குழந்தை வாந்தி-வைத்தியம் ப்ளீஸ்

என் குழந்தைக்கு 10மாதமாகிறது.கீழே 2 பற்கள் வந்துவிட்டன.இன்று காலையிலிருந்து எது கொடுத்தாலும் வாந்தி எடுக்கிறாள்.அவள் சாப்பிடுவதில் எந்த தொந்தரவும் வைக்கமாட்டாள்.இன்று பால் கூட குடிக்கவில்லை.ஏதெனும் வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.

அன்புடன் அனு

அனுஷா,
குழந்தை தொடர்ந்து வாந்தி எடுகிறது என்றால் உடனடியாக டாக்டரை பார்க்கவும். அவள் எதற்காக வாந்தி எடுக்கிறாள் என்று தெரியாமல், வீடு வைத்தியம் செய்ய கூடாது. குழந்தையின் temperature செக் பண்ணுங்கள். வேறு ஏதும் pain உள்ளதா என்று செக் பண்ணுங்கள். வேறு எதாவது சாப்பிட விருப்பமா என்று பாருங்கள். சிறிது நேரம் பொருத்து பாருங்கள். தொடர்ந்து வாந்தி இருந்தால் டாக்டரிடம் செல்லுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கார்திகாராணி சொல்றமாதிரி தொடர்ந்து வாமிட் பண்ணினா டாக்டரப் பாருங்கபா.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்