வெண்டைக்காய் பக்கோடா

தேதி: October 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (22 votes)

 

வெண்டைக்காய் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
கடலைமாவு - ஒரு கப்
கார்ன்ப்ளார் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 10
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெண்டைக்காயை ஓரங்குல நீளத்திற்கு விருப்பம் போல் வெட்டிக் கொள்ளவும் அல்லது வட்டமாகவும வெட்டிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, உப்பு, மிளகாய்தூள், தனியாத்தூள் சேர்த்து முதலில் நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவு மற்றும் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை அரைமணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாகப்போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதா, வெண்டைக்காய் பக்கோடா செய்முறையும், பாக்கவும் அழகா இருக்கு, வெண்டைக்காய் கிரிஸ்பியா இருக்குமா, செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுனு சொல்றேன்;)

மேலும் பல குறிப்பு தந்து அசத்த வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

வெண்டைக்காயில் பக்கோடா..வித்தியாசமா இருக்கே!

எண்ணெயில் பொரித்தெடுப்பதால் வழுவழுப்பு இருக்காது அப்படி தானே

செய்து பார்த்துட்டு சொல்றேன் ராதா. கவிதா இல்லாத குறையை நீங்க தீர்த்து வைக்கிறீங்க. அவங்களை போல பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெண்டைக்காயில் இதுவரை பக்கோடா பண்ணினதே இல்லைபா.
குறிப்பு பாத்ததும் பண்ணலாம்னு இருக்கு.

ராதா,
வெண்டைக்காய் பக்கோடா,பார்க்கவே மொறு மொறுனு இருக்கு.வெண்டைக்காயில் புதுரெசிப்பி.கண்டிப்பா செய்து பார்க்கணும்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

ராதா, நீங்க இவ்வளவு நாள் லஞ்சுக்கு மட்டும் தான் ரெசிப்பி தந்துட்டு இருந்தீங்க. இப்ப மாலை நேர நொறுக்ஸ்சும் தர ஆரம்பிச்சுட்டீங்களா? ஜமாய்ங்க... ஜமாய்ங்க. எங்களுக்கு கொண்டாட்டம் தான். நான் வெறும் வெண்டைக்காயை பொடியாக அரிந்து எண்ணெயில் பொரித்தெடுத்து, அதனுடன் பொரித்த வெங்காயத்தையும் கலந்து மற்ற மசாலா பொருட்களை தூவி வைப்பேன். ஒருவாரமானாலும் நன்றாக இருக்கும். தயிர் சாதத்துக்கும் செம காம்பினேஷன். உங்க சமையல் பெரியவர்கள் மட்டுமன்றி சிறியவர்களும் விரும்பி உண்ணும் வண்ணம் உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதா, வெண்டைக்காயில் பக்கோடாவா`? புது முறையாக இருக்கின்றது. பொரித்து எடுப்பதால் வளுவளுப்புத் தன்மை இருக்காது என்று நினைக்கின்றேன்.நிட்சயம் செய்ய தூண்டுகின்றது. செய்து பார்த்திட வேண்டியதுதான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வெண்டைக்காயில் பக்கோடாவா`? புது முறையாக இருக்கின்றது. பொரித்து எடுப்பதால் வளுவளுப்புத் தன்மை இருக்காது என்று நினைக்கின்றேன்.நிட்சயம் செய்ய தூண்டுகின்றது. செய்து பார்த்திட வேண்டியதுதான்

god is love

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவுக்கு மிக்க நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஜெயா..
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. வெண்டைக்காய் கூட கடலைமாவு சோயா மாவு சேர்த்து பண்றதுனால கிரிஸ்ப்பியா தான் இருக்கும். கண்டிப்பா செய்து பாருங்க. உடனே சாப்பிட்டா ரொம்ப க்ரிஸ்பா இருக்கும். காத்துபுகாத டப்பால போட்டு வச்சா நல்லாருக்கும்.

ஆமினா
பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றிப்பா. கண்டிப்பா வழவழன்னு இருக்காது. பசங்களுக்கு பிடிச்சதா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. என் பையனுக்கு மிகவும் பிடித்த டிஷ் இது. அதுனால உங்க பையனுக்கும் பிடிக்கும். க்ரிஸ்பா இருந்தா பசங்க விரும்பி சாப்பிடுவாங்கள்ல..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சித்ரா
பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றிப்பா. கண்டிப்பா செய்து பாருங்க..ரொம்ப நல்லாருக்கும்.

