வல்லாரை கூட்டு

தேதி: September 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வல்லாரைக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிதளவு
துருவிய தேங்காய் - கால்கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு


 

வல்லாரைக்கீரையை காம்பை நீக்கிவிட்டு இலையை மட்டும் ஆய்ந்து நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பு, 1 பச்சைமிளகாய் சேர்த்து குக்கரில் தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
பிறகு அதே வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.

இதே போன்று முட்டைக்கோஸ், சௌசௌ போன்ற காய்கறிகளை பயன்படுத்தியும் கூட்டு செய்யலாம். பொதுவாக வல்லாரைக்கீரை சற்று கசப்புத்தன்மையோடு இருப்பதால் குழந்தைகளை சாப்பிட வைப்பது கடினம். இவ்வாறு கூட்டு செய்து சாதத்துடன் நெய் மற்றும் இந்த கூட்டு சேர்த்து பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஞாபகசக்தியை வளர்க்கும் திறன் வல்லாரைக்கீரைக்கு உண்டு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதாக்கா, இங்க இது கிடைக்குமானு தெரியல, இது வரை நான் கடையில் வாங்கினது இல்லை. செய்துட்டு சொல்றேன். நல்ல சத்தான குறிப்பு. கோஸ் அம்மா இப்படி தான் கூட்டு செய்வாங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ராதா,
வல்லாரையில் கூட்டு வித்தியாசமா இருக்கே. நான் வல்லாரையை பார்த்தது கூட கிடையாது.நான் அரைத்து வைத்து கூட்டு செய்தது இல்லை.இந்த கூட்டை பாலக் கீரையில் செய்து பார்த்துட்டு சொல்றேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

வல்லாரை துவையல் கேள்வி பட்டு இருக்கேன் வல்லாரை கூட்டு ரொம்ப வித்தியாசமா இருக்குகா

நான் வல்லாரை சேர்த்து இது போல் கூட்டு செய்துள்ளேன். கசப்பின் காரணமாகவும் (சாப்பிடும் போது தொண்டையில் அறுப்பதாலும்) செய்வதே இல்லை. குக்கரில் வேக வைப்பதால் அந்த தொந்தரவு இருக்காது இல்லையா?

கிடைக்கும் போது செய்துட்டு சொல்கிறேன் பா

தொடர்ந்து பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பை வெளியிட்ட அட்மின்-க்கு நன்றி...

பவி
எனக்கு இங்க தாராளமா கிடைக்கும். அதுனால அத ஒரே மாதிரி செய்யறத விட, கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் இந்த கூட்டு. நன்றாக இருந்தது. அதான் குறிப்பா வந்திடுச்சு அறுசுவைக்கு...
வந்து பின்னுாட்டம் அளித்ததற்கு மிக்க நன்றிடா...

அன்பரசி
தாராளமா செய்து பாருங்க.. முட்டைக்கோஸ், சௌசௌ, மற்ற கீரை எல்லாவற்றையும் இது மாதிரி செய்யலாம். உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் நன்றிப்பா..

நஸ்ரின் கனி
வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் இப்படி ஒரு கூட்டு. செய்துபார்த்துட்டு சொல்லுங்கப்பா... வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா...

ஆமினா
அது சற்று கசப்புத்தன்மையோடு இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் ஏதேனும் ஒருவகையில் செய்து சாப்பிடலாம். இம்முறையில் நான் செய்த போது கசப்பு அதிகம் தெரியவில்லை. என் அம்மா துவையல் தான செய்வார்கள். அதை அதிகம் பையனுக்கு கொடுக்க முடியல. அதுக்கு இதுமாதிரி செய்தா சாதத்துல பிசைந்து கொடுத்துவிடலாம். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. ஒரே ஒருவிஷயம் குக்கரில் வைத்தால் கலர் சற்று மாறிவிடும். அது ஒன்று தான். ஆனால் நன்கு குழைந்துவிடுவதால் கசப்பு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வல்லாரையில் துவையல் தான் செய்து இருக்கேன். கூட்டு இப்ப தான் உங்க ரெசிபி பார்த்து தான் செய்ய போகிறேன். ஆமாம் அக்கா வல்லாரை நல்ல நியாபகம் சக்திக்கு உதவும்.
எங்க அம்மா என் தம்பிக்கு டெய்லி காலையிலயும் மாலையிலயும் 4 இலைகள் கொடுத்துகிட்டே இருப்பாங்க. அவன் சும்மாவே சாப்பிட்டுடுவான். மாமா அத பார்த்துட்டு அம்மாவ கிண்டல் பண்ணுவாங்க பார்த்துக்கா உன் பையனும் நிறைய வல்லாரையா கொடுத்து போன ஜென்மத்து நியாபகம்லாம் வந்துட போகுதுனு. (சும்மா இந்த நிகழ்வ பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு அதான், இங்க சொன்னத்துக்கு சாரி)

யாழினி.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் ரொம்ப நன்றிப்பா. கண்டிப்பா செய்து பாருங்க.. உங்க பின்னுாட்டத்த பாத்து ரொம்பவே ரசிச்சேன். என்ன ஒரு டைமிங் காமெடி.. உங்க மாமா கரெக்டா தான் உங்க அம்மாவை கேலி பண்ணிருக்கார். சாரியாவது பூரியாவது. அதெல்லாம் கேட்டா நம்ம கவிசிவா ஸ்டைல்ல எனக்கு சாரி எல்லாம் வேண்டாம் ஒரு நல்ல saree எடுத்து கொடுத்துடுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வல்லாரை கீரையை நான் துவையல் தான் செய்வேன் . இனிமேல் இந்த கூட்டு முறைஉம் செய்திட வேண்டியது தான். மிக்க நன்றி

shagila

ராதா அக்கா ,
நல்ல குறிப்பு ...எனக்கு கிடைக்காத கீரை...
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா