நான்ஸ்டிக்-அபாயம்

தோழிகள் கவனிக்க,
நாம் பயன்படுத்தும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் புசபடும் ரசயனம் நம் உடலுக்கு கெடுவிளைக்கும் என சமித்திய ஆய்வு தெரிவிக்கிறது.எனவே முடிந்தவரை நான்ஸ்டிக் பொருளை தவிர்ப்போம்.

வாழ்க வளமுடன்
பானு அரசு

பானு, நானே இதை பத்தி ஒரு இளை தொடங்கணும் நு இருந்தேன். மிக ஆபத்தான ஒரு விஷியம். 3-6 மாதம் தான் உபயோக படுத்தனும். அப்படினு டாக்டர்ஸ் சொல்றாங்க, ஏன்னா அதுல இருக்கற chemicals வெளிய வர தொடங்குமாமா, அது நம்ம food ல மிக்ஸ் ஆகி உடல் உபாதைகள் நிறைய வரும் நு சொல்றாங்க.. எவளோ பணம் போட்டு, நல்ல brand வாங்கினாலும், குறிப்பிட்ட நாளுக்கு மேல உஸ் பண்ண வேண்டாம் தோழிகளே. காசு குடுத்து நோய் சம்பாரிக்கனுமா???? யோசிக்கலாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நா எப்போதுமே நான்ஸ்டிக் உபயோகிக்கறது கிடையாது....... ப்ரை பண்ணனும்னா இரும்ப வாணல் தான்... என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் கூட கிண்டல் பன்னுவாங்க.... இவ்ளோ மாடனா ஆயிட்ட எல்லாமே மாரிடிச்சு.... ஆனா இன்னமும் இந்த வாணல் அப்படின்னு பழசையே கட்டிகிட்டு அழரயே ந்னு சொல்வாங்க....எப்போதுமே பழசுக்கு மவுசு தான்பா..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நாள் பட்ட நான் ஸ்டிக்கில் சமைக்கும்போது எண்ணையோ, பாலோ போட்டு செய்யும்போது chemicals உடன் சேர்ந்து fat content அதிகமாகி விடுமாம்.

ம்ம்ம் நான் ஸ்டிக் பாத்திரங்கல் ரொம்ப நாள் யூஸ் பண்ணும்போதுதான் பிரச்சினை வரும். பெஸ்ட் எப்பவுமே நம்ப இரும்பு வாணலிதான். அலுமினியத்துக்கும் குட்பை சொல்லிடுங்கப்பா.

அந்த காலத்து உருளியில் செய்தால் இன்னும் நல்லா இருக்கும். எல்லாத்தையும் விட பெஸ்ட் மண்பாத்திரங்கள்.

மீன் குழம்பு வைக்கணும்னா எனக்கு மண்சட்டிதான் வேணும் :). குழம்பும் அதில் வைத்தால் தனி ருசிதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம் மண் பாத்திரம் தான் பெஸ்ட் அன்ட் TASTE

வாழ்க வளமுடன்.
பானு அரசு

நான் ஸ்டிக் பாத்திரம் யூஸ்பண்ணும் போதுhigh flameil வைக்க கூடாது,வெறும் பாத்திரத்தையும் ரொம்ப சூடேற்ற கூடாது.

நிஜமாகவே நான் ஸ்டிக் பயன்படுத்தினால் நமக்கு நல்லதில்லையா? எனக்கு இவ்வளவு நாள் தெரியாதே :(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான்ஸ்டிக் கடாயில் வட சுடலாமா? நான் தெரியாம மூன்று தடவை வட பன்னிட்டேன். சில்வெர் பாத்திரத்தில் வட சுட்ட்டால் என்னை ஓவர்ரா ஹீட்டாகிவிடுகிறது அதான் இப்படி பன்னிட்டேன் யாராவது சொல்லுங்கப்பா?

ஹைஹையோ இது தெரியாம நான் இப்ப தான் ஃபுல் ல நான் ஸ்டிக்கா வாங்கி வச்சிருக்கேன் பா என்ன பன்றது

மேலும் சில பதிவுகள்