குழந்தைக்கு முடி வளரவில்லை, deva madam,பதில் தெரிந்த தோழிகளே உதவுங்கள் ப்ளீஸ்.

குழந்தைக்கு முடி வளரவில்லை, deva madam,பதில் தெரிந்த தோழிகளே உதவுங்கள் ப்ளீஸ்.

என் மகளுக்கு 2 வயது ஆகிறது, 2 மாதத்திற்க்கு 1 தடவை மொட்டை அடிக்கின்றோம். இன்னும் முடி வளரவில்லை. johnson baby shampoo use பண்ணுகிறோம்.vatika oil use பண்ணுகிறோம் . முன்பக்கம் வழுக்கைபோல் உள்ளது, எப்படி அங்கு முடிவளர வைப்பது.வேறு எதுவும் செய்ய வேண்டுமா, முடி கருமையாக, நீளமக வளர என்ன செய்ய வேண்டும்.எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.பதில் தெரிந்த தோழிகளே, உதவுங்கள் ப்ளீஸ்....

உதவுங்கள் தோழிகளே Plssssss...

நீங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா? குடும்பத்தில் யாருக்காவது சிறுவயதில் இப்படி இருந்திருக்கிறதா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா ,என்னையும் உங்கள் தோழியாக ஏற்று பதில் தந்தமைக்கு நன்றி. டாக்டரிடம் காண்பித்தோம், ஆனால் அவர் இதற்க்கு treatment தேவை இல்லை, மொட்டை அடித்தால் போதும் என்று சொன்னார். என் குடும்பத்தில் யாருக்கும் இப்படி இல்லை. என்ன shampoo and hair oil use செய்ய வேண்டும் என்றூ சொல்வீர்களா.......மேலும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் தோழிகளே,உங்கள் குழந்தைக்கு என்ன shampoo and hair oil use செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்...
என் கேள்விக்கும் பதில் தாருங்களேன் ப்ளீஸ்...

தோழிகளே யாரும் என் கேள்விக்கு பதில் தரமாட்டீர்களா., ப்ளீஸ் பதில் தாருங்களேன்.

தெரிந்தால் கண்டிப்பா சொல்லியிருப்பாங்கப்பா! விளக்கெண்ணெய் (castor oil) முடி வளர்ச்சியை தூண்டும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் குழந்தையின் சருமம் மிருதுவானது. இயற்கை பொருள் என்றாலும் தகுந்த யோசனையின் பேரில்தான் பயன்படுத்த வேண்டும். cold pressed castor oil நல்ல பலன் கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய்

எனக்கு இந்த பிரச்சினையை பற்றி பதில் தெரியவில்லை. இந்த links உதவுமா என்று பாருங்கள்.
http://www.indiaparenting.com/newborn-care/254_2730/hair-care-tips-for-your-baby.html
http://pregnancyandbaby.sheknows.com/pregnancy/baby/Caring-for-your-babys-hair-5176.htm
http://www.ehow.com/how_4578847_care-babys-hair.html
http://www.greatdad.com/tertiary/89/2058/how-to-care-for-your-baby-s-hair.html

மாதம் ஒரு முறை மொட்டை போட வேண்டாம் மொட்டை அடித்த்தும், முடி வளற வளற உடனே வாரம் ஒரு முறை மொட்டை போடவும், கத்தி பட பட முடி வளறும். தேங்காய் செறட்டைய நன்கு கரித்து அதில் தேங்காய், எண்ணை அல்லது நல்லஎண்ணை கலந்து வைத்து ஊறவைத்து மொட்டை அடித்த்தும் தேய்க்கவும்.

அப்படியும் வழுக்கையாகவே இருக்கு என்றால் டாக்டரிடம் கேலுங்கள்

ஜலீலா

Jaleelakamal

குழந்தைக்கு முடி வளர அதிகமா கறிவேப்பில்லை சாப்பாட்டில் சேர்த்துக்கொடுங்கள்.அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.காய வைத்து பொடி செய்து சாப்பாட்டில் சேர்த்துக்கொடுங்கள்.என் மகள் 3மாதம் தான் ஆகிரது.நான் pregnantஆக இருக்கும் போதே நிரைய கறிவேப்பில்லை சாப்பிட்டேன்.என் மகள் கரு கருனு நிறைய முடி இருக்குது.try panni paarungkal meena.

மேலும் சில பதிவுகள்