அரட்டை அரங்கம் - 58

பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...

ஹலோ கல்ப்பனா என்ன இரண்டு நாள் காணவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் இன்னும் முடியவில்லையா? அப்புறம் எப்படிப்பா இப்படி பக்கம் பக்கமாக எழுதி தள்ளுரிங்க என்னக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

பவ்ஸ், புரியுது காலைல டிபன் சரியா சாப்பிடலேன்னு வயிறு காலியாயிருக்குன்னு நீ ஆபிஸ் டைம்ல பேக்ல நொறுக்ஸ் வச்சி சாப்டுட்டு இருந்தது. நீ காலியா விடமாட்டே எனக்கு தெரியுமே ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கண்டிப்பா மாமி. எனக்கும் உங்களை எல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. கோவை கெட் டு கெதரை ரொம்ப மிஸ் பண்றேன். நானும் ஈரோடு தான். முதல்ல கலந்துக்கணும்னு பார்த்தேன். அப்புறம் டேட் கொஞ்சம் ஒத்து வரலை.

அன்புடன்
மகேஸ்வரி

சுமி, எப்படியிருக்கீங்க? இங்க ஒண்ணு மாத்தி ஒண்ணு போய்ட்டே இருக்கும் பா. அதான் ரெண்டு நாள் வர முடியலை. அதுவுமில்லாம பட்டி தொடங்கிட்டா யாரும் அரட்டைய கண்டுக்க மாட்டாங்க. இது எழுதப்படாத விதி. பக்கம் பக்கமா அடிக்கறது பெரிய விஷயமே இல்லைப்பா. எல்லா தோழிகளும் இப்ப அப்படித்தான் அடிச்சு பின்னிட்டு வர்றாங்க. நாளைக்கு நீங்களும் எல்லாரையும் மிஞ்சும் அளவுக்கு அடிச்சு தள்ளுவீங்க பாருங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ், நோ கல்ப்ஸ் நான் எப்பவும் பிஸ்கட் மட்டும் தான் சாப்பிடுவேன், ஆய்லி ஃபுட்ஸுக்கு எப்பவுமே நோதான், சினி ஸ்டார் சொல்ற மாதிரி இருக்கு இல்ல, சும்ம தான் சொன்னேன் கல்ப்ஸ்.

யாழு, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன் யாழு, அதான் இங்க ஓடியாந்திட்டேன்.

அன்புடன்
பவித்ரா

பவ்ஸ் பிஸ்கட் மட்டும்தான் சாப்பிடுவாங்களா?! பச்சப்புளையா இருக்குதே இந்தப்புள்ள :) ரவாதோசையை ரசத்தில் ஊறவச்சு டப்பாவுல போட்டு ஆஃபீசுக்கு எடுத்துட்டுப் போறதால்ல கேள்விப்பட்டேன். யாரும் பார்க்காத நேரத்தில் டபக்குன்னு வாயில் போட்டுக்கிட்டு கமுக்கமா இந்த பச்சப்புள்ளை உட்கார்ந்துக்குதுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வருது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ பவி என்ன என் மேல் கோபமா? நான்னும் இரண்டு நாளா பார்க்கிறேன் நீங்க என் கூட பேசவே இல்லை. உங்க சாம்பார் இன்று பார்த்தேன். நாளை செய்யலாம் என்று உள்ளேன்.

வாழு இல்லை வாழவிடு

ஹலோ பவி, கல்பனா உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

வாழு இல்லை வாழவிடு

ஹலோ கல்பனா அப்புறம் அண்ணன் என்ன வாங்கி கொடுத்தார்கள். இப்போது உங்களுக்கு டைம் என்ன?

வாழு இல்லை வாழவிடு

குட்டித்தலை, ரவா தோசை டப்பால போட்டு எடுத்திட்டு வந்தா ரொம்ப ஊறிடும் கவி, அதனால அது சுட சுடதான் சாப்பிடுவேன்.இப்பதான் உங்க நம்பத்தகுந்த வட்டாரங்கள் என்பது டுபாக்கூர் என்பது எனக்கு புரியுது.

சுமி
சாரி, சுமி, உங்க பதிவை நான் பார்க்கலையே,சாம்பார்தானே எனக்கு ரொம்ப பிடிக்கும், அதான் அறுசுவைக்கு அனுப்பிட்டேன், ட்ரை பண்ணி பாருங்கப்பா!!கோபம் எல்லாம் ஒண்ணும் இல்லை சுமி

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்