அன்பரசி
கண்டிப்பா செய்து பாருங்க நல்லாருக்கும். பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றிப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்ப்ஸ்
தெளிவாகி..இதுக்கு பதிவு கொடுத்திருக்கீங்க.. குட். அப்படியே பண்ணும்போது போட்டோ எடுத்து அனுப்ப வேண்டியது தான். இவர் தான் என்னடி போட்டோ எடுத்துக்கிட்டே இருக்க எப்ப பாருன்ன கேப்பாரு..
நீங்க சொல்ற முறையும் ட்ரை பண்ணி பாக்குறேன்பா.. ஒரு வாரம் ஆனாலும் கெடாதுன்னு வேற சொல்லிருக்கீங்க.
பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி..

யோகா
கண்டிப்பா வழுவழுன்னு இருக்காது. செய்து பாத்துட்டு சொல்லுங்க.பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி..

வினோ
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இனிமே இப்படி வெண்டைக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், வாழைக்காய்னு ரெசிப்பி அனுப்பறவங்க இந்தோனேஷியாவுக்கு ஒரு பார்சலும் அனுப்புங்க. சமைச்சு அனுப்பலேன்னாலும் பரவாயில்ல இந்த காய்கறிகளையாவது அனுப்புங்கப்பா. காய்ஞ்சு போய் கிடக்கறேன் :(.

ராதா ரொம்ப நல்ல ரெசிப்பி. வெண்டைக்காய் கிடைக்கும் போது செய்யறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிக்கு இல்லாததா?.. வாங்க தேக்காவே அங்க அனுப்பி வச்சிடுறேன். அதான் இந்த மாசம் வருவீங்கள்ல.. அடுத்த வாரம் தானே?.. அப்ப எல்லா காயும் வாங்கிட்டு போய் எல்லார் சொன்னதையும் செய்து பாத்து பின்னுாட்டம் கொடுத்துடுங்க.. ஓகேவா...

கவி.. நானும் எப்பவோ தேக்கால பப்பாளி காய் பாத்த மாதிரி தான் ஞாபகம். இனிமே பாத்தா கண்டிப்பா வாங்கி செய்யனும். நன்றி கவி.. (அங்க குடுக்க வேண்டிய பதிவு.. ஆனா ஒரே பதிவா போகட்டுமேன்னு நன்றியும்இங்கேயே.. )

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பார்க்க சூப்பரா இருக்கு பா. கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

வெண்டக்காய் பகோடா பார்க்க அழகாக இருக்கு.செய்து பார்த்து விட்டு பதில் போடுகிறேன்.

ஹாய் ராதா வெண்டக்காயில் பக்கோடா வித்தியாசமா இருக்கு நான் பாவக்காயில்
செய்வேன் )செய்துட்டுசொல்றேன்

Dear Radha Madam,
I tried this bindi snack. It came out well. Thank you for the nice receipe.My husband enjoyed the snack after a hectic day:)
Regards,
Bhavani

ஹாய் ராதா வெண்டக்காயில் பகோடா புதுசா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு நன்றி வாழ்த்துக்கள், வெண்டக்காய் சாப்பிடாத வாண்டுகளுக்கு இந்த மாதிரி செய்தா நல்லா சாப்பிடும், முந்திரி சின்னதா கட்பன்னி போட சொன்னீங்க அதுல எதாவது வித்யாசமான சுவை இருக்குமா?

அன்புடன்
நித்யா

வெண்டக்காய் பகோடா பார்க்க அழகாக இருக்கு.செய்து பார்த்து விட்டு பதில் போடுகிறேன்.

No pain No gain

ராதா அக்கா,
கம கம வெண்டைக்காய் பக்கோடா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ராதா ஹரி
வெண்டக்காய் பக்கோடா என்னுடைய விருப்பமான ஸ்னாக்சில் ஒன்று..சிப்ஸ் கடைக்கு போனால் அது தான் வாங்குவேன்...நேற்றே செய்து பார்த்து விட்டேன் மிகவும் சுவையாக உள்ளது..வாழ்த்துக்கள்.மேலும் நிறைய நல்ல குறிப்புகள் தந்து என் எடையை கூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று மதியம் உங்கள் ரெசிபி செய்தேன்
,
உண்மையாவே ரொம்ப நல்லாய் வந்தது.... வெண்டிக்காயில் பொரித்த குழம்பு, வெள்ளைக்கறி, மட்டும் தான் செய்திருக்கன்,இது வித்தியாசமாய் இருந்தது....

