குழந்தை பால் சரியாக குடிப்பதில்லை

என் குழந்தைக்கு 3மாதங்கள் முடியப்போகிறது..தாய்பால் தான் தருகிறேன்,அவள் பால் சரியாக குடிப்பதில்லை.5 நிமிடங்கள் மட்டுமே குடிக்கிறாள்.அதனால் 1 மணிநேரத்துக்கு 1 முறை கொடுக்கிறேன்.அதற்க்கு மேல் கட்டாயமாக குடுத்தாலும் உமட்டுகிறாள்.நான் எப்போதும் அமைதியான, காத்தோட்டமான இடத்தில் வைத்துதான் தருகிரேன்.எடை.11 பவுண்டு தான் இருக்கிறாள்3 மாதம் முடியபோகிறது இது சரியான எடையா?என்ன செய்வது..இப்படி குடிப்பது அவளது வளர்ச்சிக்கு போதுமா என கவலையாக உள்ளது...என்ன செய்யலாம் என சொல்லுங்களேன்.

உதவுங்கள்

Kalai

கலா குழந்தைகள் எப்போதும் தனக்கு தேவையான பாலை மட்டுமே குடிக்கும். அதுவும் 3 மாதம் குழந்தை என சொல்கிரீர்கள். 5 நிமிடம் குடிக்கும் பாலே அதன் வயிற்றுக்கு போதுமானது தான். அதிகமாக கொடுத்தாலும் வயிறு உப்பி வாமிட் பண்ண ஆரம்பிச்சுடும். சோ கவலை வேண்டாம். தனக்கு தேவையான நேரத்தில் அதுவாகவே தன் பசிக்கான உணவை அருந்தும். 3 மாதம் முதல் பிஸ்கட்டை பாலில் ஊற வைத்து கொடுக்கலாம். இது போன்ற உணவுகளையும் ஆரம்பித்து விட்டால் பின்னாளில் சிரமம் இருக்காது. 2 முறை பால் அருந்தியதும் அடுத்த ஒரு முறைக்கு வெதுவெதுப்பான நீர் கொடுங்க. செரிமான சக்தியை உண்டாக்கும். அதிகம் பசி எடுக்க வைக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்களின் குழந்தை பிறந்த போது எவ்ளோ எடை இருந்தது?? குழந்தைகள் முதல் மாதத்தில் 4-7 அவுன்ஸ், அதுக்கப்புறம் ஆறு மாதம் வரை மாததிற்கு 1-2 பவுண்ட்ஸ், பிறகு ஒரு வருடம் வரை மாததிற்கு ஒரு பவுண்ட் வரை எடை போடலாம். இது ஒரு அளவுகோல் தானே தவிரே அப்படி தான் என்று இல்லை. எடை கூட வில்லை என்றாலும் நன்றாக ஆக்டிவாக இருந்தாலே போதும்.

அதுவும் போக சில குழந்தைகள் 5 நிமிடம் குடித்தாலும் வயறு நிறைந்துவிடும். உங்கள் குழந்தை பால் குடித்து விட்டு சமர்த்தாக இருந்தால் அவர்களுக்கு போல் போதும் என்று அர்த்தம் அழுதால் தான் யோசிக்க வேண்டும். உங்களுக்கே தெரியும் பால் கொடுத்த பிறகு மார்பு லேசாகி விடும். அவர்கள் பசி என்று சமிக்கை செய்யும் போது தான் பால் கொடுக்க வேண்டும். ரொம்பவும் அழ விட கூடாது பசி என்று தெரிந்தவுடனே கொடுக்க வேண்டும்.

உங்களின் மருத்துவர் என்ன சொன்னார்?? அவளின் எடை கம்மி என்றாரா? எதனால் இந்த கவலை? இதை எதையும் யோசிக்காமல் எப்பவும் போல சந்தோஷமாக பால் கொடுங்கள். வருத்தபட்டால் பால் சுரப்பு கம்மி ஆகி விடும்.

வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் குவைத்ல் இருகிறேன் எனக்கும் 7மாதத்தில் ஒரு பையன் இருகிறான் நானும் நிரய சந்தேகங்கள் கேக்க வெண்டும் என்று ஆசை ஆனால் தமிழ் அச்சு தெரியாதது ஒரு காரணமாக இருந்தது இப்ப தான் டைப் செய்ய கத்துகிட்டேன் இனி கருத்து போடுகிறேன்

alaudeen

நன்றி ஆமினா.
லாவண்யா..
இவள் பிறக்கும் போது 6 பவுண்ட் 14 அவுன்ஸ் இருந்தாள்.இப்போது 3 மாதம் முடியப்போகிறது 11 பவுண்ட் இருக்கிறாள்.டாக்டர் இவளது எடை average என்கிறார்.டாக்டர் 10- 15 நிமிடம் வரை(1 breast) பால் குடுக்கனும்னு சொல்றாங்க.இவ 5 நிமிடம்தானே குடிக்கிறா அதான் கவலை..rice ceareal குடுக்க சொல்கிறார்..இப்போதுதான் குடுக்க ஆரம்பித்துள்ளேன்.அதை விழுங்கவும் சிரமப்படுகிறாள்.மெதுவாகதான் பழக்கனும்.

Kalai

கலா,
எப்படி இருக்கீங்க ?பெண் பிறந்தாச்சா?என்ன பெயர் வைத்து இருக்கீங்க? குழந்தையோட எடை சாதாரணமாக உள்ளவரையில் கவலை படாதீங்க
சில பிள்ளைகள் அப்படி தான் இருப்பாங்க என் மகளும் இது போலே தான் ஐந்து மாதம் வரை செய்தாள் எனக்கு கூட ரொம்ப கவலையா இருக்கும் அப்புறம் கொஞ்சம் இணை உணவு கொடுக்க ஆரம்பித்ததும் சரியாகிவிட்டாள் நண்பகல் சமயம் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் தாங்க அது குழந்தைக்கு நல்லது
முதலில் விழுங்குவது கஷ்டமா தான் இருக்கும் போக போக சரியாகும்
நீங்க அதிகமா கவலை படாதீங்க நல்லா சாப்பிட்டு,மனதை ஆரோகியமாக வைத்து இருந்தால் தான் குழந்தையும் நல்லா இருப்பாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா நல்லாருக்கீங்களா? குழந்தை எப்படி இருக்காங்க.ஆமாம்பா பெண் பிறந்து 3 மாதங்கள் ஆகுது.பேர் சஹானா.
இப்போவே rice cereals குடுக்கலாமா?

Kalai

தோழியே, நலமா? குழந்தை சரியாக பால் குடிக்காததற்கு காரணம் வயிறு அடைப்பம் கூட இருக்கலாம். வாயுவும் அடைத்து இருக்கலாம். குழந்தைக்கு ரப்பர் (அ) விரல் சூப்பும் பழக்கம் உள்ளதா? குழந்தைக்கு தலைக்கு ஊற்றும் போது சாதிக்காய்,மாசிக்காய், சுக்கு,பெருங்காயம்,ஒரு மிளகு,சிறிதளவு சீரகம். இதில் மாசிக்காய், சாதிக்காயை சுட்டு இழைத்து எடுத்துக் கொள்ள்வேண்டும். மற்ற பொருட்களை இடித்து சாறு எடுத்து வடிகட்டிக் கொண்டு ஏற்கனவே இழைத்து வைத்துள்ள சாதிக்காய் - மாசிக்காயோடு சேர்த்து ஒரு அரை பாலாடை அளவுக்கு ஊற்றுங்கள். வாயுக் கோளாறு, வயிறு அடைப்பம் நீங்கி நன்கு பசி எடுத்து பால் குடிப்பாள். மோஷன் தினமும் போகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மோஷன் போகவில்லையென்றாலும் சரியாக பால் குடிக்காமல் இருந்திருப்பாள்.இம்முறையை தான் என் இரண்டு குழந்தைகளுக்கும் செய்தேன். அவர்களுக்கு இது போன்ற தொந்தரவு இருந்ததில்லை. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆலோசனைப்படி கேட்டு செய்யுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

20நிமிடதிற்கு ஒருமுறை பால் கொடுக்கவும்

தோழி கல்பணா, நீங்கள் சொல்வது போல் எந்த வாயு பிரச்சணையும் கிடையாதுப்பா.நானும் கை மருந்து வாரம் இருமுறை குடுத்துட்டுதான் இருக்கேன்(பாட்டி சொன்ன வைத்தியம்).உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிப்பா

rabiathul basaria நன்றிப்பா
நான் 1 மணி நேரத்துக்கு 1 முறை குடுக்கிறேன்ப்பா

Kalai

மேலும் சில பதிவுகள்