பயனுள்ள அரட்டை பாகம் 3

போன அரட்டையில் யாரும் அவ்வளவா பேசல:( சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு இன்னும் சில பேருக்கு தெரியலையோ என்னவோ. இன்னும் தெரிஞ்சவங்க அதுல பேசலாம்.

இன்றைய தலைப்பு “விருப்பங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்”
என்னன்ன பிடிக்கும்னு சொல்லுங்க பாக்கலாம். என்ன பிடிக்குமோ எத வேண்டுமென்றாலும் சொல்லலாம். நிறைவேறிய விருப்பங்களும், நிறைவேறாத விருப்பங்களும் சொல்லலாம்.

ஹைய்யோ ஆமினா.. இப்படி ஒரு டாபிக் செலெச்ட் பண்ணினத்துக்கு உங்களுக்கு எதாவது வாங்கி கொடுக்கனும் போல இருக்கு.. ஆனா உடனே தர முடியாதே.. அதுனால..என் பேரை சொல்லி நீங்களே உங்களுக்கு பிடித்த ஸ்வீட் வாங்கி சாப்பிட்டுக்கோங்க..

எனக்கும் சொட்ட சொட்ட மழையில் நனையிறதுன்னா அவ்வ்வ்வ்ளோ பிடிக்கும்... பௌர்ணமி நிலா ரொம்ப ரொம்ப பிடிக்கும்... (நேத்து கூட நிலா அவ்வ்வ்ளோ அழகா இருந்தது)... பஸ்,ட்ரைன் - ல ட்ராவல் பண்ணும் போதும்,office-ல வேலை செய்யும் போதும்,ear phone-ல பாட்டு கேக்கறது பிடிக்கும்.. (இப்போ கூட பாட்டு கேட்டுகிட்டு தான் பதிவு போடுறேன், "ஆத்தங்கரை மரமே அரசமர கிளையே" பாட்டு ஓடிட்டு இருக்கு)... அப்புறம், office முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் சூடா coffee போட்டு என் அத்தான் கூட "Cheers" அடிச்சிட்டு குடிக்கறது பிடிக்கும்... லேசா மழை தூவிட்டு இருக்கும் போது, எங்க வீட்டுக்கு பக்கதுல இருக்க way-side hotel-ல நானும் அத்தானும் சூடா chicken soup குடிக்கறது பிடிக்கும்... இப்படி இன்னும் நெறயா இருக்கு...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

எனக்கு லிஸ்ட் செருசு...

மழை.மலை,கடல்,தீவு,கல்கியின் ”சிவ்காமியின் சபதம்”,ஏகாந்தமான மன நிலை இதெல்லாம் இருந்தா சோறு தண்ணி கூட எனக்கு வேண்டாம். :)

ரம்யா உங்களுக்கு மழைலே நனையப் பிடிக்கும் எனக்கு அதை வேடிக்கைப் பார்க்கிறாதுனா அப்படிப் பிடிக்கும்.. மழை வந்த்தாலே மனசே லேசாகிடும்..
ஒரு விஷயம்.. இப்போ கூட இங்க மழை பெய்யுது.. கதவு ஜன்னல்லாம் திறந்து வைத்துக் கொண்டு அந்த மழையோட ஈரமான காற்றை அனுபவித்துக் கொண்டு இந்தப் பதிவைப் போடுகிற இந்த நிமிடம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு :)

செல்ல மறந்த கதை! வரும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு மழை ரொம்ப பிடிக்கும் ஆனா மழையில் நனைந்தால் பிடிக்கும், ஆனா ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சிடுமே அதனால நான் நனைவதில்லைப்பா

பீச் வாக், ஒரு அழகான அமைதியான பூங்கா, கூட்ட நெரிசல் இல்லாத ஒரு அழகிய ஆலயத்தில் மணி கணக்கா உட்காந்து இருப்பது ரொம்ப பிடிக்கும். மனசு அப்படியே லேசாயிடும். ஏதாவது மனக்கவலை என்றால் நான் நாடுவது ஆலயத்தை தான். சாமி சேவிக்கிறேனோ இல்லையோ அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திடுவேன்.

