need a lease house near saidapet. how much they wil ask for rent. if u know any lease house means can u tel me. plz

Nothing can impossible with GOD

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருக்கோம் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND தஞ்சாவூர் எதில் கமிஷன் உண்டு 2 % 24 மதம் பெறாலம்

மேலும் சில பதிவுகள்