விநாயகர் தொட்டில்

தேதி: September 24, 2010

5
Average: 4.1 (21 votes)

 

வளையல் - 2
உல்லன் நூல் - நீலம் மற்றும் பிங்க் நிறங்கள்
காலி தீப்பெட்டியின் உள்பெட்டி - ஒன்று
ஏதாவது சிறிய பொம்மை சிலைகள்
வெல்வெட் துணி
பெவிக்கால்
கோல்டுநிற கம்பி மற்றும் மணிகள்
கோல்டுநிற பூக்கள்
ஸ்டோன்கள்

 

வளையலை கொண்டு தொட்டில் செய்ய தேவையானப்பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வளையல் சிறிது பெரிய அளவாக இருக்க வேண்டும்.
வளையலில் நன்கு முடிச்சுப்போட்டு கொண்டு நூலை நெருக்கமாக சுற்றவும். இரண்டு வளையலிலும் நீலநிற நூலை சுற்றி முடிக்கவும். அதன் பிறகு நீலநிற நூல் சுற்றிய வளையலின் மேல் பிங்க்நிற நூலை கால் இன்ச் இடைவெளி விட்டு சுற்றிக் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
வெல்வெட் துணியை 8 செ.மீ அளவில் சதுரமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தீப்பெட்டியின் அடிப்பாகத்தில் பெவிக்கால் தடவி வெல்வெட் துணியின் நடுவில் ஒட்டவும். பிறகு வெல்வெட் துணியின் நான்கு முனையையும் படத்தில் உள்ளது போல் நறுக்கிக் கொள்ளவும்.
துணியின் ஒவ்வொரு பக்கத்திலும் பெவிக்கால் தடவி தீப்பெட்டியின் ஒரங்களில் மடித்து ஒட்டவும்.
இப்போது தீப்பெட்டியின் உள்பக்க அளவுக்கு வெல்வெட் துணியை நறுக்கி எடுத்துக் கொண்டு பெவிக்கால் தடவி தீப்பெட்டியின் உள்ளே ஒட்டி விடவும்.
இரண்டு வளையலிலும் முடிச்சுப் போட்ட பக்கத்தை ஒரு பக்கமாக கொண்டு வந்து, இரண்டு வளையலையும் சேர்த்து நீலம் அல்லது பிங்க்நிற உல்லன் நூலினாலே நன்கு இறுக்கமாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
10 செ.மீ அளவில் கோல்டுநிற கம்பி நான்கு துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். ஊசியால் வெல்வெட் துணி ஒட்டிய தீப்பெட்டியின் நான்கு மூலைகளிலும் விட்டு துளைகள் செய்யவும். பின்னர் கம்பியை வெளிப்பக்க துளையினுள் விட்டு உள்பக்கமாக கம்பியை கொண்டு வந்து அதனை அப்படியே வளைத்து வெளிப்பக்க துளை இருக்கும் இடத்தில் நன்கு அழுத்தி மடக்கி வைத்து விடவும். இதேப் போல் ஒவ்வொரு மூலையிலும் கம்பியை கோர்த்து வைக்கவும். இப்போது தீப்பெட்டியின் இருப்புறங்களிலும் கம்பி முன்புப்பக்கம் 7 செ.மீ அளவில் நீட்டிக் கொண்டிருக்கும். அதில் கோல்டுநிற மணி அல்லது இட்லி மணியை ஒவ்வொரு கம்பியிலும் 3 மணிகள் கோர்த்துக் கொள்ளவும்.
முடிச்சுப்போட்ட இரண்டு வளையலின் பக்கவாட்டில் கம்பி சுற்றிய தீப்பெட்டி உள்ளே நுழையும் அளவிற்கு விலகி வைத்துக் கொள்ளவும். இருவளையலையும் இணைத்த இடத்தில் முடிச்சு தெரியாமல் இருக்க கோல்டுநிற பூக்கள் அல்லது ஸ்டோனை ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு தீப்பெட்டியின் முன்புப்பக்கம் உள்ள இரண்டு கம்பியை முதல் வளையலில் சுற்றி விடவேண்டும். அதாவது நடுவில் ஸ்டோன் ஒட்டிய இடத்திலிருந்து வலது, இடது பக்கம் ஒரு செ.மீ அளவு தள்ளி இந்த கம்பியை வளையலில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின்பக்கம் உள்ள வளையலிலும் இது போல் செய்துக் கொள்ளவும்.
பின்னர் கம்பிகள் சுற்றிய இடத்தில் விரும்பிய ஸ்டோனை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். எளிமையான, அழகான விநாயகர் தொட்டில் ரெடி.
இந்த தொட்டிலின் உள்ளே உங்களுக்கு விருப்பமான சிறிய சிலைகளும், வளையல் இணைத்த இடத்தில் கோல்டுநிற ஸ்டோனில் மேல் சிறிய ரோஸ் பூவை வைத்து அலங்கரிக்கலாம். நவராத்திரி கொலுவிற்கு இதுப்போல் செய்து கொலுப்படிகளில் வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை

