வெஜ் சூப்

தேதி: October 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (16 votes)

 

சின்னவெங்காயம் - 5
தக்காளி - 2
காரட் - 1
சோளம் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பால் - அரை கப்
மிளகு பொடி - தேவைக்கேற்ப
சோயா மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மல்லித்தழை - சிறிதளவு


 

சின்னவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, காரட், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மக்காச்சோளம் மற்றும் பச்சைமிளகாய் தவிர மீதி பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த விழுதை வேக வைத்த தண்ணீர், பச்சைமிளகாய் மற்றும் சோளத்துடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். (அடுப்பை மிதமான தணலில் வைத்து செய்யவும்.)
பிறகு பாலில் சோயா மாவு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து அதை கொதிக்கும் சூப்பில் விட்டு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அணைத்து விடவும். தேவையெனில் இறுதியாக மிளகுபொடி சற்று கூட சேர்த்துக் கொள்ளலாம்.
பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதா மேடம் சூப்பர், நல்ல STARTER கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.

ராதா அக்கா வெஜ் சூப் சூப்பரா இருக்கு. மூனு பவுல்ல நான் ஒரு பவுல் எடுத்துக்கறேன்:-) விருப்பான குறிப்புல சேர்த்துட்டேன். இந்த சோளம் நேத்தி வரைக்கு வீட்டுல இருந்துச்சு. இனிமே வாங்கித்தான் செய்யனும். இந்த சண்டே செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.

சத்தான நல்ல ஒரு சூப் ராதா..... இப்பவே செஞ்சுடறேன்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இந்த ரெசிபி பிடிச்சிருக்கு... செய்து பார்த்து சொல்கிறேன் :)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி.........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரம்யா... உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி... கண்டிப்பா செய்து பாருங்க.. நன்றாக இருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எப்பவும் டொமேட்டொ சூப்தான் செய்வேன். இந்தசூப் நல்லா இருக்கே.
செய்து பாத்துட்டு சொல்ரென்.

வினோஜா... உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. வீட்டுக்கு வாங்க.. 3 பவுல்மே தர்றேன். சோளம் இல்லைன்னாலும் மத்த காய்கறி போட்டு செய்து பாருங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரங்ஸ்.. வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இலா மேடம்.. முதல் முறை என்னோட குறிப்பு பாத்து பின்னுாட்டம் கொடுத்திருக்கீங்க..ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சித்ரா..
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பாருங்க.. நல்லாருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சூப்ப்பர் சூப்!! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அக்கா, எனக்கு பச்சைமிளகாயை குக்கரில் போட்டால் அந்த டேஸ்ட் என்னமோ பிடிக்கவே இல்லைக்கா! ட்ரை பண்ணி பார்க்கிறேன்.பச்சை மிளகாயை கட் பண்ணி போடனுமா!!

அன்புடன்
பவித்ரா

ராதா நல்ல ஒரு ஹெல்தியான சூப். நாளை தான் செய்ய போகிறேன் நிச்சயம் செய்துட்டு வந்து சொல்றேன். பார்க்கவே ஒரு புத்துணர்ச்சி கிடைச்ச மாதிரி இருக்கு.

