பணத்தை எப்படி பெருக்குவது

ஹாய் பிரண்ட்ஸ்,
என்னோட கணவர் கல்ப்ல வேலை பார்க்குறாரு,நாங்க கல்ப்ல இருக்கோம்,இங்க சம்பாதிக்கிற பணத்தை பேங்க்ல போட்டாலும் வட்டி எதுவும் கிடைக்காது.சம்பாதிக்கிற பணத்தை எப்படி பெருக்கிறது.பாதுகாப்பாகவும் இருக்கணும்,ஷேர்மார்க்கெட்ல ரிஸ்க் அதிகம் இருப்பதால் அதில் இஷ்டம் இல்லை,மியூச்சுவல் பண்ட்ல கொஞ்சம் போட்டு இருக்கு,L.I.c ல அவ்வளவு லாபம் இருப்பதில்லை பல வருடங்கள் காத்து இருக்க வேண்டி இருக்கிறது.வேறு ஏதாவது ஐடியா இருந்தால் கூறுங்கள் தோழிகளே

மல்லி, நீங்க ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ணலாம். மார்க்கெட் நிலவரம் பார்த்து அந்த இடத்தை விற்றாலும் நல்ல லாபம் கிடைக்கும். கோல்ட் காயின் வாங்கியும் தங்கமாக சேமிக்கலாம். இது இரண்டும் எனக்கு தெரிந்த சிறந்த வழிகள். நம் தோழிகள் வருவார்கள் சூப்பர் ஆலோசனைகளுடன். காத்திருங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குழந்தைகளுக்கான சேவிங்ஸ் திட்டங்களை பற்றியும் தெரிந்தவர்கள் சொல்லுங்கலேன்.வட்டி வேண்டாம் பணம் பத்திரமாக இருந்தால் போதும்.

குழந்தைகளுக்கான சேவிங்ஸ் திட்டங்களை பற்றியும் தெரிந்தவர்கள் சொல்லுங்கலேன்.வட்டி வேண்டாம் பணம் பத்திரமாக இருந்தால் போதும்.//

பணம் பத்திரமாக இருந்தால் போதும்ன்னா, பாதுகாப்பான சேமிப்புக்கு தபால் நிலையம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் போட்டு வையுங்கள்.

அன்புடன்
ஜெமாமி

ம். சீரியஸா பேசிட்டு இருக்கீங்க. இமாவைத் திட்டாம ஒரு செக்கன் கொஞ்சம் ரிலாக்ஸ்டா சிரிங்க. ;)

என் பதினாறாவது பிறந்தநாளன்று என் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு வாழ்த்திதழ் வந்தது. அட்டையில் 'உங்களிடம் உள்ள பணம் இரண்டு மடங்காக வேண்டுமா?' என்கிற கேள்வியோடு. ஆர்வத்தோடு விரித்துப் படித்தால்... பணக்கட்டை இரண்டாக மடித்துப் பிடித்து எண்ணட்டுமாம். ;((

‍- இமா க்றிஸ்

என்னப்பா வித்தியாசமா எதாவது புதுசா ஐடியா குடிப்பீங்கன்னு பார்த்தா,இப்படி ஜோக் அடிச்சிட்டு இருக்கீங்க??உருப்படியா யாராவது சொல்லுங்க

கல்பனா சொன்னது போல கோல்ட் coin வாங்கி சேமிக்கலாம். நான் முன்பு சில்வர் coin சேமித்தேன்.

ஹசீன்

Hi All,

Sorry for typing in english, as i forgot how i typed earlier in Tamil. I had listed down ways to multiply your money in a safe method.

1. Invest in mutual funds through Systematic investment plan route (saving on monthly basis, term and amount you can afford is upto you. Invest in equity oriented mutual funds and they are very good in long run (say after 5 years)

2. Invest in Public Provident Fund (PPF). It is one of safest and good interest earning option. Interest and withdrawal from PPF is tax free and it is very good for long term planning.

3. Invest in bank Fixed deposit or Government organisations like Tamil nadu Powerfin, etc for longer term like more than 5 years. They are giving good rate of interest more than nationalised banks. You can select your option.

