சளி இருமல் குறைய

dear fnds,
என் பையன் ரொம்ப நெஞ்சு சளி& இருமல் ல அவஷ்த படுரான்.we r new to saudi.இந்த climate அவனுக்கு செட் ஆகல.ஏதாவது treatment சொல்லுங்க பா.he s suffering a lot.

தினமும் இரவு பாலில் மஞ்சள்பொடி மற்றும் மிளகுபொடி போட்டு பால் குடிக்க சொல்லவும்.

SUMI

இந்த காலநிலையில் பெரும்பாலும் சளி இருமல் வாட்டி எடுக்கிறது..

என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்..நிறைய பேருக்கு உதவலாம்..

இரண்டு நாட்கள் முன்பு எனக்கு பயங்கர சளி, இருமல், தலைவலி, குரல் கூட நன்கு மாறி விட்டது..

வீட்டில் மாத்திரை இல்லை.. தம்பி தினமும் வேலைக்கு சென்று வரும்போது பழங்கள் வாங்கி வருவான்..

எனக்கு ஆரஞ்சு பழத்தில் கமலா ஆரஞ்சு என்றால் அவ்வளவு பிடிக்கும்.. அன்று தம்பி ஆரஞ்சு, மாதுளை வாங்கி வந்தான்..

வாயை கட்டு படுத்த முடியவில்லை.. மதியம் ஒரு ஆரஞ்சு, மாலை ஒன்று, இரவு ஒன்று என்று மூன்று ஆரஞ்சு உள்ளே போய்விட்டது..

மறுநாள் தலைவலி, குரல் நார்மல் ஆகி விட்டது.. சளி குறைந்தது நன்கு உணர முடிந்தது.. மறுநாளும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டேன்.. சளி சுத்தமாக நீங்கி விட்டது..

எந்த மாத்திரையும் போடாமல் முதன் முதலில் சளி நீங்கியதை கண்டேன்..

ஆனால் ஒரு புத்தகத்தில் சளிக்கு எலுமிச்சை சாறு குடித்தால் நீங்கும் என்று படித்தேன்.. அதுவும் உண்மை தான் என்று புரிந்தது..

இனி சளி இருமல் வந்தால் ஆரஞ்சு, மாதுளை, திராட்சை அதிகம் உண்ணுங்கள்..

இயற்கை முறையில் உடலை பாதுகாத்து கொள்ளலாம்..
முயற்சி செய்து பாருங்கள்..

மேலும் சில பதிவுகள்