சும்மா இருக்கும் பொருளை வைத்து என்னமா யோசிக்கறாங்க.. ;)

உள்ளே இருக்கும் கிட்டு அழகு. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ் சூப்பரா இருக்கு விநாயகர்தொட்டி. ஃப்ரண்ட்சுக்கு கிஃப்ட் பண்ணலாம்.

Don't Worry Be Happy.

விநாயகர் தொட்டில் அழகோ அழகு. அறுசுவை டீம் சகலகலா வல்லிகள்தான். வாழ்த்துக்கள்.

சிறிய வேண்டுகோள் விநாயகர் தொட்டி என்பது என்னவோ போல் உள்ளது. விநாயகர் தொட்டில் அல்லது விநாயகர் ஊஞ்சல் என இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த பொருட்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது,செய்முறையும் சுலபமாக உள்ளது, உடனே செய்து பார்த்துவிடுகிறேன்.
நன்றி அறுசுவை டீம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அருமை +அழகு+ அட்டகாசம் வாழ்த்துகள் அருசுவை டீம்

எளிமையான பொருட்களை வைத்து அழகிய கைவண்ணம் மிகவும் அழகு

மிகவும் அழகாக இருக்கிறது. பாரட்டுக்கள்.

அப்பாடி ராதாக்கிட்ட எல்லா பொருளும் இருக்கு. அதுனால உடனே செய்துபார்த்துடவேண்டியது தான். (இதையாவது செய்வியா,,.. இல்ல இதுவும் சும்மா பில்டப் தானா?.......) என்கிட்ட இதுல சொல்லிருக்கற பொருள் எல்லாமே இருக்கு. அறுசுவை டீம் கலக்குறீங்கப்பா.... எப்படி தான் யோசிக்கிறீங்களோ........ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.....வாழ்த்துக்கள். அழகோ அழகு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வணக்கம்,
எளிமையான பொருட்களை கொண்டு செய்துள்ள விநாயகர் தொட்டில் மிகவும் அழகாக உள்ளது.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

புள்ளையார் தொட்டில் நன்னாருக்கு!

அதே மாறி புள்ளையார் சுழி போடர நேக்கும் ஒரு தொட்டில் பண்ணி குடுத்துடுங்கோ!

இல்லாட்டி புள்ளையார் அம்மாச்சி கண்ணை குத்திடுவார்!ஜாக்கிறதை!

செஞ்சு வைங்கோ! நேர வர போது வாங்கிக்கறேன்!

( நாகை பட்னத்துக்கு வரனும்னு 2 பேர் கூப்டுருக்கா!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வளையலை வைத்து கடவுளிற்குத் தொட்டிலே கட்டலாமா.. அடடே அருமை!
உருவாக்கியவருக்கு நல்ல கற்பனைவளம்.. வாழ்த்துக்கள்..

thotil romba supera iruku.