நவீனா பிறந்தநாள் விழா படங்கள் சில

நவீனா பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய சகோதரிகளுக்காக, தற்காலிகமாக ஒரு பக்கம் தொடங்கி அங்கே விழா பற்றிய சிறிய தொகுப்பையும், சில படங்களையும் இணைத்துள்ளேன். படங்கள் லோடு ஆக டைம் எடுக்கும் என்பதால் அங்கே கருத்து தெரிவிக்கும் வசதி கொடுக்கப்படவில்லை. :-)

பிறந்த தின நிகழ்ச்சியை பார்வையிட விரும்புகின்றவர்கள் மட்டும் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும். :-)

<a href="/tamil/node/16818"> நவீனா பிறந்தநாள் கொண்டாட்டம்.. </a>

கொண்டாட்டாங்கள் சூப்பர்.

ஓ பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லா சிறப்பா இருந்துச்சுனு படங்கள் பார்த்தாலே தெரியுது. இளவரசி ரொம்ப அழகா இருக்காங்க. அதுவும் தேவதை போலவே ஜொலிக்கிறாங்க. ஆமாம் ராணியும் இளவரசியும் இருக்காங்க ராஜாவயே காணுமே ராஜா எங்க?

பாபு அண்ணா, குட்டிக்கு முதல்ல சுத்தி போடுங்க. இது என்ன நாலு போட்டோ போட்டு எங்களை ஏமாத்தலாம்னு பாக்கறீங்களா :))) எல்லா போட்டோவையும் போடுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லா அசத்திட்டீங்க அண்ணா!!! எல்லாமே சூப்பரா இருக்கு. நாங்களே பர்த்டேக்கு வந்த மாதிரி இருந்தது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கலகீடீங்க அண்ணா..... சொல்றக்கு வார்த்தை இல்ல..... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு !!!!!!!!!பெரிய குண்டு பூசணிக்காய் வெச்சு சுத்தி போடுங்க!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாபு அண்ணா,
பிறந்த நாள் கொண்டாட்டம் நல்ல முறையில் நடந்து இருக்குனு படங்கள் பார்த்தாலே தெரிகிறது.பிறந்த நாள் விழாவில்,"விழா நாயகி நவீனா" enjoy பண்ணாங்களா? நவீனாவின் உடைகள் ரொம்ப அழகா,பொருத்தமா இருக்கு.(செண்பகாவின் செலெக்ஷனா?).உங்கள் குடும்ப ஃபோட்டோ போடுங்க.உங்களையும் பார்க்க ஆவலாய் இருக்கோம்.செண்பகாவின் முகத்தில் களைப்பு தெரிந்தாலும் உற்சாகமாய் இருக்கிறார்(எடை குறைத்து இன்னும் அழகா இருக்காங்க).உங்கள் பதிவு பார்த்து,முழுத் தோட்டமும் பார்க்க ஆசையா இருக்கு.முடிந்தால் அந்த படங்களையும் இணையுங்கள்.

முதல்ல.. ரொம்ப நல்லா கொண்டாடிருக்கிங்க அண்ணா.. அதுக்கு ஹேட்ஸ்ஆப்..
ரெண்டாவது குட்டி ரொம்ப ரொம்ப அழகு.. சுத்தி போடுங்க
மூன்றாவது போட்டோ போட்டதுக்கு தேங்ஸ்
நான்காவது பாபு அண்ணா மிஸ்ஸிங்.. அது ஏன்? எங்க போனீங்க...

மொத்தத்துல அசத்திட்டீங்க நால்வர் குழு. சூப்பர் போங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பிறந்தநாள் கொண்டாட்டம் சூப்பரா நடத்தியிருக்கீங்க. நவினாகுட்டி குட்டிஏன்சல் மாதிரி இருக்கா;)
குட்டியோட ஃபோட்டோ ஃபோஸ் எல்லாமே சூப்பர், அவ்வளவு கூட்டத்தப்பாத்தும் அவளுக்கு பயமில்லைன்னு அவ சிரிப்பே காமிக்குது;)
செண்பகாவும் நல்லா இருக்காங்க;)
ஆனா கடைசி வரைக்கும் உங்க ஃபோட்டோவைதான் காணோம், சீக்கிரமா இணைச்சிருங்கண்ணா. குடும்ப ஃபோட்டோவா போட்டீங்கனா நல்லாயிருக்கும்;))

Don't Worry Be Happy.

பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளீர்கள் என்று படங்களை பார்த்தாலே தெரிகின்றது.
சென்பகாவும், நவீனா குட்டியும் நன்றாக இருக்கின்றார்கள்.
ஆமா......கடைசிவரையும் உங்களை தேடினேன். ஒரு படத்தில் கூட உங்களை காண முடியவில்லை.
உங்கள் அக்கா பெண்ணையும் பார்க்க முடிந்ததில் சந்தோசம்.

///தோட்டத்தில் வேலையே செய்ய முடியாத அளவுக்கு சுட்டெறித்த சூரியன், முதல் நாள் திடீரென காணாமல் போக, மேலே பார்த்தால், என்னுடைய கலரில் நிறைய மேகங்கள்/// இப்படி உண்மையை போட்டு உடைக்கலாமா?LOL

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சார் நவீனா பாப்பா வின் புகைபடங்கள் மற்றும் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்