டெலிவரி

நான் அனு.எனக்கு நவம்பரில் டெலிவரி. சி செக்ஸ்சன். இரண்டாவது குழந்தை.வீசா பிரச்சனை இருப்பதலால் என் அம்மா வருவது கடினம். முதல் குழந்தைக்கு முன்று வயது. எங்கலால் தனியாக டெலிவரியை பார்க்க முடியுமா?. யு.ஸ். டெலிவரி எப்படி இருக்கும்? பிலிஸ் பதில் தாருங்கள்.

அனு, பயப்படாதீர்கள்.நாங்களும்(நான்,என் ஹஸ்) 2-வது டெலிவெரி நாங்களேதான் பார்த்துக்கொண்டோம்.எனக்கு 2-மே c-section தான்.மீண்டும் அப்புரம் வந்து சொல்ரேன் பா.பொண்ணு ஸ்கூல் ல இருந்து கூப்பிடப்போகணும்.

பிரியா மிகவும் நன்றி . நாங்கள் பாஸ்டனிலிருந்து வெர்ஜினியா வந்

து இரன்டு மாதம் ஆகிரது. தோழிகள் இல்லை. பிலிஸ் தெளீவாக சொல்லுங்கள். நான் எப்பொது விட்டு வேலை செய்யலாம்? என் ஹஸ்பன்டுக்கு லிவு அதிக நாள் எடுக்க முடியாது. இதுவே எனக்கு பெரிய டென்சனக இருக்கு. அன்புடன் அனு

ஹலோ
கவலை பட வேண்டாம். நீங்கள் VA ல எங்கே இருக்கீங்க நானும் VA ல தன இருக்கேன்.
எனக்கு லாஸ்ட் டிசம்பர் ல தான் இங்க டெலிவரி ஆச்சு.

கொஞ்சம் preplanned -எ இருந்த சமாளிச்சுடலாம்
இப்போ இருந்து நீங்க கொஞ்சம் புளிகுழம்பு, புளியோதரைன்னு செஞ்சு பிரீசர்ல வைக்கலாம்
1st குழந்தை பர்த்துக யார் இருப்பாங்கனு இப்போவே யோசிச்சு friends கிட்ட கேட்டு வச்க்கொங்க
hospital உங்க கூட உங்க கணவர் தங்கினா அப்புறம் குழந்தைய யார்கிட்டயாவது தன விடனும்

முதல் இரண்டு வாரத்துக்கு சமையல், கிளீனிங் எல்லாம் உங்க கணவரை பர்த்துக சொல்லுங்க
கிளீனிங் பண்ண இங்க ஆட்கள் கிடைப்பார்கள் வீட்டின் அளவை பொருது பணம் வாங்குவார்கள்
வாரம் ஒரு முறை வர சொல்லாம். (பாத்ரூம்/கிட்சேன்/எல்லா ரூம் clean பண்ணி/பெட்ஷீட் மாதி/ dust பண்ணி விட்டு போவார்கள்)
அப்டி வர சொனால் உங்க கணவருக்கு வெறும் கூகிங் தன இருக்கும்

முதல் மாதம் குழந்தை தூங்கிட்டே தானே இருக்கும். நீங்க முதல் குழந்தைக்கு ஏக்கம் வராம பார்த்துகோங்க
எல்லாம் நல்லபடியாக நடக்கும்
டேக் கேர்
-விஜி

நீங்க 2 பேரும் வெர்ஜினியால எங்க இருக்கீங்க? நானும் வெர்ஜினியாதான்.
சாரி அனு, என் பொண்ணைக்கூப்பிட டைம் ஆயிடுத்து அதான்.முதலில் நம்மால் முடியும்னு நனைச்சுக்கோங்க.எனக்கு ப்ரெக்னென்சி போதும் சரி, டெலிவிரிக்கிப்பிறகும் என் ப்ரண்ட்ஸ் தான் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்..மத்தபடி விஜி சொன்னதுபோலும் செய்யவும்.இதில் முதல் குழன்தையைப்பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.என் பெண்ணுக்கு 41/2 வயது, ஆதலால், நான் அவளிடம் சொல்லி,அவள் சம்மதத்துடன் 1 மாதம் டே கேரில் விட்டேன். (அப்பொழுது வக்கேஷன் டைம்).திரும்பவும் வேலைப்பா, , வன்து சொல்கிரேன். தைரியமாக இருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.நானும் வேண்டிக்கொள்கிரேன்.

