அடுக்கு தும்பலுக்கு வைத்தியம் சொல்லுங்கள் ப்ளீஸ்

அனைவருக்கும் வணக்கம், நான் அறுசுவைக்கு புதிது,

நான் அடுக்கு தும்பல் மற்றும் சலியால் மிகவும் அவதிப்படுகிறேன், குளிர்ந்த climate, dust மற்றும் தாளிக்கும் வாசம் -- இவற்றினால் எனக்கு தும்மல் ஆரம்பிக்கிறது, வந்தால் அந்த நாள் முழுவதும் இருக்கிறது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இது சைனஸ் ஆரம்ப நிலையாக இருக்குமா, நான் என்ன செய்யலாம்

இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது இருக்கிறதா?

நானே கேக்கணும்னு நெனச்சுட்டு இருந்தேன். நீக்களே கேட்டுட்டீங்க.

எனக்கும் காலையில் எழும்போது தொடர்ந்து தும்மல் வருது. அப்படி தும்மல் வந்த பிறகு வாயின் மேல் அண்ணம் வலிக்குது. ஏதோ ஊருவது போல் இருக்கு. 10 நாளா இப்படி இருக்கு. ஏன்னு சொல்ல முடியுமா? யாருக்காவது இப்படி இருக்கா?

டாக்டர்கிட்ட போய் பார்த்துட்டேன். அவர் மருந்தும் டானிக்கும் கொடுத்து இது பிரச்சனையே இல்லைன்னு சொல்லிட்டார். ஆனா எனக்கு தான் அவதியா இருக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் இதே பிரச்சனை உள்ளது.யாராவது வழி தெரிந்தால் கூறுங்கள்.

அடுக்குத் தும்மல் பெரும்பாலும் அலர்ஜியால் வரும்.. சிலருக்கு ஹெரிடிட்டியா கூட வரும்.. எங்கம்மாவிற்கும் (தாத்தாவிற்கும்)கூட உண்டு.. குளிர் காலத்திலோ, தூசி அலர்ஜியாலோ இன்னும் அப்பப வந்துட்டு தான் இருக்கு.. அலர்ஜி ஏற்படுத்தும் சூழ்னிலைகளை தவிர்க்கனும்.. ஹோமியோபதி ட்ரீட்மெண்டில் ஓரளவு பலன் தெரிந்தது.. விட்டமின் சி நிறைந்த உணவு சேர்த்துக் கொண்டால் பொதுவாகவே சளி தொடர்பான பிரச்சினைகள் குறையும்..

வீட்டு வைத்தியம்னு எனக்கு எதுவும் தெரியலை.. ஆனால் பிராணயாமம் ENT பிரச்சினைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு...

ஹாய் கலை , ஆமீனா.... இது கண்டிப்பாக அலர்ஜியாத் தான் இருக்கும்...... அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்........ கிளைமேட், அல்லது குளிர் பொருட்கள் அருந்தும் போது..... அல்லது தொடர்ந்து சளி தொந்தரவு இருந்தால் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது..... சைனஸ் அல்லது ஆஸ்த்துமா, வீசிங் ஆரம்பமாகவும் இருக்கலாம்......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

காலையில் எழும்போது மட்டும் தொடர்ந்து தும்மல்னா அதுக்கு காரணம் உங்க ஊர் கிளைமேட் இப்ப சேஞ்ச் ஆகிறதுனால காலைல ஏ.சி யோட குளிர் அதிகமா இருக்கும். எழுந்தது கொஞ்சம் சுடு தண்ணி குடிங்கபா. முடிஞ்சா விடியறதுக்கு முன்னாடி எழுந்து ஏ.சி ய ஆஃப் பண்ணிடுங்க . இங்க எனக்கும் அப்படிதான் இருக்கு;)

Don't Worry Be Happy.

HI changdini, rengalakshmi, jayalakshmi

பதில் அளித்ததுற்கு நன்றி, நான் விட்டமின் சி உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்கிறேன், ஆரஞ்சு சாத்துக்குடி சேர்க்கலாம் என்று கேள்விப்பட்டேன், ஆனால் cold increase ஆயிடாதா?

காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கவும் என் அனுபவதில் சொல்கிறேன்

வைத்தியம் சொன்ன சாந்தினி,ரங்கா, ஜெயா, ராபியத்துல் பசரியா அனைவருக்கும் மிக்க நன்றி!

நீங்கள் சொன்னது போல் இது காலநிலை மாற்றத்தின் விளைவு தான். நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்.

ஜெயா இங்கே குளிர் காலம் தொடங்கியதால் சுத்தமாக பேனோ,ஏசியோ போடுவதில்லை. அதானால் கொஞ்சம் பரவாயில்லை. நீங்கள் சொன்னது போல் தான் 4 டூ 6 காலை நேரம் ஏசியில் அதிக குளிர் வருகிறது. அப்போ தான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன்.

இப்போ எழுந்ததும் சுடு நீர் தான் :)))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்
எங்களது வெப்சைட் முகவரி
http://www.grannytherapy.com/tam/category/தலை/தும்மல்/

.....நன்றி !

மேலும் சில பதிவுகள்