அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

எல்லாரும் இங்க வந்து ப்ரஸ்ண்ட் சொல்லுங்கப்பா!!

அன்புடன்
பவித்ரா

இங்க வாங்கப்பா! நான் நல்லாருக்கேன், சாம்பார் என்னாச்சு, செய்தீங்களா, உங்க ஹஸ்க்கு பிடிச்சதா? அறிய ஆவலாய் இருக்கேன் சுமி!

அன்புடன்
பவித்ரா

எல்லோருக்கும் காலை வணக்கம். பவி,கல்பனா எப்படி இருக்கிறீர்கள். பவி சாப்பிட்டீர்களா? என்ன ராவா தோசையா?

வாழு இல்லை வாழவிடு

ஹாய், இங்க இருப்பவர்கள் பதில் சொல்லுங்கப்பா, எனக்கு வயது 20 முதல் 25க்குள், சரியா:)) இந்த வயதில் என்னால் என்னுடைய உயரத்தை அதிகரிக்க முடியுமா?? COMPLAN குடினு சொல்லக்கூடாது, ஏன்னா எனக்கு அது பிடிக்காது. முடியும் என்றால் அதற்கு என்ன செய்யலாம்னு சொல்லுங்க. நான் அசின் உயரம் இருப்பேன், ஐஸ்வர்யா ராய் உயரம் ஆகமுடியுமா???:)))

இது விளையாட்டில்ல, நிஜமாவே ஒரு மாபெரும் சந்தேகம், அதான், புதுசா இழை தொடங்கலாம்னு நினைச்சேன், சரி இதுக்கு போய் எதுக்கு இழை என்று தான் இங்கேயே கொட்டிட்டேன், பதில் சொல்லுங்கோ!!!

அன்புடன்
பவித்ரா

ரவா தோசை இன்னிக்கு இல்லை, நேத்து நைட்டுதான் சாப்பிட்டேன், இதுக்காக ரசம் செய்து சாப்பிட்டேன், ரசம் இருந்தால் ரவா தோசை 5 கூட உள்ள போயிடும் சுமி. காலையில் பூரி, அதான் இப்ப ஒரே மந்தமா இருக்கு;(((

அன்புடன்
பவித்ரா

சாரி பவி நாளைதான் செய்யபோகிறேன். ஏன்னா எனக்கு ஒன்று ஒன்றாக பார்த்து செய்ய வேண்டும். அதனால் சண்டே பொறுமையாக செய்யலாம் இருக்கேன்.

வாழு இல்லை வாழவிடு

பவி செல்லம் நீங்க குட்டையாக இல்லயே. இன்னும் வளரனுமா. 20வயதுக்கு மேல் கொஞ்சம் கஷ்டம்தான் :(. டெலிஷாப்பிங்கில் காட்டறதை எல்லாம் நம்பிடாதீங்க. எல்லாம் டுபாக்கூர்தான்.
காம்ப்ளான் குடிக்க வேணாம். ஆனால் விளம்பரத்தில் வர்ற மாதிரி கம்பியை புடிச்சுக்கிட்டு தினமும் அரை மணிநேரம் தொங்குங்க :)

ரொம்ப ஈசியான வழி 6இன்ச் உயர ஹைஹீல் செருப்பு போட்டுக்கோங்க :)

மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஹாய் ஹாய் தோழிஸ் அனைவருக்கும் வணக்கம்..ஒழுங்கா எல்லாரும் வந்து பிரசண்ட் ஆயிடுங்க அப்படிங்கற ஒரே வேண்டுகோள்தான் இன்னிக்கும் வைக்கப்போறேன்;))

பவி:
பெண்களா இருந்தா 18 வயது வரையும், ஆண்களா இருந்தா 20 வயது வரையும் அதிகரிக்கும்னு நினைக்கிறேன். டிவில வர விளம்பரம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலையே;(

Don't Worry Be Happy.

பவி உன்னை பத்தி ஒன்றும் சொல்லவில்லை. நானும் நேற்றுதோழிகளே!அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க பார்த்தேன் உன்னுடைது மிஸ்ங். ஏதும் சிதரம்பர ரகசியமா?

வாழு இல்லை வாழவிடு

கவி, ஆனாலும் இது டூ டூ மச் கவி, கம்பி புடிச்சி தொங்கினா என்னோட கை அந்து விழுந்திடுமே மா, என்ன பண்ணறது, இதுக்கு நான் குட்டியாவே இருந்துட்டு போறேன். கவி ஒரு ரகசியம் சொல்றேன், என் வருங்கால கணவர் உயரம் அதிகமா இருந்தா என்ன பண்றது, அதான் ஒரு safe side ஆ இப்பவே உயர முடியுமா என்று சந்தேகம் கேட்டேன். டெலிஷாப்பிங் நான் பார்க்கவே மாட்டேன் கவி.

சுமி, மெதுவா செய்துட்டு சொல்லுங்க:))

ஜெய், எனக்கு தெரியும் ஜெய், இருந்தாலும் தோழிகளுக்கு ஏதாவது வழி தெரியுமோன்னு கேட்டேன்.

ஆனா, பெண்களுக்கு பிரசவத்தின் போது உயரம் கூடும் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன், செவி வழி செய்தி தான்:))

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்