அன்புடன்
பவித்ரா

சரண்யா சேம் பின்ச்.. எனக்கும் நிலனா இஷ்டம்.பௌர்ணமி நிலானா அப்படி இஷ்டம்.. அதிலும் கடற்கரைக்குப் போய் அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்த்து இருக்கிறாதுனா விடிய விடியக் கூட பார்த்துகிட்டு இருக்கலாம் போல இருக்கும். வீட்லயும் மொட்டை மாடிகுப் போய் அமைதியா அதைப் பார்த்துட்டு இருக்க ரொம்ப பிடிக்கும்.. அந்த நிலாவைப் பார்த்து வந்தியத்தேவன்,நரசிம்ம பல்லவர்லாம் பேசுகிறது போல் சிவகாமியின் சபதத்தில் கல்கி எழுதி இருப்பார்.. அவங்க பேசின அதே நிலாவைப் பார்க்கிறொம்னு நினைக்கும் போது அவங்களையே பார்ப்பது போல் அப்படி ஒரு சந்தோஷம் மனசுல ஏற்படும்..அந்த சந்தோஷம் கூட ஆர்ப்பாட்டம் இல்லாத ஏகாந்தமான சந்தோஷம்.. சான்சே இல்லை.. I love such momemts :)

மாமி!! எப்படி இருக்கேள்.. அறுசுவைல மாமியோட எதுகை மோனை, ரொம்பப் பிடிக்கும் பா.. நான் ரெடியா இருக்கேன் கெட்-டு-கேதர் க்கு எப்போனு சொல்லுங்கோ!!

எனக்கு ம்ம்ம்ம்........... மழை வரப்ப வீட்டுக்கு வெளிய வராந்தாவில் உக்கார்ந்து சில்லுன்னு காற்றும், சாரலும் படறமாரி மழைய ரசிச்சுக்கிடே சூடா கார வடையும், அப்படியே டீ குடிக்கறத்துக்கு ரொம்ப பிடிக்கும்....அப்பறம் நிலா வெளிச்சதில மொட்ட மாடில அம்மா, அப்பா சரிதமா பேசிக்கிட்டே சாப்பிட பிடிக்கும்.............ம்ம்ம்ம் குளிர் பிரதேசதில அமைதியான இடத்தில என்னவர் கைய பிடிச்சுகிட்டு நடக்க பிடிக்கும்....

...........கௌசி.......

கம கமக்கும் புரோட்டா சால்னா பிடிக்கும்
கதாசிரியர் கல்பனா பிடிக்கும்
பணம் அடிக்கும் நாஸிக் பிடிக்கும்
பாசக்கார பயப்புள்ள ஆஷிக் பிடிக்கும்
தேனும் தேனீ பிடிக்கும்
அக்கா யோகராணி பிடிக்கும்
சகாரா பிடிக்கும்
தங்கை அப்சரா பிடிக்கும்
படிக்கும் வேளையில் அனிதா பிடிக்கும்
அடிக்கடி அடிக்கவரும் அக்கா வனிதா பிடிக்கும்
என் கம்பேனி ஓனர் காஜா பிடிக்கும்
எப்பவாவது வரும் தங்கை கதிஜா பிடிக்கும்
கவிதையில் கமா பிடிக்கும்
ஆசிரியர் இமா பிடிக்கும் செபா பிடிக்கும்
ஆதித்யா டீவி பிடிக்கும்
நித்யா சகோ பிடிக்கும்
இளவேனி(ர்) காலம் பிடிக்கும்
தங்கை சாந்தினி பிடிக்கும்
அஜித் மனைவி சாலினி பிடிக்கும்
அவ்வபோது பேசும் யாழினிபிடிக்கும்
சிறு பருவத்தில் கிரிக்கட் பந்து பிடிக்கும்
காணாமல் போன இந்து பிடிக்கும்

அட போங்கள் விடுபட்ட எல்லோரையும் பிடிக்கும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அமர்க்களம் அஜீத் ரொம்பப் பிடிக்குமோ!! ;)

மேலும் சில பதிவுகள்