ஸோன் பர்ஃபி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவா(சர்க்கரை போடாதது) - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - முக்கால் கப்
முந்திரி மற்றும் தோல் நீக்கிய பாதாம் இரண்டும் கலந்து - அரை கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை(சூடான பாலில் கரைத்து வைக்கவும்)


 

ஒரு பாத்திரத்தில் பாதி நெய்யை விட்டு, லேசான தீயில், மைதாவை நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஆறினபின் அதைக் கட்டியில்லாமல் கோவாவுடன் கலந்து வைத்து கொள்ளவும்.
சர்க்கரையில் அரைக் கப் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சவும்.
கம்பிப் பதம் வந்த பின் மைதா-கோவா கலவையை அதில் போட்டு சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கொண்டே கிளறவும்.
நன்றாக சுற்றிப் பூத்து வந்ததும், முந்திரி, பாதாம் கலந்தது, ஏலப்பொடி, குங்குமப்பூ முத்லியவற்றைப் போட்டு இறக்கவும்.
இறுகும் வரைப் பாத்திரத்திலேயே வைத்து நன்கு கிளறி, பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு போடவும்.


இது கோவா போட்டு செய்யும் ஒரு ருசியான பர்ஃபி.

மேலும் சில குறிப்புகள்