இது மிகவும் சிறிய கிச்சன் தான். தேவையான அளவுக்கு கேபினெட் உள்ளதால் வசதியாக உள்ளது. கேபினெட் கதவுகள் எல்லாமே light colour ல் இருப்பதாலும், பெரிய ஜன்னல் இருப்பதாலும் வெளிச்சமாக இருக்கும். அறையின் நடுவே இருந்த டைனிங் டேபிள் இட வசதிக்காகவும், குழந்தைகள் சுற்றி வருவதாலும் அறையின் ஒரு ஓரத்துக்கு மாற்றப்பட்டது. இதன் மேல் சாப்பிடும் நேரம் தவிர, வேறு நேரங்களில் பூக்கள் மட்டுமே இருக்கும்.

மாடுலர் கிச்சன் என்பதால் அடுப்புக்கு மேலே விளக்குகள் பொருத்தப்பட்ட சிம்னி உள்ளது. இது வீட்டின் உள்ளே புகை சூழாமல் இருக்கவும், அடுப்புக்கு நேராக வெளிச்சம் கிடைக்கவும் உதவுகிறது. எப்போதும் பூக்கள், சிறு பொம்மைகள் ஆங்காங்கே வைத்திருப்பேன், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று. சமையல் முடிந்ததும் அடுப்பு, சுற்றி உள்ள இடம் அனைத்தையும் சோப் மற்றும் ஈரமான துணியால் துடைத்து சுத்தமாக வைத்திருப்பேன். தேவைக்கு மட்டுமே மளிகை பொருட்கள் கிச்சன் கப்போர்டில் இருக்கும். அனைத்தும் ஒன்று போல் வாங்கப்பட்ட container என்பதால் கப்போர்ட் திறந்தால் அழகாக இருக்கும். மொத்தமாக வாங்கி வைக்கும் மளிகை பொருட்கள் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பேன்.

அடுப்பின் கீழே இருக்கும் அவனுக்கு இடப்பக்கம் கரண்டிகள், கத்தி போன்ற அனைத்தும் வகைப்படுத்தி தனித் தனி ட்ரேவில் வைத்திருக்கிறேன். பார்ட்டிக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள், வழக்கமாக வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், நான்ஸ்டிக்கள் எல்லாம் தனித் தனியாக கப்போர்டில் அடுக்கி வைத்தால் எடுக்க சுலபமாக இருக்கும்.

அவனுக்கு வலது பக்கம் கேஸ் சிலிண்டர் வைக்க தோதாக கப்போர்ட் இருக்கிறது.

Sink கீழே இருக்கும் கப்போர்டில் பாத்திரம் தேய்க்க தேவையான சோப், ஸ்பாஞ் மற்றும் கிச்சனின் வேஸ்ட் பின் வைக்க பயன்படுத்துகிறேன். சின்க் அருகே மைக்ரோவேவ் வைத்திருப்பதால். மைக்ரோவேவ் சேஃப் ப்ளாஸ்டிக் பாத்திரங்களை அதன் மேல் இருக்கும் கப்போர்டிலும், கண்ணாடி பாத்திரங்களை அதன் கீழ் இருக்கும் கப்போர்டிலும் எடுக்க தோதாக அடுக்கி இருக்கிறேன்.

பார்ட்டிக்கு மட்டுமே பயன்படுத்தும் கண்ணாடி கோப்பைகள், தேனீர் கோப்பைகளை தனி கப்போர்டில் வைத்திருக்கிறேன். இதுதான் என்னுடைய கிச்சன்.

