கடலை வேகவைத்தல்

காலையில் கடலை நனையப்போட மறந்திட்டேன், 6 மணித்தியாலம் ஊறினால் கடலை அவியுமா? இல்லாட்டில் எப்படி செய்வது, நெட்டில் பார்த்தேன் ஒன்றும் இல்லை, தயவு செய்து கூறுங்கள்,

என்னோட கேள்வி ஒருத்தர் கண்ணுக்கும் படலையா????
பார்த்துட்டிருக்கேன்பா...

கொஞ்சம் சோடாப்பு இல்லைனா அஜினோமோட்டொ போட்டு வேகவைங்கபா ..........

Don't Worry Be Happy.

ரொம்ப நன்றி, பதில் தந்தமைக்கு,சோடாப்பு, என்றால் அப்பச்சோடாவா, மன்னிக்கனும் சந்தேகம் அதுதான் கேட்டேன்..... அஜினோமோட்டோ தற்சமயம் இல்லை, சுடு நீரில் ஊறவைத்தால் எப்படி....

முதல்ல ஸ்வீட் எடுங்கோ ! கொண்டாடுவோம்! ஏன்னா நானும் அதே மாறி மறந்துட்டேன்!

அப்புரம் என்ன பண்ணிண்ணேனா ! ஜலத்தை நன்னா கொதிக்க வெச்சு ஹாட் பேக்ல 2 மணி ஊற வெச்சு குக்கர்ல சவுண்ட் வந்த அப்புரம் 15 நிமிஷம் வேக வைச்சேன்!!

நான் சொன்னது கொண்டை கடலை! சன்னா கடலை!நீங்க எந்த கடலை சொல்றேள்1

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ம்ம்ம்ம், மாமிக்கு கிண்டலாய் இருக்குப்போல என்னுடைய நிலமை,:)
நான் கொண்டக்கடலை பற்றித்தான் சொன்னேன்,, நல்ல சுடு நீரில் ஊறவைத்திருக்கேன்,பார்ப்போம்...

ஆமாம் நானும் சொல்ல மறந்துட்டேன்;)
சுடு தண்ணியிலும் ஊற வைக்கலாம்.

Don't Worry Be Happy.

அடடா! நீங்க நில கடலை பருப்பை சொல்றேளோனு நினைச்சேன்!

மாமின்னா கிண்டல்னு ஒரு பேராயுடுத்து அறுசுவைல!

கலி முத்திடுத்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

காய் முத்தினா கடைக்கு வரும். கலி முத்தினா எங்கே போகும்?

நேக்கு பிடிச்ச கவிதாயினி பேர் வெச்சுண்டு இருக்கேளே!

கலி முத்தினா இப்படி மாமிகிட்ட கேள்வியா வரும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஓ அப்படியா... மாமி சரஸ்வதி பூஜைக்கு ரெடியாயிட்டேளா

மேலும் சில பதிவுகள்