மைதா ஹல்வா.

தேதி: October 27, 2010

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - அரைக்கிலோ
நெய் - அரைக்கிலோ
ஏலக்காய் - 3
கேசரி கலர் - சிறிதளவு
பால் - ஒருசிறு கரண்டி அளவு
முந்திரி பருப்பு - 50 கிராம்


 

மைதாவை நன்கு சலித்துக்கொண்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
அதிலேயே கலர் பொடியையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் ஏற்றி ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றிசர்க்கரையைப்போட்டுகரைய விடவும்.
சர்க்கரை கரைந்ததும் ஒருகரண்டி பாலை ஊற்றவும்.சர்க்கரையில் உள்ள அழுக்கு மேலாக நுரைத்து வரும். அதைக்கரண்டியால் எடுத்து விடவும்.
ஒருகம்பி பாகு பதம் வந்ததும் கரைத்துவைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.
கெட்டி ஆக,ஆக, நெய்யை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிளறிவிடவும்.
அல்வா பதம் வந்ததும், விட்ட நெய் கசிந்து வெளிவர ஆரம்பித்தவுடன்,
கீழே இற்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து ச்சேர்க்கவும்.
நன்கு ஆறியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.


கோதுமை அரைத்து, பால் எடுத்து என்று கஷ்டமில்லாமல் இந்த அல்வா மிகவும் ஈசியாக செய்துவிடலாம். டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஈஸியான குறிப்பு கொடுத்துள்ளீர்கள் நன்றி.
நான்ஸ்டிக் பான் ல செய்ய முடியுமா, பாகு கம்பி பதம் நு சொல்லி இருக்கீங்க, சுமார் எவ்ளோ நேரம் அடுப்பில் வைத்த பிறகு கம்பி பதம் வரும் நு சொல்ரீங்களா. அல்வா செய்து பார்க்கனும் நு ஆசை. ஆனா செய்ய பயமா இருக்கு, நீங்க கொஞ்சம் என் சந்தேகங்களை தீர்த்து வெய்யுங்களேன் ( சிரமம் கொடுப்பதர்க்கு மன்னிக்கவும்)

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”