ரசமலாய்

தேதி: September 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பால் பவுடர் =1 கப்
முட்டை = 1
பேகிங் பவுடர் = சிறிதளவு
பால் = 3 கப்
ஜீனி =ஒரு கப்
பிஸ்தா தூள் = சிறிதளவு


 

பால் பவுடரில் பேகிங் பவுடர் முட்டை சேர்த்து பிசைந்து சிறிய சிறியதாக 50 காசு போல் தட்டி கொள்ளவும்

அகலமான பாத்திரத்தில் பாலை கொதிக்கவைத்து கொதி வந்தவுடன் ஜீனி சேர்த்து கொதிக்க வைக்கவும் .
கொத்தி வந்தவுடன் தட்டியதை போட்டு10 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்கவைக்கவும்.
நன்கு வெந்தவுடன் ஆறவைத்து ப்ரிஜில வைத்து குளிரவைத்து பரிமாறும் போது பிஸ்தா தூள் தூவி பரிமாறவும்


பால் பௌடரை முட்டையால் மட்டும் பிசையவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு. நாங்க முட்டை உபயோகிக்க மாட்டோம், அதனால் வேறு முறையில் செய்வோம். இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துக்கு நன்றி பவி நீங்க செய்யும் முறை எப்படின்னு சிக்கிரமா குறிப்பு கொடுங்க பவி

இது ரொம்ப நல்லா இருக்கும்.நான் இப்படிதான் செய்வேன்.பாலில் ஏலக்காய்,குங்கமப்பூ சேர்த்தால் நல்ல வாசமாக இருக்கும்.முட்டை சேர்ப்பதால் வ்ரும் வாசம் வராது.
வாழ்துக்கள் நஸ்ரின்

ஹாய் ரீம் நலமா நீங்க சொல்வது போல் குங்கமப்பூ சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் குங்கமப்பூ இல்லாத சமயம் இது போல் செய்யலாம் முட்டை வாடை இருகதுபா வாழ்த்துக்கு நன்றிபா

முட்டை கலக்காமல் எப்படி செய்வது நஸ்ரின்...... பாக்க அருமையா இருக்கு....நாங்க முட்டை யூஸ் பண்ண மாட்டோம்.... கலக்காமல் செய்வது எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கா லக்ஸ்மி முட்டை சேர்க்காமல் எப்படிசெய்வது எனக்கு தெரியலபா ஜலீலா அக்கா பன்னீர்ல செய்யலம்முனு சொல்லி இருகாங்க அது மாதிரி ட்ரை பண்ணி பாருங்கப்பா வருகைக்கு நன்றி

நான் ஜலிலா அக்கா கொடுத்த குறிப்பு வைத்து ரசமலாய் செய்வேன். இதுவும் எளிதான முறையாக உள்ளது. செய்துட்டு சொல்கிறேன் பா.

முட்டை சேர்க்க பிடிக்காதவர்கள் பன்னீரிலும் செய்யலாம் என ஜலிலா அக்கா சொல்லியுள்ளார்..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமாப்பா இது ரொம்ப ஈஸியா செய்து விடலாம் கண்ண்டிபா செய்துவிட்டு மறக்காம சொல்லுங்கபா வருகைக்கு நன்றிபா

நான் செய்து பார்த்து விட்டு சொல்ரேன் பா. எனக்கு ரசமலாய் ரொம்ப பிடிக்கும். ஊர்ல சாப்ட்டது

வ அழைக்கும் முசலம் ஷாபான் நல்லா இருக்கீங்களா ?செய்து பார்த்துட்டு சொல்லுங்க வருகைக்கு நன்றி பா

hai friends umaiyilaye romba shanthoshama irrukku arusuvaila naum oru suvainu nanaikkum podu yanakunu oru ullagam kidaicha madiri iirukku yanna uga friendsa yethupingala