அரிசிமாவு தெவயம் செய்வது பற்றி...

என் பாட்டி சொல்வார்கள் தெவயத்தில் இனிப்பு மற்றும் காரம் செய்யலாம் என்று.அப்போது காதில் வாங்கவில்லை, பாட்டி இன்று இல்லை அம்மாவிற்குத் தெறியவில்லை. யாராவது தெறிந்தால் சொல்லுங்களேன்.

தெவயத்தில் இது என்னது. வெந்தயத்தில் தான் இனிப்பு, காரம் பத்தி கேட்குறீங்களா.

வினோஜா இல்லப்பா இது அரிசி மாவில் செய்வதுப்பா எனக்கு பாதிதான் நினைவிருக்குப்பா. சரியா தெரிந்தவர்கள் சொல்வாங்கன்னு நினைத்தேன்.

ரேணு..
எனக்கு தெவயம் அப்படின்னா என்ன என்றே தெரியலையேப்பா.. களைந்து உலர்த்திய அரிசிமாவா? நீங்கள் சொல்வதைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லைப்பா.. எனக்கு தெரிந்தவரை களைந்து உலர்த்திய அரிசிமாவிலிருந்துதான் எல்லாவகை இனிப்பு காரம்.. உதாரணமாக முறுக்கு தட்டை, சீடை இதெல்லாம் செய்யறோம்.தெரிந்தவர்கள் கண்டிப்பாக வந்து கூறுவார்கள். அது வரை காத்திருங்கள்.

பையன் நல்லாருக்கானா? அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து யாருக்கு? உங்க பையனுக்கு தானே. பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடினீர்களா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க பாட்டி எந்த ஊரில் இருந்தாங்கன்னு சொல்லுங்க. அந்த ஊர்க்காரங்களைக் கேக்கறேன். தெரியுமான்னு.
அன்புடன்
ஜெமாமி

ராதா நீங்கள் சொல்வது சரிதான்
1.அரிசியை ஊரவைத்து உலர்த்தி மாவாக்கிக்கனும்(தோசைமாவுபோல).
2.வாணவியில் எண்ணைவிட்டு மாவை ஊற்றி கிளரனும்.
3.திரண்டு வரும்போது சர்க்கரை போட்டு கிளரனும்.
4.பின் அடி ஒட்டாமல் வரும்போது இறக்கிவிடவும்.
இதில் அளவுகள் தெறியவில்லை.அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன் விசாரிக்கச் சொல்லி...

சரி.. விசாரித்துவிட்டு எப்படி செய்வது என்பதை எங்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். இம்மாதிரி மோர்கூழ் பண்ணுவாங்க. மோர் மற்றும் அரிசிமாவு கலந்து எண்ணெய் விட்டு மோர்மிளகாய் கடுகு தாளித்து கரைத்து வைத்திருப்பதை ஊற்றி கிளறுவார்கள். நீங்கள் இனிப்பு செய்வார்கள் என்று கூறுகிறீா்கள். அதனால் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்