எந்திரன் திரைப்படம்

ஹாய் friends ,
நான் எந்திரன் படம் பார்த்து விட்டேன். பஹ்ரைனில் வியாழகிழமை காலையிலேயே எந்திரன் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. நாங்கள் நூன் ஷோ பார்த்தோம். வழக்கமான ரஜினி படம் போல் இல்லாமல் சற்றே வித்தியாசமான technologyku முக்கியத்துவம் குடுத்து எந்திரன் படம் எடுத்திருகிறார்கள்(punch dailogue இல்லப்பா) சங்கரும் அவருடைய மசாலா தனத்தை குறைத்து கொண்டுள்ளார். பாடல்கள் அனைத்தும் கேட்பதை விட பார்பதற்கு அழகாக இருக்கிறது. தமிழ் சினிமா செண்டிமேன்டையும் ஓல்ட் formula வையும் விட்டு தொழில்நுட்பங்களை கையாளுவதில் முன்னேறி கொண்டிருக்கிறது. நான் ரஜினி ரசிகை இல்லை ஆனால் எனக்கே படம் பிடித்திருக்கிறது. சில குறைகளை விட்டு விட்டு பார்த்தால் எந்திரன் இந்திய திரை உலகில் ஒரு புதிய தைரியமான முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்.
congratulations to robhot crew .
தமிழன் ..... இந்தியன் .............. வெற்றி பெற அனைவரும் தியேட்டரில் சென்று படம் பாருங்கள்.
தோழிகளே நீங்களும் படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

நீங்க சொல்றதை பாத்தா இபோவே படம் பாக்கனும் போலிருகே!

அடராமா! டிக்கட் கிடைக்காதே! பரவால்லை! பாத்துட்டு சொல்றேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கார்த்திகா ராணி.. நான் நாளைக்கு தான் எந்திரன் படம் பாக்க போறேன். பாத்துட்டு வந்து சொல்றேன். டிரைலர் பாக்கும் போதே வித்தியாசமா இருக்குனு தெரிஞ்சுது. கிராபிக்ஸ் ஆங்கில பட ரேஞ்சுக்கு இருந்தது.. ம்ம் பாத்துட்டு வந்து கண்டிப்பா பதிவு போடுறேன். மொகஞ்சதாரோ பாட்டு எடுக்கப்பட்ட இடம் ரொம்ப அழகா காட்டிருக்காங்க...

யாரெல்லாம் பாக்க வர்றீங்க நாளைக்கு படம் பாக்க?..................

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் கார்திகா நானும் பார்த்துடேன்பா. எனக்கு படம் பிடித்து இருக்கு. ஆனால் எல்லாருக்கும் அந்த அளவு பிடித்து இருக்கானி தெரியல. எல்லாம் என்ன சொல்ராங்கனா குழந்தைக்கான கார்டூன் படம்னி சொல்ராங்க. ஆனால் எனக்கு பிடித்து இருந்து, 3மனி நேரம் போனதே தெரியல. ரொம்ப காமெடியாகவும் டச்சிங்காகவும் இருந்து. கண்டிப்பா நான் இந்த மாதிரி எதிர்பார்க்கல. கண்டிப்பா வில்லன் ரஜினியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கல. ஆனால் ரொம்ப வித்தியாசமான சிந்தனை. கொடுத்த காசுக்கு ஓகே தான்பா. எனக்கு பிடித்த அளவு எல்லாருக்கும் பிடிக்குமானி சந்தேகம் தான். ஓவ்வொருத்தலுக்கும் ஒரு ஒரு சிந்தனை. என் பக்கதில வீட்டில உள்ளவங்களுக்கு பிடிக்கலபா. ஆனால் எனக்கு பிடித்து இருந்து. ஆனால் 190கோடி என்பது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ராதா நான் வரேன் எந்திரன் படம் பார்க்க, எந்திரன் படத்துக்காக எங்க கூப்டாலும் வர நான் தயார் எங்க ஹீரோ ரஜினி சூப்பரா இருக்காருல்ல எப்போ பார்க்க போறேனோ தெரியலையே

பாடல் கேட்கவே ரொம்ப பிடித்திருந்தது எனக்கு.. கேட்பதை விட பார்க்க நல்லா இருக்கா.. :)))).. ட்ரைலர் வந்தாலே கண் சிமிட்டாம பார்த்திட்டுருக்கேன் நான்.. புதன் கிழமைதான் டிக்கெட் கிடைத்தது எங்களுக்கு இங்கே!!!.. பார்த்துட்டு வந்து பதிவு போடுகிறேன்.. :)

ஹாய் கலை.. வாங்க வாங்க சிங்கப்புர் வந்துடுங்க.. இங்க ரெண்டு நாள் முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு. நாளைக்கு இங்க வந்திடுங்க.. நாம எல்லாரும் ஒன்னா போயிடலாம். ஓகே வா... வந்து படம் எப்படி இருந்துச்சுனு சொல்லுவேனாம் நீங்க காதால கேட்டு நல்லா புகை விடுவீங்களாம் ஓகே வா..... சமத்து பொண்ணு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்பவே பார்க்கனும் போல இருக்கு! ஆனா எனக்கு இந்த மாதிரி கூட்டத்தில் போக பிடிக்காது. அதனால் ரஜினியை கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்க வேண்டியதுதான். என்னோட கருத்து என்னவென்றால் மாறுபட்ட ரஜினி படம். அதை விட விஞ்ஞானம் அதிகம் இருப்பதால் பாமர மக்களிடைய இந்த படம் எவ்வாறு சென்றடையும் என்ற கேள்வி எனக்கு எழுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

அன்புடன்
பவித்ரா

கார்த்திகா...... இங்க நாங்க டிக்கெட் கிடைக்கலைன்னு வருத்தமா இருக்கோம்.... காத்தால எழுந்திரிக்கும் போதே இன்னிக்கி டிக்கெட் கிடைக்காம போச்சேன்னு மூட் அவுட்..... இதுவ நீ பாத்துட்டேன்னு சொல்லி என் காதுல புகை வர வக்கிரியா.... இந்த லிஸ்ட்ல சோனியாவுமா? இதெல்லாம் நல்லாயில்லை ஆமா...... என்கிட்ட டைம் மிஷின் இருந்ததுன்னா நீ பாக்க போறதுக்கு முன்னாடியே டைம்ம நிறுத்தி வச்சிருப்பேன்...... ( என்னப்பா ஓவரா இருக்கா.... எல்லாம் எந்திரன் சைட் எபட்க் தான்)

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ராதா இதெல்லாம் ரெம்ப ஓவருங்க , என்னைய விட்டு ரஜினி படம் பார்க்க போகாதீங்க சொல்லிட்டேன்,

இந்த டாப்பிக்ல பேச குட்டித்தலை வராது :(. ஏன்னா குட்டித்தலைக்கு சினிமாவும் ரொம்ப பிடிக்காது. அதுவும் கூட்டத்தில் அடிச்சு பிடிச்சு பார்க்க பிடிக்கவே பிடிக்காது. எப்போவாச்சும் குடும்பத்தோடு தியேட்டர் போனால் பார்ப்பேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் சினிமா பார்த்துட்டு வெளிய வந்ததும் கதை என்னான்னு கேட்டா குட்டித்தலையோட குண்டு கண்ணு திரு திருன்னு முழிக்கும் :). ஏன்னா தியேட்டரை விட்டு வெளிய வந்ததும் பெரும்பாலும் மறந்து போயிடுவேன்.

முக்கியமான விஷயம் இன்னும் நான் சிவாஜி பார்க்கவில்லை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்