கம்பு சட்னி

தேதி: September 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

கம்பு - கால் கப்
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க


 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகாயிருக்கு கவி! வாழ்த்துக்கள். கம்பு மாவை வைத்து செய்யலாமா! ஆனா அதை வறுக்க முடியுமா! சத்துள்ள குறிப்பு, வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

கவிதா... நல்ல சத்தான குறிப்பு. புதுமையாவும் இருக்கு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுமையான சத்தான வித்தியாசமான குறிப்பு. வாழ்த்துக்கள் கவிதா.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவித்ரா ,

கம்பு மாவு சட்னிக்கு சேராது ..உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம்,

நலமா?
செய்து பாருங்க ,உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சங்கரி ,

செய்து பாருங்க ,உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
கம்பு சட்னி
சத்தாக
சுவையாக
ருசியாக உள்ளது
வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கம்பு சட்னி பார்க்க நன்றாக உள்ளது.. ஆனால் கம்பு பார்க்க வெள்ளை நிறமாகத் தெரிகிறதே! தோல் நீக்கிய பின் உபயோகிக்க வேண்டுமா?

சின்ன சந்தேகம்: பச்சை நிறத்தில் இருப்பது தானே கம்பு(பஜ்ரா)?..

புதுமையாக இருக்கு. ரொம்ப சத்துல்லதும் கூட. கண்டிப்பா செய்து பார்கிறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கம்புன்னு பெயர் வரும் போதே நினைத்தேன். நீங்க தான் என....

மேலும் ஒரு சத்தான குறிப்பு. செய்துட வேண்டியது தான். வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா,
எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க? நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

கல்பனா,
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சாந்தினி ,
எனக்கு தோல் நீக்கிய கம்பு குருணை தான் கிட்டும் ஏற்கனவே நிறைய பாஜ்ரா பற்றி பேசியாகி விட்டது தோல் நீக்காத கம்பிலும் செய்யலாம்
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா,
நலமா?
செய்து பாருங்க ,உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி,
whole foods ஸ்டோரில் வனிதா மேடம் குறிப்பு பார்த்து வாங்கினேன் மாற்றி மாற்றி செய்து கொண்டு இருக்கேன்..
நீங்களும் செய்து பாருங்க ,உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
நீங்களும் செய்து பாருங்க ,உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா உங்கள் உணவுகள் எல்லாம் புதுவிதமாகவும், சத்துள்ள உணவாகவும் இருக்கின்றது.

நேற்று உங்கள் கம்பு சட்னி செய்தேன் நன்றாக வந்தது.எனது பாராட்டுக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

naan netru kambu satni seithen nanraga vara villai. kambu muluvathum poriya venduma? poriyavillai endralum parava illaya? eppadi seivathu therinthavargal kooravum.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.