நிறையப் பேருக்கு இந்த ரெசிபி சொன்னனான்,ரை பண்ணிப்பார்க்கச்சொல்லி......

சங்கரி வசந்த், நசி2008(சாரி உங்க பேர் தெரியல), ஹமீது பாத்திமா
உங்களின் வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா..

கண்டிப்பா செய்து பாருங்க. நல்லாருக்கும். பசங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

பாத்திமா நானும் பாவக்காயில் பண்ணுவேன். அதுவும் கசப்பு தெரியாம நல்லாருக்கும். இதையும் ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவானி

இந்தக்குறிப்பை செய்து பார்த்துவிட்டு கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. உங்கள் கணவருக்கும் இந்த ரெசிப்பி பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நித்யா

கண்டிப்பா செய்து பாருங்கப்பா.. நல்லாருக்கும். வாண்டுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுங்க. முந்திரி கட் பண்ணி போடுறதுல பெரிசா ஒரு விஷயமும் இல்ல. எப்பவும் முந்திரி போட்டோ நல்ல ஒரு டேஸ்ட் கொடுக்கும் அதுக்கு தான். வெங்காயம் முந்திரி இதெல்லாம் போட்டு பண்ணும்போது பக்கோடா இன்னும் டேஸ்டா வரும்.

ஈஸ்வரி
உங்க வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றிப்பா. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

கவிதா
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. செய்து பாத்துட்டு சொல்லுங்க.. ஓகேவா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தளிகா மேடம்

முதல் முறை உங்களிடம் பேசுகிறேன். நலமா?.. செய்து பார்த்துவிட்டு பதில் போட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் எடையை கூட்டுவதே என்வேலை.. ஏன்னா உங்க பங்குக்கு நீங்க எங்க எடையை கூட்டிட்டு தானே இருக்கீங்க. 221 குறிப்புகள் கொடுத்திருக்கீங்க. அதுக்கே நாங்க தேங்ஸ் சொல்லனும் உங்களுக்கு. மிக்க நன்றி...

தர்சி

என் குறிப்பை செய்து பார்த்துவிட்டு கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிப்பா.. நீங்க செய்ததும் இல்லாம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொன்னது கேக்கவே சந்தோஷமா இருக்கு.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா ஹரி நானும் வெண்டைக்காய் பகோடா செய்வது தான்..பொடியாக அரிந்து வெண்டைக்காய் பகோடாவும், நீளவாக்கில் மொரு மொருன்னு பிண்டி குர்குரேவும் செய்வதுண்டு.
நீங்க முந்திரி சேர்த்து இன்னும் சுவையை கூட்டி ரிச்சாக செய்து இருக்கீங்க

ஜலீலா

Jaleelakamal

குறிப்பை பார்த்ததுமே விருப்ப பட்டியலில் சேர்த்திட்டேன். ட்ரை பண்ணிட வேண்டியது ஆனா எப்போனு தான் தெரியலை. நான் கிட்டதட்ட இப்படிதான் கோபி செய்வேன். கண்டிப்பா நல்லாதான் இருக்கும் ராதாக்கா! இன்னும் பல பல சுவையான குறிப்புகள் தந்திட மனதார வாழ்த்துகிறேன்.

அன்புடன்
பவித்ரா

ஜலீலா மேடம்
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி...

வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு எனக்கு. நீங்க என்னோட குறிப்புக்கு பதிவு போட்டிருப்பது... இவ்ளோ நேரம் இத பாக்காம விட்டுட்டோமேனு தோணிடுச்சு...மிக்க நன்றி.. சந்தோஷமா இருக்கு.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி
உன்னோட வருகைக்கு மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா ட்ரை பண்ணி பாரு.. இந்த வாரம் வீட்டுக்கு போவேல்ல.. அப்ப செஞ்சு காமிச்சு உன் தங்கைய அசத்து.. சரியா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஊருக்கு போவேனானு தெரியலை, போனா அசத்திடறேன்க்கா!

அன்புடன்
பவித்ரா

ஹாய் ராதா வெண்டக்கா பக்கோடா சூப்பர் என் விருப்பட்டியில்
சேர்தாச்சு என் பொண்ணுக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி