பயனுள்ள அரட்டை பாகம் 4

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....

தலைப்பு - சிக்கனம்

எப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

அடுத்த பாகம் வந்தாச்சு

சீக்கிரம் எல்லாரும் இதுல வந்து பதிவிடுங்க பாக்கலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் நிறையா சிக்கனமா இருந்து சேர்த்து வச்சுருக்கேன். அதுல ஒன்னு (யாரும் சிரிக்க கூடாது சொல்லிபுட்டேன் :)

சென்னையிலேயே சந்தை நடக்கும் ஒரே இடம் பல்லாவரம் தான். வாரம் வெள்ளிகிழமை நடக்கும். கம்யூட்டர் முதல் சிலேடு வரை எல்லா பொருட்களும் விற்பார்கள். நல்லா எலக்ட்ரிக் வேலை தெரிந்தவர்கள் இங்கே வந்து பழைய டீவி,ரோடியோ, கம்யூட்டர், என பலவர்றையும் வாங்கி புதுபித்து நல்ல விலைக்கு விற்பார்கள். இது போல தான் பல பொருட்களையும் இங்கிருந்து வாங்கி லாபம் பார்க்கிறார்கள்.

இப்பலாம் புது புது புத்தகம் என்னன்னமோ பெயர்லலாம் வருது. பல வார இதழ், மாத இதழ், நாவல் என வாங்கினால் பணம் வீண் விரயம் என நினப்பவர்கள் அதிகம் உண்டு. நானும் அப்படி தான். ஒரு பொருளை வாங்கும் போது பல வழிகளிலும் ஆராய்ந்து பின் தான் வாங்குவேன். அதனால் இந்த புத்தகங்கள் படிக்க ஆர்வமிருந்தும் படிப்பதில்லை.

ஆனால் சென்னை போன பிறகு சந்தையில் பார்த்தால் பல நாவல், வார இதழ், மாத இதழ் என கொட்டி கிடந்தது. முந்தின மாத இதழ் வரை எல்லாமே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். புதிதாய் வாங்கினால் எப்படியும் அந்த மாத இதழ் 25 ரூபாய். ஆனால் வெறும் 5 ருபாயில் வாங்கலாம். எந்த பகுதியும் சேதமில்லாமல்....
அது முதல் இப்படி தான் வாங்கிக்கொள்வேன். 3 மாதத்திற்கு ஒரு முறை இது போல் எனக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி ஓய்வு நேரத்தில் படிப்பேன்.

உங்க ஊர்லையும் சந்தைலாம் போட்டா கேவலமா நினைக்காம வாங்கி படிங்க. காசு மிச்சமாகும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எ‌ரிவாயுவை சே‌மி‌க்க பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது கு‌க்கரை‌ப் ப‌ய்னபடு‌த்துவதே ந‌ல்ல ‌விஷய‌ம்.

அ‌திலு‌ம் ‌சிலரு‌க்கு கு‌க்க‌ரி‌‌‌ல் வேக வை‌த்த சாத‌ம் ‌பிடி‌க்காது. வடி‌த்து சா‌ப்‌பி‌ட்டா‌ல் தா‌ன் ‌பிடி‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்களு‌ம் எ‌ரிவாயுவை சே‌மி‌க்கலா‌ம்.

எ‌ப்படி எ‌ன்று பாரு‌ங்க‌ள். அதாவது, சாத‌த்தை பா‌தி வெ‌ந்த உடனேயே ‌ந‌ன்கு ‌‌கிள‌றி இற‌க்‌கி வை‌த்து ‌மூடி போ‌ட்டு மூடி ‌விடு‌ங்க‌ள்.

ச‌ரியாக 5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து சாத‌த்தை ‌கிள‌றி பாரு‌ங்க‌ள். உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அளவு வெ‌ந்து இரு‌க்கு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் இ‌ன்னு‌ம் ‌சி‌றிது நேர‌ம் மூடி வையு‌ங்க‌‌ள்.

உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அள‌வி‌ற்கு சாத‌ம் வெ‌ந்து‌வி‌‌ட்டா‌ல் அதனை வடி‌த்து ‌விடு‌ங்க‌ள். கொ‌ஞ்ச நேர‌த்‌தி‌ல் ‌நி‌மி‌த்‌தி ஆற வை‌த்து‌விடு‌ங்க‌ள் அ‌வ்வளவுதா‌ன் உ‌ங்களு‌க்கு‌த் தேவையான சாதமு‌ம் தயா‌ர், எ‌ரிவாயுவு‌ம் ‌மி‌ச்சமாகு‌ம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல ஐடியா யோகா

நானும் அப்படி தான் செய்வேன். முடிந்த அளவு குக்கரில் தான் எல்லாவற்றையும் முடிப்பேன்.

அதே போல் பெரும்பாலும் இப்போது பலர் ரைஸ் குக்கர் தான் உபயோகிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சாதம் பாதி வெந்திருக்கும் போதே முட்டை போட்டால் தனியாக அவிக்க தேவையில்லை. உருளைகிழங்கு,கேரட் என காய்கறிகளை கூட ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் வைத்து விடலாம். கேஸ் மிச்சமாகும்.

சாதம் வடிக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் கூட முட்டை போட்டு சேர்த்தே வடிக்கலாம். பின் தனியாக எடுத்து பரிமாறலாம்.

சாம்பாருக்கான பருப்பு வகைகளை சமைக்க போகும் முன்பே 2 மணி நேரமாவது ஊற வைத்தால் 1 அல்லது 2 விசிலிலேயே வெந்துவிடும். மெனக்கட தேவையில்லை. சன்னா, கடலை பருப்பும் கூட இதே முறையினை பின்பற்றலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆம்ஸ், நீங்க சந்தைன்னு சொன்னவுடனே என் பாட்டி ஊர்ல நான் போன செவ்வாய்க்கிழமை சந்தைதான் நினைவுக்கு வருது. சின்னபோதுனா ஒரு 8வது படிக்கும்போதுன்னு வச்சுக்கோங்களே. நானும் என் அத்தையும் காய்கறி வாங்க சந்தைக்கு போவோம். சந்தைன்னா காலைல இல்லை. சாயந்திரம் ஒரு 6 மணி போல போவோம். என் பாட்டி ஒரு பெரிய ஒயர் கூடை தந்து பத்த்த்த்த்த்த்த்த்த்து ரூபா தந்து விட்டு நூறு பொருளுக்கு லிஸ்ட் தருவாங்க. சாதாரணமா சென்னைய விட ஊர்ல எந்த பொருள் வாங்கினாலும் மலிவாவும் இருக்கும், தரமாவும் இருக்கும். எல்லா காய்கறிகளையும் கால்கிலோ வாங்கி வரனும். நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? என்னோட பேவரட் பால்கோவா ஒரு 50 கிராம் முதல்ல வாங்கிக்குவேன். அப்புறம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அரைக்கிலோ வாங்கிட்டுதான் மத்த காய்கறிகளை வாங்கவே போவேன். எல்லா காய்கறிகளும் அவ்வளவு பிரெஷ். பார்க்கும்போதே சாப்பிட தோன்றும்.