Comments
வனிதா,
வனிதா,
உங்க கிச்சன் ரொம்ப,அழகா,சுத்தமா இருக்கு.அங்கங்கே வைத்துள்ள பூக்களும் அழகு.சீக்கிரமே இந்த கிச்சனுக்கு வந்து சமைத்து அசத்துங்க.வாழ்த்துக்கள்.
பார்ட்டிக்கு என்று தனியே கண்ணாடி பொருட்கள் வைத்திருப்பது நல்ல ஐடியா.நான் எப்போதும் யூஸ் அன்ட் த்ரோ தான் பயன்படுத்துவேன்.உங்க கண்ணாடிப் பொருட்களைப் பார்த்ததும் ஆசை வந்து விட்டது.
வனிதா மேடம்!
ஆஹா! உண்மையில் மானாட மையிலாட நிகழ்ச்சியில் இந்த முறை முதல் பரிசாக தரவிருக்கும் வீடுபோல் நீட்டாக உள்ளது..
எல்லாம் பராமரிப்புதான் காரணம்...
கிட்சன் என்றால் அதைவிட்டு வெளியே ஓடும்படி இருக்ககூடாது..அங்கேயே வசிக்கலாமோ என்று சிந்திக்க வைக்க வேண்டும்..நான் சிந்தித்தேன் வனிதா மேடம்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
வனி
இதுதான் சர்ப்ரைஸ் விசிட் அடித்த போது எடுத்த படங்களா? சமையலறை அழகாயிருக்கு. சமைப்பதையெல்லாம் ஒரு பார்சல் பண்ணிடுங்கோ! வாழ்த்துக்கள் வனி. படங்களும் அதன் விளக்கங்களும் அருமையா இருக்கு.
அன்புடன்
பவித்ரா
வனி
வனி
கிட்சன் சூப்பர்..இப்படி ஒன்னு இருந்தா பாத்தாவே அமைக்க தோனும் இல்லையா? ;) பார்ட்டிக்கு பயன்படுத்தும் கண்ணாடி கோப்பைகள் அழகு
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வனி
வாவ் வனி கிச்சன் ரொம்ப அழகா சுத்தமா இருக்கு! எனக்கும் கிச்சன் வெண்மை நிறத்தில் இருந்தால்தான் பிடிக்கும். சிறிய அழுக்கு என்றாலும் பளிச்சுன்னு தெரியும். உடனே சுத்தப்படுத்தி விடலாம் :). அதனாலேயே எப்பவும் பளிச்சென்ற சுத்தத்துடன் இருக்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ரம்யா
ரம்யா அப்ப கூட உங்களுக்கு சமைக்க தோணாது. அமைக்க தான் தோணுமா?
வனி அக்கா கிச்சன் சூப்பர். அங்கேயே படுத்து தூங்கிடலாம் போல....
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமி
ஆமி..
ஜாரி.. ஹேன்டு ஸ்லிப் ஆகி சமைக்க.. அமைக்க ஆயிடுச்சு.. என்ன இப்படி கேட்டுட்டிங்க.. நான் பழக ஆரம்பிச்சாச்சு. சீக்கிரம் யாவரும் சமைக்கலாம்ல என் குறிப்பை பாக்க போறீங்க. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வனிதா
கிச்சன் ரொம்ப அழகாஇருக்கு.போட்டோஸ் நல்லா எடுத்துஇருக்கீங்க.இப்படி கிச்சன் இருந்தா சமைக்க மனசே வராது.
நன்றி அட்மின்
என் சமையலறையை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹர்ஷா
ஹர்ஷா... மிக்க நன்றி. :)
//சீக்கிரமே இந்த கிச்சனுக்கு வந்து சமைத்து அசத்துங்க.// - 10 நாளா சமைச்சுகிட்டு தானே இருந்தேன். ஒரு பார்ட்டியே கொடுத்துட்டனே ;)
இங்க இருக்க பார்ட்டி கண்ணாடி பாத்திரம் ரொம்ப கம்மி... இன்னும் வர வேண்டிய பொருள் இருக்கு, அவை மிக அழகாக இருக்கும். வர இன்னும் 3 மாதமாவது ஆகும் அதான் அதை இங்க போட முடியல. நீங்களும் கண்ணாடி பாத்திரத்துக்கு மாறிடுங்கோ ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஷேக்
ஷேக்.. மிக்க நன்றி. //எல்லாம் பராமரிப்புதான் காரணம்// - கண்டிப்பா. எனக்கு இந்த வீட்டில் அது கட்டாயம் ஆனது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பவி
பவி... மிக்க நன்றி. :) அதென்ன சர்ப்ரைஸ் விசிடப்ப எடுத்த படமா???, சர்ப்ரைஸ் விசிட்'ல செய்த வேலை. ஒரு வருடமா பிரிச்சு கூட பார்க்காம இருந்த எல்லாம் பிரிச்சு, வீடு செட் பண்ற வேலை. ம்ம்... இந்த கிச்சன செட் பண்ண 3 நாள் படாதபாடு பட்டேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
ரம்யா... மிக்க நன்றி :) //அமைக்க // - இதை நான் கேட்கும் முன் ஆமி கேட்டுட்டாங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
உங்க சமையல் அறை சூப்பரா இருக்குங்க.
வனிதா,
// - இதை நான் கேட்கும் முன் ஆமி கேட்டுட்டாங்க ;) //
வனிதா,
அவ்வளவு தானா? உங்க கிட்ட இருந்து பெரிசா எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன்.
கவிசிவா...
