ஹர்ஷாவுக்கு வாழ்த்துக்கள்

25 குறிப்புகள் கொடுத்து அறுசுவையின் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்த ஹர்ஷா (அன்பரசி) விற்கு வாழ்த்து சொல்ல வாங்க

வாழ்த்துக்கள் அன்பரசி!

அப்பா பருப்பு ரெசிபில இருந்து நானும் ஒவ்வொரு நாளா எண்ணிட்டே இருந்தேன். நல்லவேளை நானே தொடங்கிட்டேன் :)

வாழ்த்துக்கள் அன்பரசி!
மேலும் மேலும் பல குறிப்புகள் கொடுத்து பல ஸ்டார்கள் பெற வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பான அன்பரசி, நீங்கள் இன்னும் பல குறிப்புகளை தரவேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா அன்பரசி இப்பதான் நீங்க குறிப்பு கொடுக்க ஆரம்பிச்ச மாதிரி இருக்கு;)
உங்க வெஜ் குருமா நான் மறக்கவே மாட்டேன். சூப்பரான சுவை;)
உங்க எல்லாக்குறிப்பும் செஞ்சு பாத்து பதிவு தருவேனாம், அதுக்குள்ள நீங்க நூறு பதிவு கொடுத்தரனுமாம் எப்படி நம்ம டீல் ஓகேவா;-)

மேலும் பல குறிப்பு கொடுத்து எங்களை அசத்தி பல தங்கநட்சத்திரங்களை அள்ள வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

அன்பு அன்பரசி,

மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

சீக்கிரமே மேலும் பல நூறு குறிப்புகள் கொடுங்க!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

இன்னும் வேண்டும் பல ஆயிரங்கள். தொடருங்கள்

விரைவில் தங்க நட்சத்திர விருது பெற வாழ்த்துக்கள் ஹர்ஷா

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பரசி,
சீக்கிரமே சதம் அடிக்க வாழ்த்துக்கள்
மேலும் பல நல்ல குறிப்புகளை தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹர்ஷா, வாழ்த்துக்கள். இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.
வாணி

பாலாஜி,
என்னை குறிப்புகள் அனுப்ப ஊக்கப்படுத்திய என் அன்புக்கணவர் பாலாஜிக்கு என நன்றிகள்.என் சாதா சமையலையும் புகழ்ந்து என்னையும் குறிப்புகள் அனுப்ப தூண்டியதற்கு நன்றி.பல சமயம் ஃபோட்டோகிராஃபராக இருந்து உதவியதற்கும் நன்றி.(நேரில் நன்றி சொல்லாததால்,இங்கு சொல்கிறேன்.)

கவிதா(uk5mca),
நீங்கள் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்.உங்களைப் பார்த்துதான் நான் குறிப்புகள் அனுப்பத் தொடங்கினேன்.உங்களுக்கும் நன்றி.

அட்மின் அண்ணா,
நான் அனுப்பும் எளிய,எல்லாருக்கும் தெரிந்த குறிப்புகளையும் எதுவும் சொல்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய அட்மின் அண்ணாவுக்கு நன்றி.எனது குறிப்புகள் தளத்தில் வெளிவர வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றிகள்.

ஆமி,
எனக்கு கிடைத்த முதல் அறுசுவை தோழி. என் முதல் பதிவில் இருந்து,இதுவரை எனக்கு ஆதரவு தரும் அன்பு தோழி ஆமிக்கு நன்றி.எனக்காக இந்த இழையை ஆரம்பித்ததற்கும் நன்றி.

அம்மா,அக்கா(குந்தவை),அத்தை,
நான் கொடுத்த ரெசிப்பிகள் பலவும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டது.என் அம்மாவுக்கும் என் நன்றிகள்.வெஜிடபிள் நூடுல்ஸ்,தக்காளி குழம்பு(இட்லிக்கு)இரண்டும் அக்காவின் ரெசிப்பிகள்.பீர்க்கங்காய் சட்னி,என் மாமியாரின் குறிப்பு.அவர்களுக்கும் என் நன்றிகள்

அன்பு ஆமி,
என்னுடைய குறிப்புகளை,எண்ணி,எண்ணி வாழ்த்து சொல்ல காத்து இருந்த உங்கள் அன்புக்கு நன்றி.காலையில் அறுசுவைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.இதில் உங்களுக்கும் பங்கு உண்டு. உங்களின் ஒரு குறிப்பும் இதில் இருக்கு.உங்கள் குறிப்பை நான் அனுப்ப அனுமதித்ததற்கு நன்றி.

அன்பு கல்ப்ஸ்,
உங்க வாழ்த்துக்கு நன்றி பா.எளிமையான குறிப்புக்கும் பதிவு போடும் உங்களால் தான் என்னால் குறிப்பு அனுப்ப முடிகிறது.

ஜெயலக்ஷ்மி,
எப்படி இருக்கீங்க? வெஜ் குர்மா ரெசிப்பியில் உங்களின் பதிவை நானும் மறக்க மாட்டேன்.உங்க அன்பான பதிவுக்கு நன்றி. நீங்களும் சீக்கிரம் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

சீதாலக்ஷ்மி அம்மா,
உங்க பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சியா இருக்கு.உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா.

மேலும் சில பதிவுகள்