ஹை நான் அனு.எத்தானை நாள் ஆஸ்பத்திரியில் தங்கனும்?குழந்தைக்கு வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் என்ன என்று சொல்லமுடியுமா? தொட்டில், லொசன்,டிரஸ் எங்கு வாங்லாம்?பிலிஸ் பதில் தாருங்கள்,அம்மாவிற்கு விசா கிடைக்கலை.மறுபடியும் எப்பொ அப்லெ பன்னலாம்? அனு

அனு, நார்மல் டெலிவரி எனில் 2 நாட்கள் தங்க வேண்டி இருக்கும். c-section எனில் 5 நாட்கள். ஆஸ்பத்திரியில் எல்லாமே அவர்கள் கொடுப்பார்கள். குழந்தைக்கு டயப்பர், ஆடைகள், குளிப்பாட்டுவது, இரவில் நீங்கள் விரும்பினால் அவர்களே குழந்தையை வைத்துக் கொள்வார்கள். அவர்களே பார்த்துக் கொள்வது நல்லது என் தனிப்பட்ட கருத்து. உங்கள் கணவர் உங்களுடன் தங்க அனுமதிப்பார்கள். குழந்தையை வீட்டுக்கு அனுப்பும் போது புது ஆடைகள், பேபி பிளாங்கட், பேபி கார் சீட் ( baby car seat ) கட்டாயம் கொண்டு போக வேண்டும். வின்டர் பேபி என்பதால் பிளாங்கட் மொத்தமாக பார்த்து வாங்கவும். லோஷன் நான் எபோதும் ஜான்ஷன் & ஜான்ஷன் தான் வாங்குவேன். தொட்டில்ல் நிறைய வெரைட்டியா, பல விலைகளிலும் கிடைக்கும் உங்கள் விருப்பம் போல வாங்கலாம். டயப்பர் ராஷ் ( rash) லோஷன் கட்டாயம் பாவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ராஷ் ஏற்பட்டு, மிகவும் கஷ்டப்பட வேண்டும். வேறு ஏதாச்சும் ஞாபகம் வந்தா பிறகு சொல்றேன்.
வாழ்த்துக்கள்.
விசா பற்றிய தகவல்கள் எனக்கு தெரியவில்லை.

வாணி

வாணி மிகமிக நன்றி. முதல் குழந்தை 5நாட்கள் எப்படி விட்டுட்டு இருக்கும்?நெருங்கிய தோழிகள் கிடையாது. தெரிந்தவர்கள் கன்சிவாகி இருக்கிறார்கள். டாக்டரிடம் அனுமதி கேட்டால் தருவார்களா? முதல் குழந்தை என்னிடம் இருப்பதற்கு. பதில் சொல்லுங்கள் பிலிஸ்

அனு, உங்களுடன் பேசி ரொம்ப நாளாச்சுப்பா.எப்படி இருக்கீங்க?எப்பொ உங்கள் டெலிவெரி?எனக்கு தெரிந்தவரை கட்டாயமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டிப்பாக உ
டன் வைத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டார்கள்.நீங்கள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மூலமாக 5 நாட்களுக்கு, யாராவது நல்ல பேபிஸிட்டரிடம் விடுவது முடியுமா என்று யோசியுங்கள்.மற்றபடி வேரு வழி இருக்கா தெரியவில்லை.மற்ற தோழிகளும் வந்து சொல்வார்கள்.எல்லாம் இனிதே நடக்கும், கவலைப்படாதீர்கள்.டேக் கேர்.

குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருப்பதை பெரிதாக விரும்ப மாட்டார்கள். ஹாஸ்பிட்டல் நெடி அவர்களுக்கு பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன். என் மகன் என் அருகில் வரவே இல்லை. உங்கள் கணவருடன் இருக்கும் படி இப்பவே மெதுவாக பழக்கிவிடுங்கள். நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை உங்கள் கணவரின் உதவி தேவையில்லை. ஆஸ்பத்திரியில் எல்லாமே கவனித்து கொள்வாங்க. சாப்பாடுகள், பழச்சாறு வகைகள் இலவசமாக குடுப்பார்கள்.
டாக்டர்கள் அனுமதி குடுத்தாலும் உங்களால் எப்படி 3 வயசு குழந்தையை பார்த்துக் கொள்ள முடியும் என்று யோசியுங்கள்.
மிகவும் யோசித்து, குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமா இருங்க. எல்லாம் நல்லபடியா முடியும்.
நீங்கள் எங்கே இருக்கிறீங்க?
என் ஐடிக்கு முடிந்தால் மெயில் அனுப்புங்க. ( mvany.2009@gmail.com )
வாணி

ஹலோ அனு,
வாழ்த்துக்கள். வின்டர் பேபி பிளாங்கட், ரிசிவிங் டவல் நியு பார்ன் துணி முதலிலேயே வாங்கி துவைத்து வைத்துக்கொள்ளவும். எந்த புது துணி வாங்கினாலும் துவைத்து பயன்ப்டுத்தவும். எனக்கு c-section தான். நான் டெக்ஸாசில் இருக்கிறேன். இங்கு 3 நாட்கள் தான் மருத்துவமனையில் இருந்தேன். அதன்னல் பயப்படவேண்டாம். அதே மாதிரி (Hospital)லில் எந்த உதவியும் செவிலியர்களே பார்த்துக் கொள்வார்கள். குழந்தையும் பார்த்துக் கொஅள்வார்கள். பகல் நேரத்தில் பெரிய குழந்தையை உங்க கூட தங்க வைத்துக் கொள்ளலாம். இரவு நேரம் மட்டுமே ஆள் வேண்டும்.

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்