ராதா இன்னிக்கு காலையில் இந்த வெஜ் சூப்பும் கார்லிக் ப்ரெட்டும்தான் செய்தேன். நல்ல காம்பினேஷன். வெரி டேஸ்டி. கடைசியில் பரிமாறும் போது மேலே துளி வெண்ணெய் சேர்த்தேன் :). நான் இதுவரை காய்கறிகளை அரைத்து சூப் செய்ததில்லை. இன்னிக்குதான் ஃபர்ஸ்ட் டைம் :). நன்றி ராதா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பவி பச்சை மிளகாய் வாடை சூப்பில் வரவில்லைப்பா. ரொம்ப நல்லா இருந்துச்சு. ட்ரை பண்ணுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா வெஜ் சூப் சூப்பரா இருக்கு. இன்று செய்யலாம் என இருக்கின்றேன்.சுவைத்து பார்த்து விட்டு மீண்டும் வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராதா, சூப் சத்தாகவும், ருசியாகவும் உள்ளது. படைக்கு முந்து படைக்கு பிந்துன்னு சொல்லுவாங்க. நான் லேட்டா வந்ததால மூணு கோப்பைல ஒரு கோப்பை கூட கிடைக்கல :( அடுத்த முறை பண்ணும் போது ஒரு சூப் காங்கோவுக்கு பார்சல் பண்ணிட்டு தான் அறுசுவைல போடனும் சொல்லிட்டேன் ஆமா.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நல்ல ஆரோக்கியமான தொடக்க உணவு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல சத்துள்ள ரெசிப்பிகளை அள்ளி விடுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி.. கண்டிப்பா பச்சைமிளகாய் வாடை வராதுடா.. நான் கட் பண்ணி போடல. அப்படியே தான் போட்டேன். கட் பண்ணினா விதை வெளிய வரும்..அது சாப்பிடும்போது கஷ்டமா இருக்கும். குட்டி பசங்க சாப்பிடாதுங்க. அதுனால முழுசா அப்படியே வேகப்போட்டுட்டு அதை அரைக்காமல் விட்டுவிட வேண்டும். அப்ப தான் மிளகாய் காரம் அதிகம் இருக்காது. மிளகாய் பொடி சேர்த்தால் கலர் மாறிவிடும். பொதுவாக சூப் என்றால் காரத்திற்கு மிளகு தான் பெஸ்ட் டேஸ்ட் கொடுக்கும். உனக்கு பச்சைமிளகாய் வாடை பிடிக்கவில்லை என்றால் காய்கறிகளை மட்டும் வேக வைத்து கடைசியில் மிளகு காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்துக்கொள். டேஸ்ட் வித்தியாசம் பெரிதாக தெரியப்போவதில்லை. ஓகேவா.செய்து பார்த்துட்டு சொல்லு.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கௌரி..
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க... இதுல எதையும் வேஸ்ட் பண்ணமாட்டோம். எல்லாமே அரைத்து செய்யறதுனால.. ஹெல்த்தியும் கூட.

யோகா
பின்னுாட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து சுவைத்து பாருங்கள். சுவைத்து மகிழ்ந்தீர்களா இல்லையா என்பதை கூறுங்கள். நன்றி.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவி.. செஞ்சு பாத்திட்டீங்களா.. தேங்யு.. நல்லாருக்குன்னு வேற சொல்லிட்டீங்க.... என்னப்பிடிக்க முடியாதே.. பவிக்கும் உடனே பதில் கொடுத்துட்டீங்க. மிக்க நன்றிப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்ப்ஸ்...
என் சூப் குடிக்கறதுக்கு முன்னாடியே இப்படி பொலம்புறீங்களே.. ஸ்டெடி கல்ப்ஸ்ஸ்டெடி...

அது படைக்கு முந்து படைக்கு பிந்து இல்ல...
பந்திக்கு முந்து படைக்கு பிந்து...

சரிசரி..உளறாதீங்க. கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன் ஒரு கோப்பை. அப்பகூட கல்ப்ஸ் கோப்பைல ஊத்தி குடிக்கற ஞாபகம் தான்....

உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி கல்பனா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா அக்கா,
குழந்தைக்கு தரலாம்
நல்லா சத்தான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா..

தேங்ஸ்பா. எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம். எங்க போய்டீங்க..பையன் எப்டி இருக்கான். பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றிப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா உங்கள் வெஜ் சூப் செய்தேன். சுவையாக இருந்தது. நானும் சிங்கை தான்.

ராதா,
சோயா மாவுக்கு பதில் கார்ன் flour சேர்க்கலாமா?i dont have soya...