அரட்டை அரங்கம் - 58

பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...

ஸ்ரீ செல்லுங்க எல்லாரும் எங்க போனாங்க..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

தோழிகள் எல்லாருக்கும் வணக்கம்.

பசிக்குது சீக்கிரம் டீ, பஜ்ஜி கொடுங்க.

என்ன அரட்டையில சுவாரசியமே இல்லை.
மோகனாவை எங்க கொஞ்சநாளா காணும்.
அன்புடன்
ஜெமாமி

தலை தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு போகணும் ...அதனால ரொம்ப ஸ்பசல் தான்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

ராதாக்கா ஆபீஸில் வேலை என்பது கதையல்ல நிஜம். ஓகேவா. இன்னிக்கு சரியாயிடும்னு நினைக்கிறேன், அப்புறமா மெயில் பண்றேன், நமக்குள்ள என்ன ஒரு வேவ்ஸ் பாஸாகுது பாத்தீங்களே, நீங்க நினைக்கிறீங்க நான் பண்ணிட்டேன், அண்ணா கம்பிய நீட்டிட்டாரு, ஆளையே காணோம்.

ஜெய், யாழு, விமல் எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் ஹாய் ஹாய்

அன்புடன்
பவித்ரா

நெட் தான் ப்ராப்ளம் பண்னுது ஜெமாமி. அப்புறம் என்னன்னு அந்த bSNL ஆபீஸில் கேட்டா நீங்க பணம் கட்டலைங்கிறாங்க. போன மாதம் பில் 1400 ரூப்பாய் வந்திருக்கு. அப்பா பில் கட்ட போனப்போ 750 போதும்ன்னு சொல்லிட்டாங்களா, பில் தப்பு என்று சொல்லிருக்காங்க, கடைசியில் பாத்தா நெட்ட கட் பண்ணிட்டாங்கோ. பேசாம ஆன்லைனில் கட்டலாம்னு நீங்க சொன்னீங்களேன்னு பாத்தா, அங்கு இருக்கும் பேங்கில் எனக்கு அக்கவுண்ட் இல்லை.

அன்புடன்
பவித்ரா

ஜெயலஷ்மி

உள்ளேன் அம்மா, சரிதானே!

பவி,

பேமெண்ட் ஆப்ஷனில், அவங்க கொடுத்திருக்கும் பாங்க் தவிர, முதல் ஆப்ஷனை க்ளிக் செய்தால், எல்லா பாங்க் பெயர்களும் டிஸ்ப்ளே ஆகும், ட்ரை பண்ணிப் பாருங்க

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களுக்கு கோயம்புத்தூர் ஜி.எம் ஆபீஸ் நம்பர் மெயில் பண்ணட்டுமா?
ஏதாவது சந்தேகம் வந்தா பேசிக் கேட்கறதுக்கு.
அன்புடன்
ஜெமாமி

எப்படி இருக்கீங்க? குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கீங்க.?
அன்புடன்
ஜெமாமி

சீதாம்மா, பார்க்கிறேன் சீதாம்மா, மிக்க நன்றி.

ஜெமாமி, சேலத்தில் பேசிட்டேன். சரியாகிவிட்டது. நன்றி.

அன்புடன்
பவித்ரா

பவித்ரா
ஹாஹாஹா கதையல்ல நிஜமாம்ல.. நம்பிட்டேன் பவி. நானும் உன்ன பட்டில பாத்துட்டு தான் இங்க கூப்டேன். ஆனா நீயும் அதே சமயம் பதில் போட்டிருக்க.. என்ன செய்ய

ஜெமாமி
எப்படி இருக்கீங்க. கொலு நல்லபடியா நடந்ததா? கொலுவ மட்டுமாவது போட்டோ போடுங்கோளேன். ப்ளீஸ்.

சீதாம்மா
என்ன ஒரு அதிசயம், அரட்டைக்கு வந்திருக்கீங்க. அப்பப்ப இப்படி வந்துட்டு போங்க. அப்பதானே அரட்டையும் களை கட்டும். யாருமே இல்லைனு எல்லாரும்போய்ட்டா எப்படி..

மோகனா மாமி ஊருக்கு போயிருக்காங்கனு நினைக்கிறேன். யாருக்கோ கல்யாணம்னு சொல்லிட்டு இருந்தாங்க. மாமி-ய யாராவது கான்டாக்ட் பண்ண முடிஞ்சா பண்ணி பாருங்களென் ப்ளீஸ்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்