திருட்டுப்போன நாட்கள் - ரஹீமா பைஷல்

திருட்டுப்போன நாட்கள்

கணக்க சிநேகிதிகளின்
சங்கதிகள்
இப்படித்தான் இருக்கிறது.....

உன் திருமண நாளில்
உன்னோடு இருக்கமுடியாமல் போன
துயரங்களின் வலி....
யாரிடமும் பகிரப்படாமல்
பத்திரமாய் இருக்கிறது.....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

நேரம் இருந்தாலும்...
அழைத்து வர
வாப்பவுக்கோ ;
சகோதரர்களுக்கோ;
நேரம் வாய்க்காமலேயே....
நாட்கள் தொலைகிறது...!!!

எப்படியிருக்கிறாய்!!
என்றறிய....
எப்போதும்
பதறிக்கிடக்கிறது மனசு !!!

வகுப்பறையில்
என் பக்கத்து இருக்கையில்
எப்போதும்
நீயே அமர்ந்திருப்பாய்....

என் பிறந்த நாள்
பரிசாய்
நீ கொடுத்த 'பேப்பர் வெயிட்'டின்
அடியில்
இப்போதும் சிக்கியபடி இருக்கிறது
உன் நினைவுகள்!!!!

இப்போது எப்படியிருக்கிறாய்?

காற்றடிதாலே உடையும்
ஊசிக்குழல் போலவேதான்
இப்போதும் இருக்கிறாயா?

அடையாளம் இல்லாமல்
கொளுத்திருக்கிறாயா?

ஒன்றாய் திரிந்த
நமது வகுப்பறைகள்....
சண்டை போட்டு
உன் புத்தகத்தில் போட்ட
கிறுக்கல்கள்...

நான்
பேசவில்லை என்பதற்காய்
வடித்த கண்ணீர் துளிகள்
நினைவிருக்கா??

இப்போது எங்கிருக்கிறாய்?

உன் குழந்தைகளின்
கலவரத்தில்....
நான் நினைவிலிருப்பது
நிச்சயமில்லை...

நாமிருவர் அமர்ந்தபடி
மரத்தடியில் எடுத்த புகைப்படம்
இப்போது
எப்படியிருக்கிறது......

இப்படித்தான்
ஒரு புகைப்படத்தில்....
ஒரு ஆட்டோக்ராபில்
முடிந்து விடுகிறது
நம் சிநேகிதம்....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

என்றாலும் - நீ
மிக மிக பத்திரமாய்
என் மனசிலிருக்கிறாய் !!!

- ரஹீமா பைஷல்

Comments

அழகான வரிகள் ரஹிமா....
மனதை பாரமாக்கிவிட்டது. ஒவ்வொரு வரிகளிலும் உண்மை பதிந்திருக்கிறது. கண்டிப்பாக இது முதல் கவிதை கிடையாது. அனுபவமுள்ளவர் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்....

தொடர்ந்து பல கவிதைகள் வழங்க வேண்டும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்லாமு அலைகும் ரஹிமா என்னோட ஸ்கூல் லைப் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அருமையான கவிதை வாழ்துக்கள் தொடரட்டும் இப்பனி

Admin அண்ணா,
எனது கவிதையை பிரசுரித்தமைக்கு நன்றிகள்

அன்புடன்

றஹீமா பைஷால்

உங்கள் கருத்தை பார்த்த பின்னர் தான் எனது கவிதை பிரசுரமானதை அறிந்தேன்.
அனுப்பி நெடுநாட்கள் என்பதால் மறந்துபோனேன்....
இது எனது முதல் கவிதை அல்ல,
அறுசுவைக்கான முதல் கவிதை.
பாடசாலையில் ,பல்கலைகழக magazin,கவிதைக்கான வலைப்பூக்களில் எழுதியிருக்கிறேன்.

அன்புடன்

றஹீமா பைஷால்

வ'அலைக்குமுஸ்லாம் வரஹ்....
இது கூட என்னோட 'ஸ்கூல் லைப் தானே......'
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாத்திமா!

அன்புடன்

றஹீமா பைஷால்

//காற்றடிதாலே உடையும்
ஊசிக்குழல் போலவேதான்
இப்போதும் இருக்கிறாயா?// இந்த வரிகள் என் தோழி தொலை பேசியில் என்னிடம் பேசும் போது இப்படி தான் கேட்பாள். அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

எனது தோழி Zeeniah க்காக எழுதிய கவிதைதான் இது.
பார்க்க ஊசிக்குழல் போலதான் இருந்தாள்
இப்போது எப்படி என்று தெரியவில்லை...

அன்புடன்

றஹீமா பைஷால்

ரஹீமா
நீங்காத நினைவுகள்
அழியாத அழைப்புகள்
எண்ணத்தில் எழுந்தவை
மீண்டு(ம்) வருமா?!
வாழ்த்துகிறேன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

ரஹீமா

நல்ல கரு கொண்ட கவிதை .. அனைத்து பெண்களின் மனதிலும் ஓயாமல் உலவிக் கொண்டிருப்பது.. ;)

பழைய கால நாட்களை நினைவுபடுத்தியது ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்காத நினைவுகள்
அழியாத அழைப்புகள்
எண்ணத்தில் எழுந்தவை
மீண்டு(ம்) வருமா?!

கனவுகளால் மட்டுமே;
கடந்த காலங்கள் மீது....
நடந்து பார்க்கலாம்..!!

