கர்ப்ப காலத்தில் மருத்துவரை மற்றலாமா?

அன்பார்ந்த தோழிகளே,
எனக்கு உதவுங்கள், எனக்கு இது 3 வது மாதம். நான் இதுவரை ஒரு மருத்துவரையே பார்த்து வருகிறேன் ஆனால் அவ்ர் இது வரை சாப்பிட வேன்டாம் என எதயும் சொல்லவில்லை எல்லாவட்ரயும் சாப்பிடலாம் மற்றும் எல்லா வேலைகளையும் செய்யலாம் என கூறுகிறார் ஆனால் என் கணவர் தினம் ஒரு அப்பிள் சாப்பிடு மாதுளை சப்பிடு என்று கூறுகிறார் வெய்ட் தூக்க வேன்டாம் இரு சக்கர வாகனம் ஓட்ட வேன்டாம். எங்கள் சொந்த நிருவனத்தில் தான் நான் வேலை செய்கிரேன். வீட்டிற்க்கும் அலுவலகத்துக்கும் 2 கி மி தூரம் தான். நான் மதிய உனவிற்கு வீட்டிற்க்கு செல்கிறேன் அவர் அதை வேன்டாம் என்கிறார். எனக்கு வீட்டில் சப்பிடுவது தான் பிடித்திறுக்கிரது. என்னால் எதயும் சப்பிட முடியவில்லை. மருத்துவரும் என்னை எதயும் சாப்பிட சொல்லி வர்ப்புறுத்தவில்லை. இதனால் மருத்துவர் சரியில்லை நாம் வேரு மருத்துவரை பார்க்களாம் என்கிறார். 3 மாதங்களாக ஒரு கருத்துவரை பார்த்துவிட்டு திடீரென இன்னொரு மருத்த்வரை பார்க்களாமா?
எனக்கு திருமணமாகி இன்றோடு 11 மாதங்கள் 20 நாட்கள் ஆகின்றது. எனக்கு ஏர்க்கனவே மாதவிடாய் ப்ரசனை இருந்ததால் இப்போது பார்க்கும் மருத்துவரையே ஆரம்பத்திலிருன்தே பார்த்து வருகிரேன். இப்பொது அவரை மாற்றினால் எனக்கு வேரு மருத்துவர் சரியான் சிகிச்சை தர முடியுமா?

என சந்தேகத்திற்க்கு பதில் கூருங்கள் தோழிகளே.

இப்படிக்கு
priyasaravanan

உங்கள் மருத்துவர் கூறுவதில் எந்த தப்பும் இல்லை. கற்ப காலத்தில் எல்லாவற்றையும் சாப்பிடலாம். பெரியவர்கள் சூடு என்பதால் தான் சிலவற்றை சாப்பிட வேண்டாம் என்றனர். அப்படிப்பட்ட உணவு சாப்பிடும் போது உங்கள் உடலுக்கு ஒத்து வரவில்லை என்றால் விட்டு விடவும். இல்லாவிடில் எல்லாம் சாப்பிடலாம். உங்கள் கணவர் உங்கள் மேல் உள்ள பிரியத்தினால் அப்படி சொல்கிறார். அவருக்கு பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். மருத்துவருக்கு எல்லாம் தெரியும். நடப்பது வண்டி ஓட்டுவது எதுவுமே தப்பில்லை. ஏற்கனவே வண்டி ஒட்டி இருகிறீர்கள் என்றால் ஒட்டவும். அதற்காக புதிதாக எதையும் இப்போது செய்ய வேண்டாம். மற்றபடி எல்லாம் செய்யலாம் எல்லாம் (முடிந்தால்) சாப்பிடலாம். இப்பொழுது எந்த மாதிரி உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்று மன்றத்தில் உள்ள கர்பிணி பக்கத்தில் போய் பார்க்கவும். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ப்ரியா உங்கள் கணவர் உங்கள் மீது உள்ள அக்கறைல சொல்றார்
அத கேளுங்கள்... மருத்துவர் உங்கள சாப்பிட வேண்டாம்னு எந்த உணவையும் குறிப்பிடலையே அதுனால குழப்பம் வேண்டாம்,மருதுவர் சொன்ன எல்லா உணவுகளையும் சாப்பிடுங்க அதுல உங்கள் கணவர் சொல்லும் உணவுகளையும் உள்ளடக்குங்கள்,இந்த மாதிரி நேரத்துல மருத்துவர மாத்துரது நல்லதில்ல ஏன்னா ஒரு நாள் விஷயம் இல்ல பத்து மாசம் உறவு ஒரே மருத்துவர்கிட இருக்குறதுதான் நல்லது....சாப்பாடுனு மட்டும் இல்லாம உங்க மனசயும் சந்தோஷமா வச்சுகோங்க......குழந்தை ஆரோக்கியமா பிறக்க வாழ்த்துக்கள்.......

