கோபத்தை கன்ட்ரோல் பண்றதுக்கு வழி சொல்லுங்க தோழிகளே....

என் இயற்கை சுபாவமே சீக்கிரம் கோபம் வந்து விடும். நானும் எவளவோ முயற்சி செய்து கம்மி பண்ணி கொண்டு இருக்கிறேன்.என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் மிகவம் நன்றாக பார்த்து கொள்வர். அவரு பிசினஸ் செய்யறனால கொஞ்சம் பிஸி ஹ இருப்பார். சில நேரங்களில் வெளியில் செல்லும் போது, அந்த நாள் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நான் நினைக்கறேன். எப்போதாவது தான் நேரில் பார்க்கிறோம், அதனால் அவர் எனக்காக இருக்க வேண்டும் என்று நான் நினைத்து, நிறைய எதிர்பார்ப்பேன்.

அந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்று, முந்தைய நாளே plan பண்ணி இருப்பேன். மறுநாள் அதில் ஏதாவது மாற்றம் வந்தாலோ, இல்லை அவருக்கு வேலை காரணமாக பாதியில் செல்ல வேண்டிய நிலைமை வந்தாலோ , என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோபம் அதிகமாக வந்து விடுகிறது. ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட என்மனம் , ஏற்க மறுக்கிறது. அவரிடம் சண்டை போடறேன், அவருக்கும் கோபத்தில் பேச பிரச்சனை பெருசாகுது. அவரும் ஒரே வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பிடுவார், " நான் எவளோ பண்ணுனாலும் உன்ன மட்டும் திருப்தி படுத்த முடியாது".அவரு கேட்பாரு, நீ நினைச்சது மட்டும் நடக்கணும், வேற ஒன்னுமே உனக்கு முக்கியம் கிடையாது. இந்த வார்த்தை கேட்கும் போது, சேச்ச ஏன்டா சண்டை போட்டோம் நு தோணும்.

என்னை விட அவருக்கு கோபம் ரொம்ப வருது. சண்டை வந்தா 3-4 மாசம் பேச மாட்டார். நான் எவளோ சொன்னாலும் பேசமாட்டார். அவரா மனசு மாறி பேசுனா தான்.என்னைய நான் எப்படி பக்குவ படுத்திகறது?? சில நேரங்களில் யோசிக்காம வார்த்தை விட்டறேன், பின்னாடி ரொம்ப கஷ்டமா பீல் பண்றேன்.

நான் எப்படி என்னை மாத்திக்கறது??? அவர எப்படி மாத்தறது??

பழைய இழையில ஹைஸ்னு ஒரு அண்ணா சூப்பரா சொல்லியிருப்பாங்க. கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க. இல்லைனா எனக்கு டைம் கிடைக்கும் போது லின்க் எடுத்து போடறேன்.
தோழிஸ் எல்லாம் நிறைய ஐடியா வச்சிருக்காங்கபோல வந்து சொல்லுவாங்க கவனமா கேளுங்க;)

Don't Worry Be Happy.

சுகந்தி இது நீங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சினை இல்லை. நான் உட்பட பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான்.

வேலையில் இருக்கும் போது எப்போது என்ன வேலை வரும் என்று சொல்ல முடியாது. பிசினஸ் செய்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்த விஷயத்தில் நாம் அவர்கலை குறை சொல்லியோ கோபப்பட்டோ எந்த பிரயோஜனமும் இல்லை. முதலில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

ப்ளான் பண்ணும் போதே இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு என்பதை மனதின் ஓரத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கிறதோ அதே போல் ஆசைகள் அவர்களுக்கும் இருக்கும். அவர்களும் வேண்டும் என்றே செய்வது இல்லைதானே!

இன்னொன்று நம்மோடு இருக்கும் போது நம்மைப் பற்றியே யோசிக்கணும்னு ரொம்பவெல்லாம் ஆசைப்படக் கூடாது :). பெண்கள் நாம் இப்படி உருகறோமே அவர் மட்டும் கண்டுக்க மாட்டேங்கறாரேன்னு நினைச்சா கஷ்டம்தான். ஏன்னா பல ஆண்களுக்கும் தாங்கள் உருகுவதைக் கூட வார்த்தைகளிலோ நம்மோடு இருக்கும் நேரங்களிலோ கூட உணர்த்தத் தெரியாது.

ஆண்களைப் பொறுத்தவரை நாம் அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கம். ஆனால் பெண்கள் எப்போதுமே கணவனுக்குப் பின் தான் மற்ற எல்லாம் வாழ்க்கையே அவர்தான்னு ரொம்ப எமோஷனலா உருகறது எல்லாம்.

இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டா கோபம் வராது வந்தலும் கண்ட்ரோல் பண்ண முடியும்.

நானும் நீங்கள் இப்போது இருக்கும் நிலையை கடந்து வந்தவள்தான். இப்போது பெரிதாக ஏமாற்றம் வருவது இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் சுகந்தி, கோபம் என்பது எல்லாரும்க்கும் பொதுவானது தான்... அனைவருக்கும் வரும் பொதுவான விஷயம்... ஆனால் அது எந்த அளவு வருகிறது என்பதை பொறுத்து தான் மனிதரை தீர்மானிக்க முடியும்.....

