கொலுவுக்கு வாங்க

தோழர்களே, தோழியர்களே
முக்கியமா சென்னைவாசிகளே (நாங்கள்ளாம் வரக்கூடாதான்னு மத்தவங்க கேக்காதீங்க. அண்டார்டிகால இருந்தா கூட தாராளமா வரலாம்).
கொலு 8ம் தேதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. அதிலிருந்து 17ம் தேதி விஜயதசமி வரை கொலு உண்டு.
தயவு செய்து சென்னையில் இருப்பவர்கள் மற்றும் சென்னைக்கு வர முடிந்தவர்கள் என் மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்க. என் விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் மெயில் செய்கிறேன். கண்டிப்பாக வந்து எங்கள் வீட்டு கொலுவைப் பார்த்து எங்களைக் கௌரவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொலைபேசியில் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வந்தால் எனக்கு வசதியாக இருக்கும் என்பதை அன்புடன், தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நல்வரவை அன்புடன், ஆவலுடன் எதிர்பார்க்கும்
ஜெமாமி

மாமி இந்தோனேஷியாவிலிருந்து என்னால வந்து கலந்துக்க முடியாது. அதனால் கொலுவை ஃபோட்டோ எடுத்து மெயில் பண்ணிடுங்க :). நாங்களும் கலந்துகிட்ட திருப்தி கிடைக்கும்.

சில வருடங்களுக்கு முன் நவராத்திரிக்கு இந்தியாவில் இருந்தேன். ஆசைப்பட்டு என்னவர் வீட்டிலும் அம்மா வீட்டிலும் 9நாட்களும் கொலு வைத்தேன். கொலுன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நேக்கும் ஆசைதான்! ஆனா என் கசின் கல்யாணம் 21ம் தேதின்னா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

( அப்பாடா ! நல்லவேளை மாமி பாட்டுலேந்து தப்பிச்சுட்டேன்னு நெனைக்கறது கேக்கறது!) அது நடக்காது! ஜெ மாமி! நடக்காது!

வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்!

பாடுவேன் பாடுவேன்! சுணடல் பாட்டு பாடுவேன்!

போன்லையாவது பாடுவேனே!

குரு முநதிட்டேளா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் ஜெ மாமி ,

நலமா ?இப்ப தான் முதல் முறை உங்க கிட்ட பேசுறேன் . எனக்கு கொலு பார்க்க ரொம்ப ஆசை ..ஆனா நான் uk ல இருக்கிறேன் ..அடுத்த வருடம்
வருகிறேன்.உங்கள் கொலு சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் .

nanriyudan

மாமி ஆசையா தான் இருக்கு வர ஆனா முடியாதே
அதுனால போறவா எல்லாரும் எப்படி இருந்ததுனு எழுதிடுங்கோ
முடிஞ்சா போட்டோ எடுத்து அனுப்புங்கோ

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அடுத்த வருஷம் கொலு பாக்கறதுக்காகவே கண்டிப்பா வரோம். இந்த தடவ ஃபோட்டோ எடுத்து அறுசுவையில் போடுங்களேன். எங்களுக்கு வந்த திருப்தி இருக்கும்;)

Don't Worry Be Happy.

மாமி கொலு பாக்க ரொம்ப ஆசையா இருக்கு. என்ன பண்றது வர முடியாதே. சின்ன வயசுல பாட்டி வீட்ல பாத்தது. அப்புறம் பாக்க குடுத்து வைக்கல. நான் இங்க இருந்து கற்பனைலேயே பாத்துக்குறேன். :(

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

உங்களுக்கு மெயில் பண்ணுனேன். பாருங்க மாமி.

அன்புடன்
மகேஸ்வரி

மாமி சென்னையில் எங்க சொல்லுங்கள்

நீங்கள் கூப்பிட்டதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் சென்னையின் இருந்திருந்தால் நிச்சயம் என் குடும்பத்துடன் வந்து கலந்துக் கொண்டிருப்பேன். அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்ட்டு. சென்னை வரும் போது நிச்சயம் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் மாமி.
கொலுனா எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறு வயதில் பக்கத்தில் நிறைய பிரமாணர்கள் இருந்தாங்க டெய்லி அவங்க வீட்டுக்குலாம் போய் பாட்டு பாடி அங்க தினமும் ஒவ்வொரு கதை சொல்லுவாங்க அதை கேட்டுட்டு சுண்டலாம் வாங்கி சாப்பிட்டுட்டு ரொம்ப சந்தோஷமா கொண்டாடினோம்.

மாமி, உங்களுடைய mail இப்பதான் பார்த்தேன் . என் பெயர் கீதா, என் கணவர் பெயர் கார்த்தி, என் school life name shanthi மாமி காலசக்கரத்தில் உங்களுடைய photo பார்த்தேன். மாமி கண்டிப்பா நீங்களும் எங்காத்துக்கு கொலுக்கு வரணும். எனக்கும் கதை, கவிதை எழுத பிடிக்கும் மாமி, எனக்கும், என்கணவருக்கும், என் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர், எழுத்து சிற்பி திரு.பாலகுமாரன் அவர்கள். ஊங்களுக்கு யாரை பிடிக்கும்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்