என் சகோதரிக்கு உதவவும்,

நான் ரொம்ப நாளா அறுசுவைப் பக்கம் வரவில்லை. மன்னிக்கவும் இப்போ அவசரமாக ஒரு சந்தேகம், என் தங்கைக்கு குழந்தை பிறந்து மூன்றே மாதங்கள் ஆகிறழ்து குழந்தைக்கு 4மாதம் நடக்கிறது. எங்கள் அம்மா இங்கே இருப்பதால் sister என் கூடத்தான் இருக்கிறாள், குழந்தை அவளிடம் தாய்ப்பால் குடிப்பதில்லை, ஆஸ்பத்திரியில் பழக்கி விட்டார்கள் இவளும் எவ்வளவோ முயற்cஇ செய்தும் பலனில்லை தாய்ப்பால் கண்டிப்பாக அவளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக தினமும் 4 வேளை பம்ப் பண்ணி அதிகமான பாலை freezerl வைத்து பின் fridgel லிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சூடு காட்டி கொடுக்கிறாள், இவ்வளவு நாள் பாப்பா அதைத்தான் குடித்த்தது, ப்ரொப்லெம் ஒன்றும் இல்ல்லை முதல் 2 மாதத்துக்கு motion அடிக்கடி போகும், எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ளது போல் ஆனால் இப்போ ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் போகிறது, அது கூட பிரccஇனை இல்லை, இப்போ ஒரு 4 நாஅட்களாக அவல் பால் பாட்டில் ரப்பரை வைத்தாலே துப்புகிறாள் குடிக்க மாட்டேன்றாள், தங்கccஇ ஒரு 2 நாட்களுக்கு முந்தி 2 உலர்ந்த திராட்சையை ஊறப் போட்டு காலையில் அதைப் பிழிந்து அந்த நீரை பாப்பாவுக்குக் regularly கொடுதிருக்கிறாள், ஆனால் ஒருவேளை பாப்பாவுக்குச் செரிக்காமல் தான் பால் ஒழுங்காக குடிப்பதில்லையோ என்று 2 நாட்கள் இப்போது கொடுக்க வில்லை. ஆனாலும் பாப்பா ரப்பரைச் சப்புகிறது, விளையாடுது, பசிச்சு பால் குடிப்பதில்லை, அறுசுவையில் தான் படித்து himalayas bonnison drops நான் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன் மூன்று வேளையிம் 2.5 ml தினமும் கொடுக்கிறாள் அப்படியும் பாப்பா பால் ரப்பரைத் துப்புகிறாள், தள்ளுகிறாள் ஆனால் பாப்பா active அகத்தான் இருக்கிறாள், ஏனென்றால் குடிக்கவில்லை என்றதும் சங்கில் கொஞ்சம் கொன்சம் மாக பால்லை கட்டாயப்படுத்தி தள்ளுகிறாள் பாப்பா பாவம் அழுது அழுது பாலைத்தள்ள வேண்டியிருக்கிறது, இதற்கு என்ன செய்ய? அனுபவ சாலிகள் சொல்ல முடியுமா? என்க்கே ரொம்ப பாவமாய் இருக்கிறது அவள் படும் பாட்டை பார்த்தால், டாக்டரிடம் காஅண்பிச்சாஅல் some babies like this u must encourage to drink அப்படித்தான் சொல்கிறார், அவள் குடுப்பது சரியா, தயவு செய்து அவசரமாக சொல்லுங்கள், அவள் ஒரு ஒன்னும் தெரியாமல் பயப்படுகிறாள், எங்களுக்கும் தெரியவில்லை

கவலைப்படாதீா்கள் தோழி.. சில குழந்தைகள் அப்படித்தான் செய்யும். என்பையனும் பால் குடிப்பதற்கு மிகவும் படுத்தியுள்ளான். குழந்தை ஆகடிவ்வாக இருந்தால் நீங்க எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு விளையாட்டு குணம் வந்துவிட்டால் இப்படிதான் படுத்தும். போக போக சரியாகிவடும். குடிக்கவில்லை என்றால் அழுதாலும் பரவாயில்லை என்று சங்கில் வைத்து புகட்டுங்கள். அது ஒன்றும் தவறில்லை. குழந்தை அழுதால் ஒன்றும் பயப்பட வேண்டாம். டாக்டரிடம் காண்பித்து அவரும் பயப்படும்படி ஒன்றுமில்லைஎன்று கூறிவிட்டாரல்லவா... கவலை வேண்டாம். வேண்டுமென்றால் ஓமம் வாட்டர் வாங்கி கொடுக்கலாம். பசி எடுக்கும். எனக்கு தெரிந்தவரை இவ்வளவே.. நமது தோழிகள் தெரிந்ததை வந்து கூறுவார்கள். அல்லது 4 மாதம் ஆன குழந்தைக்கு வேறு ஏதேனும் உணவு கொடுக்கலாம் என்றால் அதாவது கஞ்சி அல்லது எதாவது ஒரு காய் அல்லது பழம் வேக வைத்துகொடுங்கள். செரிலாக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். கவலை வேண்டாம். இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. தோழிகள் வந்து கண்டிப்பாக பதில் கூறுவார்கள். காத்திருங்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குழந்தைக்கு மோஷன் சரியாக போகவில்லையென்றாலும் பசி சரியாக இருக்காது..இருந்தாலும் குழந்தைகளை பொறுத்தவரை மலசிக்கல் ஒரு பெரிய ப்ரச்சனையே அல்ல..அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள் என்றால் இது விஷயமே இல்லை.வெதுவெதுப்பாக தண்ணீர் அடிக்கடி கொடுத்து பாருங்க.பாலை ஸ்பூனால் கொடுத்து பாருங்க...எல்லா குழந்தைகளும் இப்படி கொஞ்ச நாள் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பார்கள்...கொஞ்சம் விட்டுப் பிடித்தால் தானே சரியாகிவிடும்...ஓரிரு வாரம் போனால் மெல்ல பழையபடி குடிக்க தொடங்கும்.ஆனால் கட்டாயப்படுத்தி பாலை உள்ளே அழுக அழுக தள்ளாதீர்கள் அப்படியே குழந்தைக்கு வெறுப்பாகிவிட்டால் பிறகு சாப்பிட கொடுப்பது கஷ்டம்...பசித்தால் எந்த ஜீவனும் சாப்பிட்டே ஆக வேண்டும்...சில நாளில் சரியாகி விடும்...குழந்தையின் காலை அடிக்கடி சைகில் ஓட்டுவது போல் செய்து கொண்டே இருங்கள்.

