கைவினை பொருட்கள் materials எங்க கிடைக்கும்னு சொல்லமுடியுமா?

நீங்களும் செய்யலாம் பகுதியில் நல்ல நல்ல கைவினை பொருட்கள் செய்ய சொல்லிதராங்க அந்த பொருட்கள் எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்லமுடியுமா?

மேக்ரொனி த்ரெட் வொர்க் பற்றி தெரிஞ்சா
சொல்லிகுடுங்க please.

முதலாவது கேள்விக்கு - என் குறிப்பானால் அங்கேயே அந்த த்ரெட்டில் கேட்டால் சொல்வதற்குச் சுலபமாக இருக்கும். (நான் ஆலந்தூர் இல்ல. ஆனால் வேற ஐடியா சொன்னாலும் சொல்வேன்.) ;) அது போல் மற்றவர்களும் வந்து உதவுவார்கள்.

நீங்கள் 'macrame' பற்றிக் கேட்கிறீர்களா? இப்போ கொஞ்சம் நேரம் குறைச்சலாக இருக்கிறது. அவசரமாக வேண்டுமா?

‍- இமா க்றிஸ்

கைவினைப்பொருட்கள் கிடைக்கும் இடம் சொல்லியதுக்கு மிக்க நன்றி.( ameena madam / sangee madam )

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

முதல்ல நீங்க இப்ப வசிக்கிற இடத்தைச் சொன்னாதானே பொருட்கள் எங்கே கிடைக்கும்ன்னு சொல்ல முடியும்?
அன்புடன்
ஜெமாமி

மிக்க நன்றி jayanthi நான் பிறந்தது ஆலந்துரில் இப்ப இருப்பது கூடுவாஞ்சேரியில்.
ஊர் பெயர் பார்த்ததும்
சிரிக்காதீங்க.

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

தி.நகர் ரங்கநாதன் தெருவில் ராஜா த்ரெட் வொர்க் இங்கு கைவேலை மற்றும் அனைத்து பொருட்கலும் கிடைக்கும்.நீங்கள் குறிப்பிட்ட கைவேலை பொருட்கள் தாம்பரம் சப்வே அருகில் இப்போது ஜெயராம் ஸ்வீட்ஸ் அருகில் ஒரு நூல் கடையில் கிடைக்கும். இங்கு நேரில் வந்து பாருங்கள். புடவை வேலைபாடுகள் மற்றும் சம்கி போன்றவை தி.நரில் நான் மேலே குறிப்பிட்ட கடை மற்றும் இப்பொது சரவணா ஸ்டோர் tnagar& usman road கடைகலில் கிடைக்கிறது. கொஞ்ஞம் பொருமை இருந்தால் ரங்கநாதன் தெருவில் விசாரித்தால் நிறைய கைவேலை கடைகள் உள்ளன.

எனக்கு தெரிஞ்சு சென்னைல அடையார் lb road rs shopping centre'ல கிடைக்கும், தி.நகர்'ல கிடைக்கும், ஒரு சிலது பாரீஸ் கார்னர்'ல கூட கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருர் மாவட்டதில எங்க கைவினை பொருட்கள் கிடைக்கும்னு சொல்ல முடியுமா...

சென்னையில்
தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜெயசந்திரன் பாத்திரக்கடைக்கு எதிரிலேயே பாத்திமா த்ரெட் ஸ்டோரில் தான் வழக்கமாக நான் வாங்குவேன்.

இல்லையேல் சற்றி தள்ளி பாண்டியன் வளையல் கடையில் விசாரித்தால் சொல்லுவார்கள். அந்த கடையின் அருகிலேயே பாண்டியன் த்ரெட் ஸ்டோர் இருக்கு.

இந்த கடைகளில் கூட பாரிஸ் கார்னரில் உள்ள கடைகளில் (இல்லாத சில பொருட்கள்) தான் வாங்குவதாக சொல்லுவார்கள்.

உங்களுக்கு எது வசதியோ அங்கு வாங்குங்கள். கூடுவாங்சேரி என்பதால் தாம்பரம் கூட உங்களுக்கு பக்கம் தனே! அங்கேயே வாங்குங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஷைதா (பெயர் சரியா)
கூடுவாஞ்சேரியில் தான் இருக்கீங்களா? நானும் அங்க தான் 3 வருஷம் இருந்தேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

எப்படி இருக்கீங்க. நீங்களும் கூடுவாஞ்சேரில இருந்ததா சொன்னீங்க ரொம்ப சங்தோஷம்...

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

மேலும் சில பதிவுகள்