அரட்டை அரங்கம் - 58

பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...

ஹாய் ஹாய் ஹாய் அடடா என்ன இன்னக்கி பெரியவங்கல்லாம் வந்து இருக்கீங்க வாங்க வாங்க அரட்டை 58 உங்களை வரவேற்று பெருமை அடைகிறது வருக வருக.

சீதாம்மா எப்படி இருக்கீங்க? பேரன் பேரு ரொம்ப நல்லா இருக்கு ஆதித்யா எனக்கு ரொம்ப பிடிச்ச பேருமா. பேரனோட தீபாவளியா இந்த முறை நல்லா சந்தோஷமா கொண்டாடுங்க.

இமாம்மா நலமா? சீதாம்மாவது எப்பவாவது அரட்டை பக்கம் வருவாங்க உங்கள நான் அரட்டைல பார்த்ததே இல்லையே. ஐ இன்னக்கி வந்திருக்கீங்க வெலகம். ஸ்கூல் லீவாம்மா

ஹாய் கல்ப்ஸ், எங்க போய்ட்டீங்க ஜெய் கூட உங்கள தேடினாங்க. நான் கூட நினைச்சேன், அண்ணா கொடுத்த வரை போதிரம் அப்பறம் அறுசுவைல சர்ப்ரைஸா விஷ் பண்ணதுல திக்குமுக்காடிடீங்களோன்னு.

சீதாம்மா, எத்தனை குழந்தைகளை பெற்றெடுத்தாலும் பேரக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா டென்ஷன் ஆட்டோமெட்டிக்கா வந்துடுது பார்த்தீங்களா? எனக்கு இப்ப காலை 8.45. என்னுடைய வாலுங்க ரெண்டும் 7.30 மணிக்கு மேல என்னை தூங்க விட மாட்டாங்க. அவ்ளோ நல்ல பசங்க ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யாழி, நான் கூட ஜெய் தேடினதை பார்த்தேன் பா. முதல்ல நம்ம பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு, அப்புறமா நம்ம சகாக்கள் கிட்ட பேசலாமேன்னு இருந்துட்டேன்.அண்ணா கொடுத்த மோதிரத்துல எல்லாம் திக்கு முக்காட முடியுமா? இன்னும் வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு. அதெல்லாம் வரட்டும் அப்புறமா திக்கு முக்காடுறது, டான்ஸ் ஆடுறது பத்தி யோசிக்கலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பெரியவங்க, சின்னவங்க என அரட்டை களை கட்டுதே அதுதான் நானும் வந்தேன்.

நான் ரசித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்.

சமீபத்தில் சிலி நாட்டில் பூமிக்கடியில் ஒரு சுரங்கத்தில் மாட்டிக்கொண்டு இரண்டு மாதங்களுக்கு மேல் தவித்து விட்டு அங்கிருந்து தப்பித்து வெளி வந்த சுரங்க தொழிளாளர்களைப் போல தமிழ் திரை உலக கலஞர்கள் ஒரு சுரங்கத்திலிருந்து வெளி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் நிருபர்கள் " கீழே எப்படி இருந்தது?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்களின் பதில் ஒரு நகைசுவை கற்பனை.

முதலாவதாக வெளி வருபவர் விவேக். அவரிடம் நிருபர் ஒருவர்

நிருபர்: சார் கீழே எப்படி இருந்தது?

விவேக்: நல்லா வசதியா இருந்தது. அங்கே ஏற்கனவே ஒரு நாயர் டீ கடை போட்டிருந்தார். ஆமை வடை, மசால் வடையெல்லாம் கூட போட்டார். இப்படி சொல்வேன்னு நினைச்சீங்களா? நானே நொந்து நூலாகி அந்து அவலாகி வந்திருக்கேன். என் கிட்டே காமெடி பண்றீங்களே.

அடுத்து வெளி வருபவர் வடிவேலு.

தொடரும்..................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹே கல்ப்ஸ் ஓ ஓ ஒரு ப்ளானோடதான் இருக்கீங்க போல சரி சரி. ரெண்டு குட்டீஸ் என்ன பண்றாங்க?

சீதாம்மா நலமா? பேரன் பெயர் ரொம்ப நல்லா இருக்கு.

ஜெ மாமி நலமா? ஸாரி மாமி வெள்ளிகிழமை உங்க போன் அட்டென்ட் பண்ண முடியவில்லை. அந்த வீக் என்ட் ஆபிஸ் இருந்தது. அந்த சண்டே ஊருக்கு போயிட்டு நேற்று தான் வந்தேன். ஆபிசில் கொஞ்சம் வொர்க் அதிகம். அதுதான் உங்க கூட பேச முடியவில்லை.

இமா நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

தாங்க்ஸ் ஜெயந்தி, இனிமேல் இப்படியே சொல்றேன்:)

நவம்பர் 2வது வாரத்துக்கு அப்புறம் டிஸைட் பண்ணலாம். நான் உங்களுக்கு மெசேஜ் செய்யறேன்.

யாழினி,

எப்படி இருக்கீங்க? எனக்கும் அரட்டைல அடிக்கடி கலந்துக்கணும்னு ஆசைதான். நேரம் இருந்தால், கண்டிப்பாக வந்துடுவேன்.

கல்பனா,

பரவாயில்லையே, 7.30 மணிகே எழுந்துடுவீங்களா? அவ்வளவு சீக்கிரமே எழுந்து என்னதாம்பா செய்வீங்க:):)

அன்புடன்

சீதாலஷ்மி

எல்லா பெரிய தலைகளுக்கும் :) தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள் :). எல்லாரும் எப்படி இருக்கீங்க? தீபாவளி வேலைகள் ஆரம்பிச்சாச்சா?

நான் தீபாவளிக்காக மே மாசமே தயாராயிட்டேன். ஹி ஹி ஊரிலிருந்து வரும் போதே ட்ரெஸ் வாங்கிட்டு வந்துட்டேன். நல்ல காலம் பலகாரமும் வாங்காம வந்தியேன்னு நீங்க சொல்றது நல்லா கேட்குது கர்ர்ர்ர்ர்ர்ர்.

காப்பர் நைட்ரேட் கலரில் ப்யூர் சில்கில் கறுப்பு நிற சம்கி வொர்க் மற்றும் பேட்ச் வொர்க் செய்த டிசைனர் சாரீயும், கிரே கலரில் ஒரு டிசைனர் சுடிதாரும்தான் தீபாவளிக்காக வாங்கிய ஆடைகள். பலகாரங்களைப் பற்றி இனிமேதான் யோசிக்கணும். கண்டிப்பா முறுக்கு செய்வேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தாங்க்ஸ்பா, நீங்க எப்படி இருக்கீங்க? ஜெ மாமி வீட்டு கொலுவுக்கு போயிருந்தீங்களா?

அன்புடன்

சீதாலஷ்மி

கல்பனா என்ன செய்றிங்க அரட்டைக்கு வந்தச்சா உங்கள் குழந்தை பெயர் என்ன

ஜெயா ரெங்கா பவியாரையும் காணோம் இன்னும் சிறிது நேரம் இருப்பேன்

சாப்பிடனும் வயிறு பசிக்குது

மேலும் சில பதிவுகள்