நன்றி தேன்மொழி

அன்புடன்

றஹீமா பைஷால்

வெறுமனே வாசிப்போடு மட்டும் செல்லாமல்
கருத்துக்கள் மூலம் என்னை ஊக்கப்படுத்தும் அத்தனை, முகம் தெரியா தோழிகளுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளமாக்கும்

அன்புடன்

றஹீமா பைஷால்

அஸ்ஸலாமு அலைக்கும்!

ரஹீமா சகோதரி..கவிதை நன்றாக இருக்கிறது.

///ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை///

இந்த வரி ரொம்ப கவர்ந்தது..நான் ஆண் வர்க்கம் என்பதால் அல்ல..சில தோழிகளிடம் எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் அது.நீங்கள் உங்கள் கவிபணியை தொடர என் வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வ'அலைக்குமுஸ்லாம் வரஹ்....
உங்களுடைய கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்....
உங்களை போன்றவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்
என்னை மேலும் வளர்த்துவிடும்....
நன்றிகள் சகோதரர் ஷேக் ....

அன்புடன்

றஹீமா பைஷால்

அழகான கவிதை ரஹீமா..... பெண்ணின் நட்பு ஒருகாலம் வரைதான் என கூற தொடுத்திருக்கும் வார்த்தைகள் அருமை... மேலும் எழுதுங்கள்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ரெங்கா ....

அன்புடன்

றஹீமா பைஷால்

திருட்டு போன கவிதை சுப்பர் ரஹீமா,

அதில் தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!

உங்கள் மற்ற கவிதைகளையும் இங்கே கொடுங்கள்.ஆவலாகவுள்ளோம் படித்து சுவைக்க.
மேன்மேலும் வளர எனது பாராட்டுக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்களைப்போன்ற தோழிகள் பாராட்டும்போது
கண்டிப்பாக இன்னும் எழுத வேண்டும்போல இருக்கிறது ....
நன்றி yogarani.

அன்புடன்

றஹீமா பைஷால்

//ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை....// இந்த வரியை படிக்கு போதும் கம்ப்யூட்டர் சார் சொன்னது. பெண்களோட நட்பு அவங்க படிப்புலேயேயும், கல்யாணத்தோட முடிஞ்சுடும்னு. ஆண்கள போல அவங்க நட்பு இருக்காதுனு. சரியா சொல்லி இருக்கீங்க. அழகான கவிதை ரஹீமா. நீங்களும் மற்றவர்களை போல நிறைய கவிதைகள் எழுதிட வேண்டும்.

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்

றஹீமா பைஷால்

ரஹீமா உங்கள் கவிதை மிகவும் அழகு.

//வகுப்பறையில்
என் பக்கத்து இருக்கையில்
எப்போதும்
நீயே அமர்ந்திருப்பாய்....//

இந்த வரிகள் என் தோழிகளை நினைவுபடுத்தி விட்டது.
தொடர்ந்து நிறைய கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

வாழ்துக்களுக்கு நன்றி நித்யா!

அன்புடன்

றஹீமா பைஷால்

assalamu alaikkum raheema. appadiye enakkaha en friend eludiyadu pol ulladu.marakkamudiyaza potograp ninaivuhalum,autograpvasahankalum. innamum kanneerai varavalithukkondu.... innumoru shesdi my sweet daughters name aiso raheema.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சந்தித்துக்கொள்ளாத தண்டவளம் போன்ற பொழுதுகள்தீரும்வர என் கண்ணீரும் காணது கரய் என்றொழியும் பிரிவென்ற மொளனத்திரய் மீண்டும் தளிர்ப்பதெப்போது நட்பென்ற பசுந்தரய் குரயாது ஸ்னேகம் தோன்றினாலும் நரய் அழகிய நம் நட்புஎன்றுமே மூன்றாம் பிறய் poongkatru.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உன் வார்த்தை வரிகளில் உன் வாழ்க்கை வலிகளைப் புரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை எனக்கு poongkatru

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

pls help how can i send poem for this page.poongkatru

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வஅலைக்குமுஸ்ஸலாம்,
இன்றுதான் உங்கள் கருத்துக்களை வாசித்தேன்....
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.
வாசித்து உணர்வு பூர்வமாக கருத்திட்ட உங்களுக்கு நன்றிகள்....
உங்கள் மகள் பெயரும் ரஹீமாவா ?
மிக்க சந்தோஷம். ரஹீமாவுக்கு எனது ஸலாத்தை கூறுங்கள்....
உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது ...
உங்கள் உண்மையான பெயர் என்ன ???

அன்புடன்

றஹீமா பைஷால்

அறுசுவை இல் ஆகவும் கீழ் பகுதிக்கு செல்லுங்கள் .
அதில்

-முக்கிய பிரிவுகள்,
-மன்றம்
-மகளிர் பகுதி
-சிறப்பு பிரிவுகள்
-அறுசுவை

இதில் ''அறுசுவை'' எனும் பிரிவின் கீழ்
click on ''தொடர்புகளுக்கு'' and change ur category.
thn type or coppy paste ur poem inside the box ''message''

அன்புடன்

றஹீமா பைஷால்

சலாத்தைச் சொன்உடனே உதவிட்ட உங்களுக்கு என் நன்றிகள். என் மகளும் தனது னாள். மகளுக்கு 5வயது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தயவு செய்து மீண்டும் உதவுங்கள்.message sent
என்று வருகின்ற்து ஆனால் அறு சுவையில் காணமுடிய்வில்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சகோதரி,
கருத்துகளைப் போன்று கவிதைகள் ,உடனே வெளியிடப்படாது....
கொஞ்சம் தாமதிக்க வேண்டும்.
பொறுமையோடு இருங்கள்,
இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக வெளிவரும்....

அன்புடன்

றஹீமா பைஷால்