தினமும் காலை எழுந்ததும் இன்று நான் கோவமே படமாட்டேன்... என்று முறையாவது மனதை ஒருமுகப் படுத்தி சொல்லுங்கள்... அதே போல் இரவும் தூங்கச் செல்லும் முன்னும் சொல்லுங்கள்.... முதலில் உங்களுக்கு மாற்றம் தெரியாது... ஆனால் போகப் போக மாற்றத்தை உணர்வீகள்... அதே போல் தினமும் காலை எழுந்ததும் யோகா ஒரு அரை மணி நேரமாவது செய்யுங்கள்... மாதத்தில் உங்கள் கோபம் கன்ட்ரோல் ஆகி விடும்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சுகந்தி

இந்த இழையை பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/12385

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi arusuvai friends நானும் suganthi மாதிரி தான் தற்சமயம் இருக்கிறேன்.i'm married.ஆனால்என்னுடைய nature of character இதுவல்ல.i'm very soft and zovial type b4 marriage.after mrriage 1ly i've changed likke this,idont know what's the reason to this chnge,எனக்கு கோபமே வராது ஆனால் இப்பொலுது எல்லாம் அடிக்கடி வர்றது,அதனால் கணவருடன் சண்டை போடறேன் எனக்கு நன்றாகவே தெரிகறது.என்னுடைய PARENTS ஏ சொல்லுகிறார் கள் நீ அதிகமாக கோபப்படுகிறாய் அமைதியாய் இரு,அவர் விட்டுக்கொடுத்துப்போகிறார் என்கிறார்கள்.எனக்கு கல்யாணமாகி 9 மாதம் ஆகிறது.எனக்கு யோசனை கூறுங்கள் தோழிகளே HOW TO CONTROL THE ANGRY

நானும் சரியான கோபக்காரிதான். நம்மை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட நாம் அவரைப் புரிந்து கொள்வோம் என நினைக்க ஆரம்பித்தாலே கோபம் குறைய ஆரம்பிக்கும்..மெடிடேட் செய்தால் கோபம் குறையும்.

நானும் சரியான கோபக்காரிதான். நம்மை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட நாம் அவரைப் புரிந்து கொள்வோம் என நினைக்க ஆரம்பித்தாலே கோபம் குறைய ஆரம்பிக்கும்..மெடிடேட் செய்தால் கோபம் குறையும்.

உங்க பதிவைப்பார்க்கும்போது என்னோடை பழைய கரக்டரை பார்த்தமாதிரி தோணுது.
நானும் வீட்டில்செல்லப்பிள்ளை,எதுவாய் இருந்தாலும் எனக்கு பெஷ்டாய் கிடைக்கனும் என்றுதோனும்,கோவமும் எல்லத்துக்கும் முதல் வந்திடும்.கல்யாணமான புதிதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்( கொஞ்ச நேரம்தான்)அவர் என்னைவிட கோவக்காரர்,ஆனால் சண்டை வந்தாப்பிறகு முன்னைய விட பாசம்கூடிடும் அது வேறை விசயம்,ஆனால் இப்ப இருவருமே கொஞ்சம் கொஞ்சமாய் கரக்டரை மாத்திட்டோம்,(அன்புதாங்க) நிச்சயமா அவரோடை வேலை ரொம்ப முக்கியம், அதுக்கு சப்போட்டிவ்வா இருந்தாலே இருவருக்கும் இடையில் பிரச்சனை குறையும் என்பது என்னோடை அனுபவம்
ஆரம்பத்தில் அடிக்கடி வெளியில் கூட்ட்டீட்டு போகச்சொல்லி கேட்டீட்டே இருப்பன், உடம்புக்கு முடியல என்றால் எங்கே இருந்தாலும் உடனேவரனும் என்று எதிபார்ப்பேன், இப்படி நிறைய.....
ஆனால் இப்ப அவரே வாறன் என்றாலும் நான் அனுமதிப்பதில்லை.கஷ்டப்பட்டு வேலை செய்யிறார் நான் கொஞ்சம் என்றாலும் அட்யஷ்ட் பண்ணத்தான் வேணும்,என்னால் அவரது உழைப்பிற்க்குரிய வெகுமதி தடைப்படக்கூடாது என்பதில் நான் எப்பவுமே உறுதியாக இருக்கன் .திருமணத்திற்க்குப்பின் கம்பனியில் பதவி உயர்வு கிடைத்து, முக்குய பதவியில் இருக்கார் என்றால் அதில் என்னோடதும் சிறிய பங்கு என்பதில் சந்தோசமே. எல்லாம் அனுபவம்தான் இல்லையா? ,

ரொம்ப நன்றி கவி. முடிந்த வரைக்கும் கோபத்தை கன்ட்ரோல் பண்ணிகறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா இந்த இழை ரொம்ப யூஸ் ஹ இருக்கு. ரொம்ப நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்