வெள்ளையாக முறுக்கு சுட கூறமுடியுமா

முறுக்கு சுட்டால் சிவந்து போகுது . வெள்ளையாக எடுத்தால் மொரு மொரு வென்று இல்லை. யாரவது வெள்ளையாக முறுக்கு சுட கூறமுடியுமா

முறுக்கு சுடும்போது தீயின் அளவை மிதமாக வைக்க வேண்டும். அதிக தீயினை வைத்தால் முறுக்கு வேகுவதற்குல்லையே சிவந்துவிடும். எனவே உங்களின் தீயின் அளவை கவனிக்கவும்

ஏமாறாதே|ஏமாற்றாதே

ரம்யா முறுக்கு சுடும் மாவுடன் தேங்காய் பால் சேர்த்து முறுக்கு சுடவும்..முறுக்கு பிழியும் hole பெரியதாக இருந்தால் முறுக்கு மொரு மொரு வென்று வராது...medium size hole use பண்ணுங்க...தீயையும் medium ஆக வைக்கவும்...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

உங்க கேள்விக்கு தகுந்தது போல் தலைப்பை மாற்றுங்க. எல்லாரும் உதவி செய்யுங்கன்னு தலைப்பு கொடுத்தா நாங்க எப்படி தேவைபடும் கேள்விகளை தேடுவது?

சிரமம் பார்க்காமல் தலைப்பை மாற்றுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தலைப்பை மாற்றி விட்டேன் அமீனா

பிரியதர்ஷினி தீயின் அனல் மிதமாக தான் வைத்திருந்தேன் .

லக்ஷ்மி தேங்காய் பால் ஊற்றி செய்யவில்லை. செய்து பார்கிறேன் . 1 .5 படி அரிசி மாவிற்கு எவ்வளவு கப் தேங்காய் பால் ஊற்றனும் . முறுக்கு அச்சு மீடியம் சைஸ் ஹோல் தான்

நன்றி ரம்யஸ்ரீனி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முறுக்கு சுடுவதற்க்கு மாவு பிசைந்த கொஞ்ச நேரத்திலேயே சுட வேண்டும்,மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்தாலும் முறுக்கு சிவக்கும்.

Kalai

ரம்யா நீங்க மாவு பிசையும் போது தண்ணீர் விடாமல் தேங்காய் பால் மட்டும் சேர்த்து பாருங்க..முருக்கு சாப்பிட சுவையாக இருக்கும்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

ரம்யா
நீங்க முறுக்கு மாவு கடையில் வாங்கி செய்வதென்றால் தேங்காய்பால் சேர்த்து பிசைந்து செய்யலாம். அப்படி முறுக்கு செய்யும்போது அடுப்பை மிதமான தணலில் வைத்து செய்தால் நன்றாக வரும்.

ஆனால் நீங்கள் அரிசிமாவு உளுந்து மாவு சேர்த்து பிசைந்து செய்பவர் என்றால், உளுந்தை சிவக்க வறுக்கக்கூடாது. லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்தால் முறுக்கு மொறு மொறு என்று நன்றாக வரும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ரம்யா. எனக்கும் அவ்வளவாக முறுக்கின் பக்குவம் தெரியாது. நான் நம்ம அறுசுவைய பார்த்து செய்யலாம் என்று இந்த இரண்டு செய்முறைகளையும் எடுத்து வைத்து இருக்கேன் ரம்யா இது உங்களுக்கும் உதவுதானு பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/2617
http://www.arusuvai.com/tamil/node/9550

மேலும் சில பதிவுகள்