கவிசிவா... மிக்க நன்றி. எனக்கும் கிச்சன் சுத்தமா இருந்தா பிடிக்கும், ஆனா நான் இல்லாம என் வேலை ஆள் கிச்சனை வைத்திருந்த அழகை பார்க்கணும் :( போட்டது போட்ட இடத்தில், கழுவ வேண்டிய எல்லாம் எப்போதும் சின்கில், அடுப்பை சுற்றி, மஞ்சள் டீ புளி தண்ணீர் ஊற்றி அழுக்கு, எண்ணை பிசுக்கு... 10 நாள் நல்லா பென்ட நிமுத்திட்டேன். எப்படா போகும் இந்த பொண்ணுன்னு நினைச்சிருக்கும். ஹிஹிஹீ. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆமினா
ஆமினா... மிக்க நன்றி :) ஒரு விசிட் அடிங்க மாலே'கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரீம்
ரீம்... மிக்க நன்றி :) நீங்க என்ன வித்த்யாசமா சொல்றீங்க.... இப்படி இருந்தா தான் நான் அடுப்படி பக்கமே போவேன்... எனக்கு பிடிச்ச மாதிரி இல்லன்னா சமைக்கவே பிடிக்காது. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா
உமா... மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹர்ஷா
ஹர்ஷா... கவலை படாதிங்க. மாட்டுவாங்க சாட்'ல, அப்போ பிடிக்கலாம்'னு இப்போ விட்டுட்டேன். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹா ஹா வனி இங்கேயும் அதே கதைதான். வாரம் ஒருமுறையாவது நம்ப கை படலேன்னா கார்னர் எல்லாம் அழுக்குதான். பக்கத்துலேயே நின்னு சொல்லணும். வேலையாட்கள் அப்படித்தான் வனி. டெய்லி மாப் எல்லாம் பண்ணுவாங்க. ஆனா சுவர் ஓரம் உள்ள அழுக்கு மட்டும் போகவே போகாது. என்ன மாயமோ தெரியல நான் மாப் பண்ணினா பளிச்னு ஆயிடுது :).
விட்டா நான் பாட்டுக்கு புலம்பிட்டு இருப்பேன் வனி! பை பை :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா :)
என்ன செய்யுறது கவி... நம்ம நிலை அப்படி, புலம்ப தான் முடியுது. நான் எவ்வளவு சொன்னாலும் இந்தம்மா பாத்திரம் கழுவியதும் சோப் சின்க் கீழ் வைக்க மாட்டாங்க, அவங்க போனதும் நான் தான் எல்லாம் மீண்டும் சுத்தம் செய்யணும். மாயம் இல்லை.... நம்ம வீடு!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி சமையலறை
கிச்சன் ரொம்ப அழகா இருக்கு வனி. கலக்கல். ;)
சமையலறை
வனிதா, மால்தீவ்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அழகு கொஞ்சம் கடற்கரைதான் அதனுடன் தற்போது உங்களுடைய சமையலறையையும் சேர்த்துக் கொண்டேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. சமையலறைக்கு சுற்றி போடுங்க ;) சமையலறை சுத்தமாக இருந்தால் தான் நல்ல சமையல் சமைக்கவும் மூட் வரும். அப்போ நீங்க 24 மணிநேரமும் சமைச்சுட்டே இருக்கீங்களா? பின்னே இவ்வளவு அழகான சமையலறையை விட்டு வெளியில் வரவும் மனசு வருமா? அழகா, அற்புதமா கலைநயத்தோட வச்சிருக்கீங்கப்பா. வாழ்த்துக்கள் :) எனக்கு ஒருநாள் வாடகைக்கு தருவீங்களா? ஆசை தீர சமைச்சுட்டு வந்துடறேன் :)))
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சமையலறை
வனிதா அக்கா மாலத்தீவ்ஸ்க்கு வந்தாச்சா. கிச்சன் சூப்பர். அழகா பராமரிக்கிறீங்க. வனிதா அக்கா கைப்பட்டவுடன் இன்னும் கிச்சன் மிளிருது. சிரியா கிச்சன் தான் மிஸ்ஸிங்கா.
வனிதா மேடம்
வனிதா மேடம் உங்க கிச்சன் பாக்க ரொம்ப அழகா இருக்கு. சுத்தமாவும்இருக்கு. கிச்சன் அழுக்கா இருந்தா சமைப்பது ரொம்ப கடுப்பா இருக்கும். எனக்கும் க்ளீனா இருந்தா தான் பிடிக்கும். இந்த மாதிரி கிச்சன் இருந்தா சமைக்கவும் மிகவும் பிடிக்கும். நல்லா சமைங்க.. சமைச்சு எங்க எல்லாருக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
வனிதா
உக்காந்து அது அழக ரசிச்சுகிட்டே இருக்கலாம்ன்னு சொல்ல வந்தேன்,ஹி ஹிஹி
புனிதா
புனிதா... ;) மிக்க நன்றி. நலம் தானே???
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கல்பனா
கல்பனா ... மிக்க நன்றி. கிளம்பி மாலே வந்துடுங்கோ, வாடகைக்கு என்ன எத்தனை நாள் வேணும்'னாலும் தங்கி எனக்கும் சேர்த்து சமைச்சு போடுங்கோ :D
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வினோஜா
வினோஜா... மிக்க நன்றி :). என்ன பண்றது சிரியாவில் இருந்தப்போ இந்த பகுதி இல்லையே. இதுவரை என்னுடைய 3 கிச்சன் மிஸ்ஸிங்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா