பயனுள்ள அரட்டை பாகம் 3

போன அரட்டையில் யாரும் அவ்வளவா பேசல:( சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு இன்னும் சில பேருக்கு தெரியலையோ என்னவோ. இன்னும் தெரிஞ்சவங்க அதுல பேசலாம்.

இன்றைய தலைப்பு “விருப்பங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்”
என்னன்ன பிடிக்கும்னு சொல்லுங்க பாக்கலாம். என்ன பிடிக்குமோ எத வேண்டுமென்றாலும் சொல்லலாம். நிறைவேறிய விருப்பங்களும், நிறைவேறாத விருப்பங்களும் சொல்லலாம்.

அருமை தோழி கவிசிவா பிடிக்கும்!

ஆனை மாறி இருக்கும் அனைவரையும் பிடிக்கும்!

இமாவின் புன்னகை பிடிக்கும்!

ஈ என்ற என் இளிப்பு பிடிக்கும்!

உ வை விடாமல் இருப்பது பிடிக்கும்!

ஊருக்கு நல்லது செய்ய பிடிக்கும்!

எருமையையும் பிடிக்கும்!

ஏளனமும் ரொம்ப பிடிக்கும்!

ஐயம் இல்லாமல் இருக்க பிடிக்கும்!

ஒட்டக பால் பிடிக்கும்!( இப்படி சொன்னாலாவது யாராவது தர மாட்டளா!)

ஓடத்தில் ஏறி ஏரியில் உலாவர பிடிக்கும்!( நடக்கற காரியமா! ஆனையை ஓடத்தில் ஏத்தினா ஓடம் என்னாகும்!)

ஒளவை பாட்டி போல் பாடபிடிக்கும்!( யார் ஒளவை பாட்டியை பாத்துருக்கா!)

அஃதுனு சொல்லி முடிக்க ரொம்ப பிடிக்கும்!( அப்பாடி எல்லாருக்கும் விடுதலை!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிஞரே உங்கள் கவிதையில் பொருட்குற்றம் இல்லை ஆனா சொற்குற்றம் உள்ளது. "ஆனை மாறி" என்று சொல்லக் கூடாது "யானை மாதிரி" என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் குண்டு கண்ணால் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னப்பா எல்லாரும் என்ன விட்டுட்டு என்னல்லாம் பிடிக்கும்னு ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுக்கிட்டு இருக்கீங்க...

எனக்கு அப்பா, அம்மா, அண்ணா, ஆத்துக்காரர், ஆசைப்பையன், அறுசுவை, அன்பான அறுசுவைத்தோழிகள், அலைகடல், அருவி..... இப்படியா நிறைய பிடிக்கும்...

எல்லாத்தையும் விட நம்ம் பயனுள்ள அரட்டையும் பிடிக்குமுங்கோ...

(ஆக மொத்தம் யாருக்கும் சமைக்க பிடிக்கறது கிடையாது. ஆனா எல்லாருக்கும் யாராவது பண்ணிக்கொடுத்தா நல்லா சாப்பிடப்பிடிக்கும். நல்ல ஆளுங்கடா சாமி....., )

மாமி லிஸ்டில் என்னை மறந்ததால் மாமியை மிகவும் பிடிக்கும்.. (அப்பத்தான நைஸ்ஸா கூட்டிட்டுப்போய் 100 தடவை கிச்சு கிச்சு மூட்ட முடியும்,....)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நக்கிரரின் பேத்தியா!

வாரும் வாரும் வந்து கூறி பாரும்!

என்ன குற்றம் கண்டடீர்! சொற் சுவை இலா! அல்லது பொருட் சுவை இலா!

( அப்பாடி இலா பேரையும் சேத்தாச்சு!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிஞரே கண் மருத்துவமனைக்கு போயிருந்த போது தங்கள் கண்ணையும் பரிசோதித்திருக்கலாமே. என்ன குற்றம்னு தெளிவா சொன்ன பிறகும் என்ன குற்றம் என்று கேட்கிறீரே!

அய்யோ முடீல சுத்த தமிழில் பேச :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா சொன்ன மாதிரியே மாமி என்னையும் லிஸ்டில் விட்டுட்டுடாங்கோ
அதனால் 1000 கிச்சு கிச்சு மூட்டப்படுகிறது.

மாமி உங்களை இப்ப தான் ரொம்ப பிடிச்சிருக்கு
ஐயய்யோ ஹைய்யயோ பிடிச்சிருக்கு
எனக்கு உன்னை புடிச்சிருக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் மாமி எப்படி இருக்கீங்க

குழந்தைகளின் புரியாத பாசை அந்த மழலை
பெளர்ணமி நிலவில் மெட்டை மாடியில் நண்பர்கள் சூழ சாப்பிட்டுக் கொண்டே அரட்டை
S.P.B, HARIHARAN வாய்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ப்ரஷ் தயிர்னா கொள்ளை பிரியம்
மழை பொய்யும் நேரத்தில் சூடான டீ குடிச்சுகிட்டே ஊஞ்சல் ஆடனும்.
கொடைக்கானல் லேக் போட்டிங்
நிறைய பூச்செடிகள் வளர்த்து அதன் நடுவில் நான் இருக்கனும். என்னை சுத்தி ஒரே பூக்களா இருக்கனும்.
ஹில் ஸ்டேஷன்ல கார்ல மெலடி மியூக் போட்டு கேட்டுகிட்டே ட்ராவல் பண்ணனும்.
அறுசுவையின் அன்பு தோழிகள், தோழர்கள் அனைவரையும் பிடிச்சிருக்கு(எப்புடி?)

இன்னும் இன்னும் இருக்கு

எனக்கு என் அண்ணனோட சண்ட போடுறதுன்னா ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும்.

ரம்யா மேடம்..எல்லோரையும் விட்டுவைக்கவில்லை என்று சொல்லமுடியாது...சிலரை அவர்களின் பெயருக்கேற்ற வாசகம் கிடைக்கவில்லை..அதனால் எழுத் முடிய வில்லை..கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்து கடைசி வரியில்"விடுபட்ட எல்லோரையும் புடிச்சிருக்கு "என்று முடித்துவிட்டேன்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்