அன்பு தோழி உங்கள் பதிலுக்கு நன்றி. நான் எல்லாவற்றையும் சாப்பிடத்தான் நினைக்கிறேன் ஆனால் சாப்பிட முடியவில்லை. குறி ப்பாக இப்பொது தான் வாந்தி வர ஆரம்பித்திருக்கிறது. சாப்பிட முடியததற்க்கு இதும் ஒரு காரணம். இருந்தாலும் உங்கள் ஆலோசனைப்படி நான் முடிந்தவரை சாப்பிட முயர்ச்சிக்கிறேன்.உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

உங்கள் ஆலோசைக்கு மிக்க நன்றி மீரா, நான் அவரிடம் எடுத்து சொல்கிரேன். எனக்கும் மருத்துவரை மாற்றுவதில் விருப்பம் இல்லை. உங்கள் பதிவிற்க்கு மிகவும் நன்றி.

வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். நன்றி
உங்கள் வாழ்த்துக்களோடு என் குழந்தை நல்லபடியாக பிறக்க இறைவனை வேண்டுக்றேன்.

வாழ்த்துக்கள் ப்ரியா
ப்ரியா மற்ற ஏதாவது நேரத்திலோ அல்லது உடம்புக்கு முடியாமல் இருக்கும் போது ஒரு டாக்டர் இல்லைனா இன்னொரு டாக்டரை பார்ப்பது நல்லது.
கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து காண்பிக்கும் டாக்டருக்கு தான் உங்களை பற்றின முழு விபரம் தெரியும் அப்படி இருக்கும் போது நீங்கள் டாக்டரை மாற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து. டாக்டர் எல்லாவற்றையும் சாப்பிடலாம் என்றாலும் நீங்கள் நல்ல ஹெல்தியான உணவாகவே சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய பழங்கள், நார் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். சூடானவற்றை தவிர்க்கவும். நம்ம அறுசுவைல நிறைய தோழிகள் இதை பற்றின ஆலோசனைகள் கொடுத்து இருக்காங்க. ஓய்வு நேரத்தில் அதை எல்லாம் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் உங்கள் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
இப்போது நீங்க 3 மாதம் என்று சொல்றீங்க கணவர் சொல்வது போல் கொஞ்சம் நாட்களுக்கு 2wheeler ஓட்டாமல் இருக்கலாமே

நன்றி கௌரி டூ வீலர் ஓட்டுவதை நிறுத்த வேன்டுமானால் நான் ஆஃபீஸ் வர முடியாது. நான் ஒரு வருடமாக டூ வீலர் ஓட்டுகிறேன். இதனால் எந்த ப்ரச்சனையும் இல்லை. மதிய உணவிர்க்கு வீட்டிர்க்கு போக வேண்டாம் என்கிறார். வேண்டுமானால் அதை மாற்றிக்கொள்கிறேன். வாழ்த்துக்கு மீண்டும் நன்றி.

ப்ரியா நான் அடியோடு டூ வீலரே ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை, இது 3 மாதமா இருக்கிறதே இப்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாமே அடுத்தடுத்த மாதங்கள் ஓட்ட ஆரம்பிக்கலாம் இப்போ உங்களுக்கு கொஞ்சம் ரெஸ்டா இருக்குமேனு சொன்னேன் தவறு ஏதும் இருந்தால் சாரி.

ப்ரியா, முதலில் தாயாகப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) நான் இங்கு என் அனுபவத்தை சொல்கிறேன்.நான் கர்ப்பமாக இருந்த போது என் வீட்டருகே ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் மட்டும்தான் இருந்தார். நானும் வேறு வழியின்றி அவரிடம் சென்றேன். அவர் பணத்துக்கு முக்கியத்துவம் தரும் மருத்துவர். கையில் பணத்தை பார்த்தால்தான் மேற்கொண்டு மருத்துவ அறிவுரைகளை தருவார். அவரும் நீங்கள் சொன்ன மருத்துவர் போல் தான். அவராக முயற்சி எடுத்து எந்த உணவுகளை உண்ண வேண்டும் எதை உண்ணக்கூடாது என்ற அடிப்படை அறிவுரை கூட தரவில்லை. பணம் தான் கரைந்தது. முதல் ஸ்கேன் மூன்றாம் மாதம் எடுப்பார்கள். அப்போது அவருக்கு தெரிந்த எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்கு எழுதித் தந்தார். நான் முதல் முதலில் என் மாமியார் வீட்டுக்கு அருகில் இருந்த மருத்துவரிடம் கன்பார்ம் செய்தேன்.அவர் மிகவும் நன்றாக பார்த்தார். என் மாமியார் வீடும் அம்மா வீடும் இந்தக் கோடி அந்தக்கோடியில் இருக்கிறது. முதலி பார்த்த டாக்டர் எனக்கு இரட்டை குழந்தைகள் என்பதால் பஸ் பிரயாணமோ, அலைச்சலோ கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த மருத்துவர் என்னடாவென்றால் பணத்தை குறிக்கோளாக வைத்து எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இவருக்கு தெரிந்த ஸ்கேன் சென்டருக்கு போய் ஸ்கேன் எடுத்து வரச் சொன்னார். இவர் போன்ற பணத்தை குறிக்கோளாக கொண்ட மருத்துவர் எப்படி நோயாளியின் நோயையோ/கர்ப்பிணிக்கு நல்ல முறையில் பிரசம் பார்த்து குழந்தையையோ தரமுடியும்.

