அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

என்ன ராவா தோசையா?//

ராவா வேற ஒண்ணுதான் அடிக்கணும். பவி எப்படின்னு தெரியலயே.
அன்புடன்
ஜெமாமி

நான் அசின் உயரம் இருப்பேன், ஐஸ்வர்யா ராய் உயரம் ஆகமுடியுமா???:)))//

உயரம்தான் உங்க பிரச்னையா?
நான் ஒரு யோசனை சொல்லறேன். நான் உங்க பக்கத்துல வந்து நின்னுக்கறேன். அப்ப நீங்க உயரமா தெரிவீங்க. சரியா.
அன்புடன்
ஜெமாமி

என் வருங்கால கணவர் உயரம் அதிகமா இருந்தா என்ன பண்றது, //

உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆயிடுத்து இல்லயா? அப்ப அவரென்ன உயரம்ன்னு தெரியாதா?

அப்படியே அவர் உயரமா இருந்தாதான் என்ன.
அமிதாப் ஜெயாபாதுரி மாதிரி இருக்கட்டுமே.
அன்புடன்
ஜெமாமி

சுமி, இப்ப போட்டுட்டேன் போய் பாருங்க, அதில் ஒண்ணும் ரகசியம் இல்லைப்பா!!

ஜெமாமி,

உங்க பக்கத்துல வந்து நின்னுக்கறேன். அப்ப நீங்க உயரமா தெரிவீங்க. // கண்டிப்பா என் கல்யாணத்தில் என் கூடவே நீங்க மேடையில் இருக்கணும் மாமி சரியா:)))

அன்புடன்
பவித்ரா

பவி நேற்று பாஸ்(எ)பாஸ்கரன் படம் பார்த்தேன் அதில் நயன் ஹயீல்ஸ் போட்டுயிருக்காங்க அதேபோல் நீயும் போடுக்கொள். அப்படி இல்லையென்றால் கல்யாண்தின் போது ஸெப்ஸலா ஒரு ஸ்டுல் ரெடி பன்னி கிப்டா பிரஸ்ண்ட் பண்ணிவிடுகிறேன். கவலையை விடுப்பா.

வாழு இல்லை வாழவிடு

பவி,
நீங்க சரியான உயரத்துலதான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.அப்படி உங்களுக்கு உயரமா தெரியனும்னா அதுக்கேத்த மாதிரி டிரெஸ் பண்ணலாம்.வளரவெல்லாம் முடியாது,பவி.

அன்புடன்
நித்திலா

ஸ்டுல் ரெடி பன்னி கிப்டா பிரஸ்ண்ட் பண்ணிவிடுகிறேன்//

நான் உயரமே ஆக வேண்டாம்ப்பா!! ஆளை விடுங்க, தெரியாம கேட்டுட்டேன், இன்னிக்கும் நான் தான் கிடைத்தேனா??? ;(((

நித்தி, நன்றி நித்தி. நல்லதொரு யோசனை. புடவையில் கொஞ்சம் நல்லாருக்கும்னு நினைக்கிறேன், ஆனா நான் ஆபீஸ்க்கு நோ புடவை, ஒன்லி சுடி தான்;((

அன்புடன்
பவித்ரா

பவி ரொம்ப உயரமா இருந்தா ஒரு பிரச்சினை என்னன்னா கொஞ்சம் வெய்ட் போட்டுட்டாலும் ஜைஜாண்டிக்கா தெரியும் :(. அதனால் நார்மல் உயரமா இருப்பதே நல்லது.

வருங்காலக் கணவர் உயரமா இருந்துட்டாவா.... அப்போ பார்த்தாச்சா :) சொல்லவே இல்ல. சிம்பிள் ஹைஹீல்ஸ் போட்டுக்க வேண்டியதுதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆயிடுத்து இல்லயா?// ஜெமாமி, கவி அதெல்லாம் ஒண்ணும் இல்லை!! நான் கிளம்பறேன், என் கதி அதோகதி ஆயிடும் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, சரியா!

கவி, உங்க மருமகளை நல்லா கவனிச்சுக்கோங்க, இலாவோட க்ளிப் செய்து கொடுத்திடுங்க, அப்பப்போ ஒரு விசிட் அடிங்க அறுசுவைக்கும்!

அன்புடன்
பவித்ரா

பவி அதில் நீங்க எங்கே இப்ப இருக்கிற இடம் அதை தெரிந்து கொள்ளதான் கேட்டேன். பயப்படாதிங்க நான் லோன் கேட்டு வரமாடேன். நீங்க சென்னையிலிருந்தா பார்க்கலாமேன்னு ஒரு ஆசை அவ்வளுதான். ஏன்னா நீ ஜாலியாக டைப், நானும் ஜாலி டைப்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்