வாஷிங் மெஷின் (ஃப்ரண்ட் லோடிங்)

புதிய வாஷிங் மெஷின் வாங்கனும்.. ஃப்ரண்ட் லோடிங்கில் எந்த பிராண்ட் எந்த டைப் நன்றாகவும் cheap and best" ஆகவும் உள்ளது.. உபயோகித்துக் கொண்டு இருப்பவர்கள் எப்படி உணர்கிறீர்கள்.உதவுங்கள் தோழிகளே!

சாந்தினி.. என்னைப் பொறுத்த வரையில் வேர்ல்பூல் நன்றாக உள்ளது...ஏன்னா நான் அதுதான் உபயோகிக்கிறேன்... எங்க சென்னைக்கு செமி ஆட்டோவே போதும்னு செமிஆட்டோ வாங்கிட்டேன்..... நீங்க எங்க இருக்கீங்கனு பாத்து அதுக்கு ஏத்தமாதிரி வாங்குங்க..... எதுக்கும் நீங்க கடைக்கு போய் நல்லா விசாரிச்சு நம்ம அறுசுவைத் தோழிகளையும் கேட்டு வாங்குங்க..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சாந்தினி ஃப்ரண்ட் லோடிங் வேண்டும் என்பதில் ஏதாவது விஷயம் இருக்கா? ஏன்னா ஃப்ரண்ட் லோடிங் வாஷின் மெஷினில் சில சிரமங்கள் இருக்கின்றன அதனால் கேட்டேன்.

உட்கார்ந்து பொறுமையாக துணிகளை அடுக்கி போட வேண்டும். இல்லேன்னா மிகவும் கசங்கலாகி விடுகிறது. அம்மா வீட்டில் ஃப்ரண்ட் லோடிங் மெஷின் தான் இருக்கிறது. துவைப்பது எல்லாம் நன்றாகத்தன் செய்யுது. ஆனால் தூக்கி உள்ளப் போட்டோமா அடுத்த வேலையை பார்த்தோமான்னு இல்லாம பொறுமையா உட்கார்ந்து போட வேண்ட்யிருக்கு.

இங்கே நான் டாப் லோடிங் யூஸ் பண்றேன். ஆனால் நடுவில் ராட்(கம்பு) இல்லாமல் வாங்க வேண்டும். அப்போதுதான் துணிகள் நாசமாகாமல் இருக்கும்.

எந்த வகை என்ராலும் மறக்காமல் கம்ஃபர்ட் போன்ற ஃபேப்ரிக் கண்டிஷனர்கள் உபயோகித்தால் துணிகல் கெட்டுப் போகாமல் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃப்ரண்ட் லோடிங்னா தண்ணி கம்மியா செலவாகும். நம்ம ஊருக்கு ஏத்தது.

சாந்தினி நானும் வாசிங்மெசின் மாத்தர ஐடியாலதான் இருக்கேன். நான் பாமினி ஃப்ரண்ட் லோட் வைச்சிருந்தேன். ரொம்ப டைம் எடுக்கும். இப்ப ரிப்பேர் (இரண்டு தடவை) ஆயிடுச்சு வேற புது மாடல் என்ன நல்லாயிருக்குனு தேடிட்டு இருக்கேன். உங்க இழை எனக்கும் உதவும். நன்றி;)

Don't Worry Be Happy.

நான் வைதிருப்பது LG front load வாஷிங் மெஷின்.இது நல்லா தான் இருக்கிறது.ஃப்ரண்ட் லோடில் மினிமம் விலையே 20000 ஆயிரதிற்கு மேல் தான்.இந்த விலைக்கு 5.5 கெபாசிடி தான் கிடைக்கும்.இதற்கும் மேல் யென்றால், இதை விட விலை அதிகம்.ஃப்ரெண்ட் லோட் வாஷிங் மெஷினில் தண்ணீர் செலவு கம்மியாகும்.யெல்லா துணியும் போட்டு லாக் பண்ணிவிடுவதால் அழுக்கும் நன்றாக போகிறது.ஆப்சன்சும் நிரய இருப்பதால் துணிக்கு தகுந்த மாதிரி வைத்துக்கொள்ளலாம்.முக்கியமாக ஹாட் வாட்டர் ஆப்சன் இருப்பதால் அழுக்கான போர்வைகளுக்கு பெஸ்டாக இருக்கு.இதற்கு மேல் யெதாவது சந்தேகம் யென்றால் போன் பண்ணவும்.