Thanks,

Viji

Be the Best

//மல்லி, நீங்க ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ணலாம்//

வழிமொழிகிறேன். :-) இன்றைய தேதிக்கு மிக நல்ல இன்வெஸ்ட்மெண்ட்.. நான் வேலை பார்த்த காலங்களில் சம்பாதித்த கொஞ்ச பணத்தை சாப்பாட்டிற்கும், ஊர் சுற்றுவதற்கும் செலவு செய்து கொண்டிருக்க, என்னைவிட குறைவாக சம்பாதித்த நண்பன், வேளச்சேரியில் குறைந்த விலையில் ஒரு இடம் வாங்கிப் போட்டான். (நான் சொல்வது 97,98ல்). இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தை விற்று, அந்த பணத்தை மட்டும் வைத்து, இன்று சொந்தமாக ஒரு பெரிய வீடு, கார், இரண்டு பள்ளிக்கூடங்கள் என்று பெரிய ஆள் ஆகிவிட்டான். வேறு எதில் முதலீடு செய்திருந்தாலும் இந்த அளவிற்கு மதிப்பு கூடி இருந்திருக்காது.

இன்றைக்கு ஒரு கிராமத்தில் இடத்தை வாங்கி, சிறிது காலம் கழித்து விற்றாலும், வங்கி வட்டியைவிட அதிக லாபத்தில் விற்கலாம். எனவே மிகச்சிறந்த இன்வெஸ்ட்மெண்ட் ரியல் எஸ்டேட் தான்.. இதிலும் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்று இருக்கின்றது. சில இடங்களில் வாங்கினால் வேல்யூ அதிகமாக காலம் அதிகம் எடுக்கும். சில இடங்களில் காலம் எடுத்தாலும் வேல்யூ அதிகமாகாது. எந்த இடத்தில் இப்போது குறைவாக கிடைக்கின்றது, எந்த இடத்தில் மிக விரைவாக வேல்யூ அதிகமாகும், எந்த அளவிற்கு அதிகமாகும் என்று ஆராய்ந்து பார்த்து இன்வெஸ்ட் செய்தால் அது விரைவிலேயே பலமடங்காகும். அதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மெண்ட்.

என்னுடன் நெருக்கமாக உள்ள அறுசுவை உறுப்பினர்கள் சிலரும், என்னுடைய வெளிநாடு வாழ் நண்பர்கள் சிலரும் முன்பு இதைப் பற்றி நிறைய பேசி இருக்கின்றோம். கூட்டாக இடம் வாங்குவது குறித்து நிறைய திட்டமிட்டோம். எல்லோரும் வெளிநாட்டில் இருப்பதால், இடம் பற்றி ஆராய்வது, மற்ற விசயங்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்று எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிட்டார்கள். என்னுடைய மற்ற வேலைகளினால் அதில் முழுமூச்சாக இறங்க முடியவில்லை. சமீபத்தில் மீண்டும் அந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்து, நிறைய சர்வே எடுத்து வருகின்றோம்.

எங்களுடைய டார்கெட் பெரிய சிட்டி அல்ல. சென்னை போன்ற இடங்களில் இன்று இடம் வாங்குவதை யோசித்து பார்க்க முடியாது. இப்போது திண்டிவனத்தை சென்னைக்கு அருகில் என்று சொல்லி, அங்கே ப்ளாட் போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் பிற்காலத்தில் வேல்யூ ஏறும். இருந்தாலும் எங்களது திட்டப்படி, பெரிய சிட்டிகளை விட்டுவிட்டு, அடுத்த நிலையில் உள்ள நகரங்களை எடுத்துக் கொண்டு, அங்கே இன்வெஸ்ட் செய்வது பற்றி ஆராய்ந்து வருகின்றோம். ஒரு மாதமாக அது சம்பந்தமாக அலைந்து நிறைய தகவல் திரட்டி இருப்பதால், ஒரு ரியல் எஸ்டேட் பிஸினஸ் தொடங்கும் அளவிற்கு இந்த துறை பற்றி நிறைய ஐடியாஸ் கிடைத்துள்ளது :-) அதனால்தான் என்னால் இந்த அளவிற்கு உறுதியாக சொல்ல முடிகின்றது. மற்ற எந்த இன்வெஸ்ட்மெண்ட்ஸை விடவும் சிறப்பானது, அதிக லாபகரமானது இதுதான் என்பது என்னுடைய கருத்து.

Hi,

My wife is a regular visitor of your site and I do visit this site whenever time permits. Thanks for your great job. Right now I am in US. I am also planning to invest part of my savings in real estate and I would really appreciate your suggestion on this smart investment. Thanks in advance.

