தோழிகளே, நான் சமையல்ல L.K.G இப்பொழுதுதான் போகிறேன். இட்லி மாவு நான் எப்படி அரைதாலும் கல்லாகவே வருகிறது.பக்குவம் சொல்லுங்கள்.PLZ.
தோழிகளே, நான் சமையல்ல L.K.G இப்பொழுதுதான் போகிறேன். இட்லி மாவு நான் எப்படி அரைதாலும் கல்லாகவே வருகிறது.பக்குவம் சொல்லுங்கள்.PLZ.
எனக்கும் தான்
எனக்கும் இட்லி மாவு எப்படி அரைத்தாலும் கல்லாட்டும் வருது என்ன பன்ன தெரியல. நான் 4கப் அரிசிக்கு 1கப் உளுந்து( முழு உளுந்து) போடுகிரேன். மாலை 6மணிக்கு ஆட்டுகிறேன். கிரைண்டரில். ஆனால் காலைல இட்லி சுடும்போது கல்லாட்டும் இருக்கு. என்ன பன்னலாம்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
ஹாய் சோனியா இட்லிக்கு
ஹாய் சோனியா இட்லிக்கு 1 கிலோக்கு அரிசிக்கு 200கி உதயம் உளுந்து(அ) ஜெயம் உளுந்து போட்டு அரைக்கவும்.
வாழு இல்லை வாழவிடு
புவனா, சோனியா
நீங்கள் இரண்டு பேரும் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
பொதுவாக சில வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த சீதோஷ்ண நிலைக்கு இட்லி சரியாக வருவதில்லை என்று சொல்வார்கள். மேலும் நல்ல இட்லி அரிசியும் கிடைப்பதில்லை என்பார்கள்.
4 பங்கு புழுங்கல் அரிசி
1 பங்கு உளுத்தம்பருப்பு
இதில் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.
அரிசி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு குடையக் குடைய அரைக்க வேண்டும். முதலிலேயே தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்க வேண்டும். உளுந்து நன்கு மசிந்ததும் 7-8 ஐஸ் கட்டிகளை சேர்த்து அரையுங்கள். ஒரு முக்கால் மணி நேரம் அரைத்ததும் உளுந்தை எடுத்துவிட்டு அரிசியைப் போட்டு அரைக்கவும். அரிசியை ரொம்ப வழு வழுப்பாக அரைக்காமல் சிறிது நற, நறவென்று அரைத்து உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மாவு பொங்கி வந்ததும் 1 ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து நன்கு கலந்து இட்லி வார்க்கவும்.
2 கைப்பிடி வெள்ளை அவலை ஊறவைத்து அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைத்தாலும் இட்லி நன்றாக வரும்.
வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
அன்புடன்
ஜெமாமி
thanks maami
ரொம்ப நன்றி மாமி. நீங்க சொன்னபடியே செய்து பர்க்கறேன். சோனியா நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க சரியா?
நன்றி மாமி
ரொம்ப நன்றி மாமி. நான் அளவு சரியா தான் போடுகிரேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது பக்குவமாக அரைப்பது இல்லை என்று, இனி நீங்கள் சொல்லுவது போல் அரைத்து பதில் கூறுகிறேன். பதில் தந்த 2பேருக்கும் நன்றி. நல்ல வேளை ஆமினா இங்கு இல்ல இருந்தால் சந்தேக சோனியானி பட்டம் கொடுத்துடுவாங்க ஹி ஹி
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
நன்றி sumichezhiyan
thanks ba
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா
சந்தேக சோனியானி பட்டம் கொடுத்துடுவாங்க ஹி ஹி//
இல்ல ’சந்தேக சோனியாஜி’ன்னு பட்டம் கொடுத்துடுவாங்க.
அன்புடன்
ஜெமாமி
புவி, ஜெமாமி, சோனி
இந்த பிரச்சனைக்கு தான் நான் மாவு கடையில் வாங்கி இட்லி ஊத்திடுவேனாக்கும், இட்லி நன்னா பொது பொதுனு வரும். :))
அன்புடன்
பவித்ரா
பவித்ரா
பவித்ரா நான் இருக்கறது பெங்களூர்ல. இங்க கடைல வாங்கற மாவும் அப்படிதான் இருக்கு பா.
புவி
அப்படின்னா, நீங்க ஜெமாமி சொன்னதையே ட்ரை பண்ணுங்க. சில சமயம், இட்லி ரொம்ப நேரம் வைத்துட்டா கூட அப்படி கல்லு மாதிரி இருக்கும். ஒரு 2 நிமிடம் முன்னாடியே வெந்திருக்கானு பாருங்களேன். எப்பவும் 8 நிமிஷம் வைப்பீங்க என்றால் ஒரு 7 இல்லைனா 6 நிமிஷத்துக்கு வெந்திருக்கான்னு திறந்து பாருங்களேன்.
அன்புடன்
பவித்ரா