இருந்தும் எப்படியோ பையை ரொப்பிடுவேன். அது என்ன வெங்காயம் ஒரு கிலோவும், புதினா, கருவேப்பிலையும் வாங்கிப் போட்டா ரொம்பிட்டு போகுது... வீட்டுக்கு வந்து பாட்டிக்கு ஒரு பொய் கணக்கு சொல்லி சர்க்கரை வள்ளிக் கிழங்கை மட்டும் கொடுத்துடுவேன். இவ்ளோ காய்கறி (???) வாங்கினாலும், மீதி எங்கேன்னு கேப்பாங்க. எவ்வளவு அநியாயமா இல்லை ஆமி.பாட்டி சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவச்சு வெல்லம் சேர்த்து பிசைஞ்சு உருண்டை உருட்டி எல்லாருக்கும் தருவாங்க.பால்கோவாவை கண்ணுல காமிக்க மாட்டேனே. காமிச்சா என்ன ஆகும் தெரியுமா? பாட்டி ஊருக்கே பங்கு போட்ருவாங்க. அப்புறம் நான் குரங்கு மாதிரி முழிக்க வேண்டியதுதான். ஊர்ல நம்ம ஊரை மாதிரி ஆவின் பால் கவர் எல்லாம் இல்லை. ஆவின் பூத்தும் கிடையாது. சினிமா டிக்கெட் மாதிரி ஒரு குட்டி டிக்கட் புக் தருவார் பால்காரர். அதுல அரை லிட்டர், ஒரு லிட்டர்னு இருக்கு. நாங்க அரை லிட்டர் ரசீது வாங்கி வச்சுப்போம். சாயந்திரம் ஆனா சைக்கிள்ல பிரெஷ்ஷா கறந்த பசும்பாலை நுரைகிளம்ப ஹாரன் (சைக்கிள் சைட்டுல பஸ்ல இருக்க ஹாரன் மாதிரி இருக்கும்) அடிச்சுட்டு வந்து தந்துட்டு போவாங்க. அதுல தண்ணி கலக்காம ஒரு நூறு மில்லி பாலை மட்டும் தனியா சுட்டு வச்சி சர்க்கரை போட்டு சுண்ட காய்ச்சி யாருக்கும் தெரியாம கபளீகரம் பண்ணுவேன். பாட்டி கண்டும், கண்டுக்காமயும் விட்டுடுவாங்க. இது போல நிறைய சொல்லிட்டே போகலாம்.

செவ்வாய்க்கிழமை மட்டும் அந்த ஊர்ல யார்வீட்டுக்கு போனாலும் சாப்பாடு போடுவாங்களோ இல்லையோ, தவறாம முட்டை காராசேவு சேர்த்து மொறு மொறு பொரி வேர்க்கடலை கலந்து தருவாங்க. என்னா ருச்சி..... என்னா ருச்சி...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா சின்ன வயதில் இப்படி எல்லாம் களவாக சாப்பிட்டுதான் இந்த மாதிரி குண்டாக போய் விட்டீர்களோ?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகா, நான் 10வது படிக்கும் வரைத்தான் குண்டா இருந்தேன் பா. இப்ப மீடியமா தான் இருப்பேன். களவாடி திங்குறது ஒரு தனி சுகம்... தனி ருசிப்பா... நாங்கலாம் அனுபவிச்சவங்க.. ;)) உங்களுக்கு அது மாதிரி அனுபவம் எதுவும் இல்லையா யோகா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா, நிறைய அனுபவம் உண்டு. களவாடி திங்குறது ஒரு தனி சுகம், தனி ருசிதான்.

