தூங்கும் போது எந்த திசையில் படுக்க வேண்டும் ?

பொதுவாக நாம் தூங்கும் போது எந்த திசையில் படுக்க வேண்டும், நாங்கள் எப்போதும் கடல் பக்கம் தலை வைத்து படுப்போம் (எங்கள் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி கடல்)ஆனால் அப்படி படுப்பதால் தான் உடம்பு சூடூ அதிகமாகி அடிக்கடி என் பையனுக்கு உடம்பு சரி இல்லாமல் ஆகின்றது என்று மாமியார் சொல்கிறார்கள். இருப்பதே நான்கு மூலைகள் தான் இதில் எந்த பக்கம் கட்டில், தொட்டில் போட்டு படுக்க வேண்டும் ?

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. விநாயகர்க்கு யானை முகம் கிடைக்க ஒரு கதை சொல்லுவாங்க. வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கும் பிராணியின் கழுத்தை வெட்டி விநாயகர்க்கு வைத்ததாய் ஒரு கதையுண்டு. அதனாலும் அந்த பக்கம் படுக்க கூடாது.

ஜெமாமி, சரியான காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்:))

அன்புடன்
பவித்ரா

தெற்கு பக்கமும் படுக்க கூடாதுன்னு சொல்றாங்களே, தெற்கு எமன் வாசம் செய்யும் இடம் அதனால் கெட்ட கனவுகள் வரும் அப்படின்னும் சொல்றாங்க

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது

வலையில் தேடியதில் கிடைத்தது

மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு படுக்கக்கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புற படுக்கக்கூடாது. அதுபோல் கால்களை தவளைபோல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

இதனால் வலப்பக்கம் உள்ள சூரிய நாடியில் எட்டு அங்குலம் வரை சுவாசம் செல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். மேலும் சூரிய நாடியில் வரும் வெப்பக்காற்று பித்த நீரை அதிகம் சுரக்கச்செய்து உண்ட உணவுகளை எளிதில் சீரணமாக்கும் .

இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பவர்களின் இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைப்பதால் இரத்த ஓட்டமும் அதிகம் செல்லும். இதனால் இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதால் சந்திர நாடியாகிய இடப்பக்க மூக்கின் வழியே சுவாசம் 15 அங்குலம் வரை செல்லும். இதனால் உடல் வெப்பத்திற்குப் பதில் குளிர்ச்சியே ஏற்படும். சீதளம் உண்டாகும். இரவு உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக மாற நேரிடும்.

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.

வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.

அன்புடன்
ஜெமாமி

ஜெயா மாமி இவ்வளவு அழாக விளக்கமாக கூறியதுக்கு ரொம்பரொம்ப............நன்றி. எனக்கு இந்த விஷையம் தெரியாது. இப்போது தெரிந்துக்கொண்டேன்.

வாழு இல்லை வாழவிடு

ரொம்ப நன்றி மாமி இந்த விஷயத்தை இவ்வளவு விவரமாக சொன்னதுக்கு...

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது

Hai Mami
இது போன்ற விஷயங்களை எப்படி நெட்டில் தேடுவது என்று சொல்லிதர முடியுமா மாமி

கூகிள் சர்ச்சில் உங்கள் சந்தேகத்தைக் கேள்வியாக டைப் அடித்துத் தேட வேண்டியதுதான்.
தேடத் தேட எம்ஸ்பர்ட் ஆகிடுவீங்க.
அன்புடன்
ஜெமாமி

//வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. விநாயகர்க்கு யானை முகம் கிடைக்க ஒரு கதை சொல்லுவாங்க. வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கும் பிராணியின் கழுத்தை வெட்டி விநாயகர்க்கு வைத்ததாய் ஒரு கதையுண்டு. அதனாலும் அந்த பக்கம் படுக்க கூடாது.

ஜெமாமி, சரியான காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்:))//

பவி படியுங்க.

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
அன்புடன்
ஜெமாமி

Thank u mamai.

சூப்பர் மாமி. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. மிக்க நன்றி. சிறு வயதில் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன், இப்ப காரியம் மட்டும் ஞாபகம் இருக்கு, காரணம் மறந்துட்டது. இன்னிக்கு உங்க விளக்கத்தால் நான் தெளிவடைந்தேன், அலுவலகத்தில் நேரம் ஒதுக்கி எனக்கு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி மாமி.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்