நான் சின்ன வயதில் இருந்தே ஒரு குறிப்பிட்ட டாக்டரிடம் மட்டும் தான் பார்த்து வந்தேன். என் குடும்பத்தில் அனைவரும் அவரிடம் தான் பார்ப்போம். அவர் இப்போது தொலைதூரத்தில் வீடு பார்த்து போய்விட்டார். அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியாததால் இந்த டாக்டரிடம் பார்த்தோம். எனக்கு மட்டும் உள்ளுக்குள் உறுத்தலாகவே இருந்தது. இது நம் தனிப்பட்ட விஷயம் தலைவலி, ஜூரம் என்றாலும் பரவாயில்லை குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம், நமக்கு சந்தேகம் என்று பட்டால் மாற்றுவதில் தவறேதும் இல்லை. கர்ப்பக் காலம் மன உளைச்சலோடு நிம்மதியில்லாம கழியக்கூடாது. அதில் நான் தெளிவாக இருந்தேன். இதற்காக தனியாக ஒரு கேப் பேசி நான் பழைய டாக்டரிடமே சென்று மாதாந்திர செக்கப் செய்துக் கொண்டேன். அவர் மிகவும் அன்பாக,பண்பாக, உண்மையான கவனிப்போடு கவனித்து எனக்கு இரண்டு பொக்கிஷங்களை பத்திரமாக மீட்டுத் தந்தார். ஒரு மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதரிடம் மருத்துவம் பார்க்கிறோம் என்ற திருப்தியோடும், சந்தோஷத்தோடும் என் கர்ப்ப காலத்தை நிம்மதியாக கழித்தேன். இன்று நான் வெளிநாட்டில் உள்ளேன். என் குழந்தைகளுக்கு இரண்டரை வயதாகிறது. குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நலம் சரியில்லையென்றாலும் அந்த மருத்துவருக்கு போன் செய்து ஆலோசனை கேட்ட
பின்பே மருந்துகள் தருவேன்.

தோழியே, நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவரின் உண்மையான குணாதிசயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரியும். நாங்கள் காதால் கேட்டவைகளுக்கு மட்டுமே ஆலோசனைகள் தர முடியும். அதனால் உங்களுக்கு தெரிந்த வேறு நல்ல மருத்துவர் இருந்தால் அவரை அணுகி அவரின் ஆலோசனையின்படி பிரசவம் பார்க்கவும். நீங்கள் எப்போது மருத்துவரை பார்க்கச் சென்றாலும் உங்களுடைய முழு மருத்துவ கேஸ் ஹிஸ்டரியையும் மறவாமல் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து புது மருத்துவர் அறிந்து கொள்ள சிரமம் இல்லாமல் இருக்கும்.

இந்த நேரத்தில் அநாவசியமாக எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நல்ல சத்துள்ள உணவாக சாப்பிடுங்க.மனதிற்கு அமைதியான இசையை கேளுங்கள். கூடுமானவரை தனியாக இருக்காமல் யாராவது உங்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக இருந்தால்தான் கண்டதையும் யோசிக்க தோன்றும். ஆன்மீகத்தில் விருப்பம் இருந்தால், ஆன்மீக புத்தகங்களை படியுங்கள். அழகான பாப்பா போட்டோக்களை வீட்டில் கண்ணில் படும்படி ஆங்காங்கே மாட்டி வையுங்கள். இவையெல்லாம் உங்கள் குழப்பங்களை தவிடுபொடியாக்கும் மந்திரக்கோல்கள்.

உங்களுக்கு சுகப்பிரசவமாக இறைவனை வேண்டுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரியா வாழ்த்துக்கள் எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை என்றாலும். நானும் கல்ப்ஸ் சொல்ல வந்ததை தான் சொல்ல வந்தேன் அதுகுள்ள நான் சொல்ல நினைத்தை என் தோழி சொல்லிட்டாங்க. எங்களுக்கு உங்கள் மருத்துவரை பற்றி நீங்கள் சொல்லி தான் தெரியும் உணவு விஷயத்தை தவிர மற்ற விஷயங்களிலும் உங்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனை தருகிறார் உங்கள் மேல் எந்த அளவுக்கு அக்கரை எடுத்துக் கொள்கிறார் என்பதை எல்லாம் கவனிக்கவும். வெளியில் அந்த டாக்டரை பற்றின அபிப்ராயத்தை கேளுங்கள். அதன் பின்னரே முடிவெடுங்கள் அதுவும் சீக்கிரத்தில் எடுத்து விடுங்கள்.

மேலும் சில பதிவுகள்