எனது தாத்தா எமது வீட்டருகில் ஒரு கடை வைத்திருந்தார்.அங்கேயுள்ள இனிப்புப் பண்டங்கள் தொடக்கம் பழவகைகள் என எல்லாம் களவாடி நானும் சாப்பிட்டு, எனது பள்ளி தோழிகளுக்கும் கொடுப்பேன்.அந்த கதையை சொல்லப்போனால், சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அப்படி சாப்பிட்டதாலேயோ என்னவோ நான் எடை கொஞ்ச அதிகம் தான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல ஒரு இழை ஆரம்பிச்சு இருக்கீங்க ஆமி. சிக்கனம் இப்ப உள்ள நடைமுறைக்கு ரொம்பவே தேவை. நமது தேவை அறிந்து பொருட்களை, மின்சாரத்தை, தண்ணீரை, எரிபொருளை, முக்கியமாக பணத்தை உபயோகப்படுத்தினாலே நிறைய மிச்சம் செய்யலாம்.
1. கேஸ் பயன்படுத்தும் போது முடிந்த வரையில் குக்கரில் சமைக்க பழகிக் கொள்ளலாம் சாதம் வைக்கும் போதே கூடவே அன்னக்கி தேவையான காய்கறிகளையும் அதனுடனே வைத்து வேக வைத்து எடுத்துக் கொண்டால் வேலையும் எளிதில் முடியும், கேஸ் மிச்சம்.
2. அதைப் போல் சமைக்க ஆரம்பிக்கும் முன் எல்லா காய்கறிகளையும் நறுக்கி தயாராக வைத்துக் கொண்டு, தேவையான பொருட்களை கை அருகில் வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பிக்கலாம். சிலர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு இங்கு வெங்காயம் அறியுவாங்க அப்படி செய்தால் நேரமாகும் அதோடு கேஸ்ம் வேஸ்ட் ஆகும். அதை தவிர்க்கலாம்.
3.அதிக நபர்கள் இருக்கும் குடும்பங்களில் செய்யும் தவறு என்னவென்றால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நேரம் காபி டீ போடும்படி இருக்கும் அந்த மாதிரி நேரங்களில் கேஸை மிச்சப்படுத்த ஒரு முறை எல்லாருக்கும் சேர்த்து போட்டு ப்ளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டால் வேலை முடிந்தது அப்பப்போ கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுக்கலாம். அதைப் போலவே வீட்டில் பெரியவர்கள் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவைப்படும் வெந்ந்டீரையும் போட்டு ஒரு ப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக் கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. 6 மாதங்களுக்கு ஒரு முறை கேஸை துடைத்து சுத்தம் செய்து வைக்கலாம் அதில் உள்ள பர்னரை கழட்டி சுத்தம் செய்யலாம். அப்படி வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் அடுப்பை கடையில் கொடுத்து சர்வீஸ் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

உண்மையிலேயே நல்ல குறிப்பு கொடுத்தீங்க.

நானும் ப்ளாஸ்க் பத்தி தான் சொல்ல வந்தேன். ஒவ்வொருவருக்கும் தனி தனியாய் சுட வைப்பதால் கேஸ் விரயம் தான்.

சுடு நீரில் குளிக்கும் பழக்கம் இன்னும் பலருக்கு உள்ளது. ஆனால் இது ரொம்ப தவறானதாம். சாதாரண நீரில் குளிக்கும் போது தான் ரத்தம் நன்கு சுழற்சி ஆகி புத்துணர்வு கிடைக்கும். வெந்நீரில் குளிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலே எரிவாயு சிக்கனப்படுத்தலாம். அதே போல் பச்சிளங்குழந்தைக்கு வெந்நீரில் குளிக்க வைக்கிறோம். அதுவே தொடர்ந்து அவர்கள் வளர்ந்த பின்பும் செய்கிறார்கள். இதனால் அந்த குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் முன்பு ஒரு நாளிதழில் படித்தேன்.

கேஸில் சமைக்கும் போது பாத்திரத்தை வைத்து பிறகு தான் எண்ணெய் டப்பா தேடி ஓடுவதும், மசலா கரப்பதும் என இருப்பார்கள். அப்படி இல்லாமல் எல்லாமே கைக்கு அருகில் இருக்கும் படி பார்த்துக்கொண்டால் சுலபம், விரயத்தை கட்டுபடுத்தலாம்.

அதே போல் அடிக்கடி உணவுபொருட்களை சுட வைப்பதற்கு பதில் சமைத்து சாப்பிட்டு மிச்சமிருப்பின் உடனே ஒரு டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைக்கலாம். இதனால் கேஸ் மிச்சமாகும்.

பொருட்களை சமைக்கும் போது அதிக தீயில் வைக்காமல் சிறுதீயிலேயே வைத்தால் 30 நாளுக்கும் வரும் கேஸ் கூடுதலாக 4 நாள் வரும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்