சத்துமாவு

தோழிகளே சத்துமாவு தயாரிக்கும் போது என்னென்ன சேர்க்கலாம் என்று கூறமுடியுமா?
குழந்தைகளுக்கு இல்லை பெரியவங்களுக்கு தயவுசெய்து சொல்லுங்கப்பா........

தர்சி, நலமா? சத்து மாவிற்கு மக்காசோளம், வேர்க்கடலை,கொண்டைகடலை,கம்பு,கேழ்வரகு,முந்திரிபருப்பு, பாதாம்பருப்பு,சம்பா கோதுமை, வறுத்த கடலை, பச்சரிசி, சிகப்பரிசி,சோயா பீன்ஸ் இன்னும் நீங்கள் விருப்பப்படும் தானியங்களையும் சம அளவில் கலந்து கொண்டு லேசாக அரைத்து மாவாக்கி கஞ்சி காய்ச்சி தரலாம். இது பெரியவர்கள் மட்டுமன்றி சிறியவர்களுக்கும் தரலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் தர்சி,
ஏற்கனவே கொடுத்து விட்டதாக நினைத்திருந்தேன். நாளைக்கு நான் குறிப்பாக தரவா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பதிலளித்தமைக்கு நன்றி!
நாளைக்கு செய்வதாக எண்ணியுள்ளேன் அதனால்தான் கேட்டேன்.பயறு, உளூந்து சேர்த்துக்கலாமா?

தர்சி

பாசிப்ப பயறு, உளுந்து தாராளமா சேர்க்கலாம் தர்சி. நான் சொல்ல மறந்துட்டேன். எல்லா சத்துக்களும் கலந்த பேலன்ஸ்ட் உணவு இது. இவற்றை கஞ்சியாக கொடுக்க முடியாதபட்சத்தில் சர்க்கரையை தூள் செய்தோ அல்லது வெல்லத்தை பாகாக காசியோ நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்தும் தரலாம். வயதானவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இனிப்பின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்