Shyam S

நானும்(நாங்களும்) இடம் தேடும் பணியில்தான் இருக்கின்றோம். இந்த கட்டத்தில் பெரிதாக ஆலோசனை கொடுக்க இயலும் என்று தோன்றவில்லை. நாங்கள் என்ன திட்டமிட்டுள்ளோம், என்ன ஆராய்ந்து வருகின்றோம் என்பது பற்றி வேண்டுமானால் சுருக்கமாக கூறுகின்றேன்.

நான் முன்பே குறிப்பிட்டதுபோல், பெரிய நகரங்கள் (சென்னை, கோவை,மதுரை..) இவற்றில் இன்வெஸ்ட் செய்ய இப்போது முயற்சி செய்யப் போவதில்லை. இப்போதைக்கு அங்கு இடம் வாங்க வேண்டுமென்றால் அதிகம் இன்வெஸ்ட் செய்ய வேண்டி இருக்கும். அதற்கு எங்களுக்கு வசதி இல்லை. :-) அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வேகமாக வளர்ச்சியுற்று வரும், இரண்டாம் நிலை நகரங்களை (மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில நகரங்கள்) கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். எந்த எந்த ஊர், என்ன அளவிற்கு வளர்ச்சியுற்று வருகின்றது, அங்கே என்ன திட்டங்கள் போடப்பட்டுள்ளன, என்ன மாதிரியான சாலை வசதியுள்ளது, கடந்த சில வருடங்களில் நில மதிப்பு விகிதம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, தண்ணீர் பிரச்சனை, வேறு என்ன பிரச்சனைகள், ஆதாயங்கள் உள்ளன... இப்படியாக ஒரு 30 க்கும் மேற்பட்ட கேள்விகளை பட்டியல் இட்டுக்கொண்டு, குறிப்பிட்ட சில நகரங்களை ஆய்வு செய்து, ஒவ்வொன்றுக்கும் விடை கண்டு குறித்து வருகின்றோம். கூடவே அந்த நகரங்களில் கிடைக்கும் இடங்கள் குறித்தும், நில மதிப்பு குறித்தும் தகவல்கள் திரட்டி வருகின்றோம்.

இந்த ரிப்போர்ட் தயாரானதும், எந்தெந்த நகரங்களில் எந்த அளவில் இன்வெஸ்ட் செய்வது சிறந்தது என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் முடிவு செய்யவிருக்கின்றோம். ஒரே இடத்தில் பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்வதைவிட, சிறு சிறு தொகையாக பிரித்து மூன்று நான்கு இடங்களில் இன்வெஸ்ட் செய்ய திட்டம். விரைவாக மதிப்பு கூடக்கூடிய இடங்களுக்கு, தற்போதைய விலையும் சற்று அதிகமாக இருக்கும். இப்படி விலை சற்று அதிகமான இடத்தில் ஒரு சிறு தொகையும் மற்ற இடங்களில் மீதித் தொகையும் பிரித்துப் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வருடத்தில், எந்த இடம் அதிகம் போகின்றதோ அதனை விற்று, மொத்த முதலீட்டு தொகையை திரும்ப எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி எடுத்துவிட்டோம் என்றால் மீதமுள்ள இடங்களில் கிடைக்கும் மொத்த தொகையும் நமக்கு லாபம்தான். இதனைத்தான் தனியாக எல்லோரும் செய்து வருகின்றார்கள். தனியாக செய்யும் போது, நாம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்களிடம் இருந்து இடம் வாங்க வேண்டி வரும். விலை சற்று அதிகமாக இருக்கலாம். நாங்கள் பலர் கூட்டாக சேர்ந்து நேரடியாக இடம் வாங்குவதால், குறைந்த விலைக்கு வாங்க முடியும். குறைந்த விலைக்கு வாங்கி, அவரவர் பங்கை பிரித்து தனித்தனியே ரெஜிஸ்தர் செய்து கொள்வதுதான் திட்டம்.

திட்டங்கள் எல்லாம் பேப்பர் ஒர்க் ல் சரியாகத்தான் இருக்கிறது :-) நடைமுறைச் சிக்கல்கள் பற்றி இன்னும் சரியாக தெரிய வரவில்லை. இதில் பெரிய சிக்கல்கள் எதுவும் வராது என்றே தோன்றுகின்றது. பார்க்கலாம். நாங்கள் ஏதேனும் உருப்படியாக செய்து, லாபம் ஈட்டினால் இங்கே தெரிவிக்கின்றேன். நீங்களும் முயற்சிக்கலாம். ஆனால் அதுக்கு சிறிது காலம் எடுக்கும்.

மேலும் சில பதிவுகள்