ஹாய் தோழி பயப்பட தேவை இல்லை சுக்கை சுட்டு அதை பொடி செய்து சிறிதளவு தேனில் கலந்து நாக்கில் தடவவும் சிறிது நேரம் கழித்து வென்னீர் குடுக்கவும்

முதலில் பிரீசரில் வைத்த நேரிடையாக சூடு செய்ய கூடாது. ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் பாலை வைத்து தான் சூடு செய்ய வேண்டும். சில குழந்தைகள் இப்படி தான் சில நாள் மக்கர் செய்யும். பிறகு சரியாகும். அதற்காக முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம் அதே சமயம் ரொம்பவும் மல்லு கட்ட வேண்டாம். அப்புறம் தளிகா சொன்னது போல் அவர்களுக்கு அது பிடிக்காமல் போய் விடும். உங்கள் தங்கையை விடாமல் பம்ப் செய்ய சொல்லுங்க. நேரியிடையாக பால் புகட்ட சொல்லுங்கள். முயற்சி செய்து பாருங்கள். யாரு கண்டா இப்போ குடிக்கலாம் இல்லையா????

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

6 mths varai mother food or other milk thavira kulandhaiku ethum kuduka koodathu..kulandhai vera taste parthuta milk kudikathu.2 mths varai 2 hrs la pasikum.4 mths ayitathala avanga eyeku things theriudhu so,vilayata kudika matanga.pasicha ava milk kudikama poga mata.ava aludha mattum kudunga.time 4 hr7 kuda intreval vidunga.cerelac,bonnisan ithu elam avoid panunga.dry grapes thanni vendam..bottle rubber change panunga weekly once.ore brand bottle rubber use panunga..ava motion pogathathu ela baby pola normal than.
Ur7
Meena

என் பையனும் இப்படித்தான் இருந்தான். கிரைப் வோடர்விட நல்லது இன்fபகூல் (infacool)இதுக்கு குழந்தைக்கு வயித்துல என்ன பிரச்சின இருந்தாலும் சரியாகிடும்.tryபன்னி பாருங்க.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

hai Rajasentha,

dont worry,some baby epadethan panuvaaga,baby ku naalaa water kudogaa,

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

some times the baby makes trouble,but don't worry.

don't boil the mother milk.eppa pillai alugutho appa milk tharavum.nalla paci eddukkum varai play pannaviduggal.pillai sleeping time don't distrub.

some people nadu naduvey ellupi milk tharuvaggal,athu thppu.pillai eppa
thuggi elugthirukkutho appa tharavum. naan appadithan follow pannukiren.

நன்றி ராதா ஹரி, ஓமம் கொடுக்கலமா? எப்படிக் கொடுக்கனும்? எப்போது கொடுக்கனும், தங்கச்சி ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் கொடுக்கனும்னு குறிக்கோளுடன் இருக்கிறா. குழந்தை direct கக் குடித்தால் 1 வருடத்துக்கு கொடுக்கலாம், முதலில் இவளுக்க்குப் பால் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாள், அறுசுவையில் நான் தான் பார்த்து தாய்ப்பால் சுரக்க வழு சொன்னேன் இப்போது எவ்வளவோ பர வாயில்லை ஆனால் குழந்தை சரியாக பால் குடிக்க மாட்டேன்றாள். நீங்காள் லெல்லாம் சொன்னது எனக்கு ஓரளவு உதவியாக இருக்குது, நான் அவளிடம் சொல்லியிருக்கேன், அவள் ரொம்ப கவலைப்படுகிறாள் அவள் young mother ரொம்ப நன்றிப்பா.

senthamilselvi

தாளிகா நன்றிப்பா, motion கூட 1 நாள் போகலைனா டாக்டர் dhphalac நு ஒரு medicine கொடுத்திருக்கிறார், அதைத்தான் கொடுத்துப் போக வைக்கிறாள்.,தண்ணீர் காலை 20ml, மாலை 20ml கொடுக்கிறாள். ஆனாலும் அப்படித்தான், குழந்தயின் காலை சக்கிள் ஓட்டுவது போல் செய்யச் சொல்கிறீர்கKஏ அது exercise தானே? மற்றபடி நன்றிப்பா, அவளுக்கு நாந்தான் அறுசுவையில் உள்ள விஷயங்களைச் சொல்லி கொடுப்பேன். ரொம்ப நன்றிப்பா, ஆனால் மேற்கொண்டு எனக்க்குச் சொல்லுங்கப்பா.

senthamilselvi

மேலும் சில பதிவுகள்