சாந்தினி.... ஃப்ரண்ட் லோடிங் வாஷிங்மெஷினில் சில பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக ப்ரண்ட் லோடிங் வேண்டுமென்றால் கடைகளில் போய் கேட்டு நல்ல பிராண்ட் எது என்று யோசித்து முடிவெடுங்கள். இங்க நான் எல்ஜி உபயோகிக்கறேன். ரொம்ப நல்லாருக்கு. நம்ம ஊருக்கு எது ஒத்துவரும்னு பாத்து வாங்குங்க.

ரங்கா... அது என்னப்பா.. சென்னை என்றதும் செமி ஆட்டோமேடிக் போதும் என்கிறீா்கள். புல் ஆட்டோமேடிக் வாங்கினால் என்ன ஆகும். ஏனென்றால் சென்னையில் நாங்க செமி ஆட்டோமேடிக் வாங்கி 5 வருஷம் ஆச்சு. அடிக்கடி மக்கர் பண்ணுது. மாத்தலாம்னு யோசிச்சப்போ நானும் என்கணவரும் ஃபுல் ஆட்டோமேடிக் வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். அதற்கு குறிப்பாக ஏதும் காரணங்கள் இருக்காப்பா...

கவி சொல்ற மாதிரி இங்க யாரும் ஃப்ரண்ட லோடு அதிகம் வாங்குறதில்ல.. அதே மாதிரி கம்போரட் உபயோகப்படுத்த சொல்லுங்க. நன்றாக இருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா..... புல் ஆட்டோ பத்தி எனக்கு தெரியாது..... எனக்கு என் நெருங்க்ய தோழியின் அட்வைஸ் படி செமி வாங்கினேன்..... சென்னை மாதிரி ஹாட் கிளைமேட்டுக்கு செமிதான் கரெக்ட்ன்னு சொன்னா.... அதனால வாங்கினேன்... வாங்கி 6 1/2 வருஷம் ஆகுது.... ஆனா இதுவரை ஒரு ரிப்பேர் கூட ஆகலை... அதனால தான் சஜ்ஜெஸ் பன்னேன்பா....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கா.. எனக்கு இதுபத்தி அவ்வளவா தெரியல.. இங்க சிங்கப்புர்ல ஃபுல்லி அட்டோமேடிக் ரொம்ப நல்லாருக்கு. செமி ஆட்டோமேடிக் இது வரைக்கும் எங்கயும் பாக்கல..

ஆனா ஊர்ல செமி தான் வச்சிருக்கோம். வாஷிங்மெஷின் போட்டா பக்கத்துலயே இருக்க வேண்டியிருக்கு. என் மாமியார் தண்ணி திறந்துவிட்டுட்டு சில சமயம் மறந்து அப்படியே போட்டுட்டு போயிடுறாங்க.. அது என்னடான்னா.. எல்லா தண்ணியும் வழிஞ்சு வீனா போகுது... நாங்க செமி வாங்கிய காரணம் தண்ணி பிரச்சனை.. நான் இருக்கும் இடம் தண்ணீா் முன்னாடி செம்மண் கலந்த கலர்ல இருக்கும். அந்த தண்ணீா் போட்டு வாஷ் பண்ணினா வெள்ளை துணியும் கலரா மாறிடும். அதுனால தண்ணி எல்லாம் படிகாரம் போட்டு பில்டர் பண்ணி.. அதுக்கப்பறம் தான் வாஷிங்மெஷினுக்கு உபயோகப்படுத்தினோம். ஆனா இப்ப தண்ணீா் சிறிது நன்றாக உள்ளது. இப்படி பல சந்தேகம் இருப்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். எனக்கு சற்று விளக்கமாக கூறுங்கள் பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா.... சிங்கப்பூர்ல தண்ணி வேற இப்பத் தான் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க.... அதனால எதுக்கும் நீங்க நல்லா கேட்டு வாங்குங்கப்பா........ இங்க சென்னைன்னா நா டக்குன்னு விசாரிச்சு கூட சொல்வேன்... ஆனா எனக்கு அங்க பொறுத்த வரைக்கும் தெரியலப்பா..... வாஷிங் மெஷின பொறுத்த வரைக்கும் தண்ணியோட கண்டிஷனையும் பாக்கனும் பா.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ராதா..... நா வேணும்னா என்னோட தூரத்து உறவு ஒருத்தர் தாம்பரம் விவேக்ஸ்ல வொர்க் பண்றார்... அவர் கிட்ட வேனா விசாரிச்சு சொல்லட்டுமா...... நீங்க சொன்னா நா அவர் கிட்ட கேட்டு நாளைக்குள்ள உங்களுக்கு சொல்றேன்பா....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்ஸ் சிங்கையில் தண்ணி எப்பவுமே நல்லாத்தான் இருக்கும். ராதா சொன்னது இந்தியாவில் அவங்க ஊரில் உள்ள தண்ணியை பற்றி :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்