6வாரம் கர்ப்பம் எந்த பயிர் வகைகள் சாப்ட வேண்டும்.

ஹாய் தோழீஸ் என்ன திட்டாதிங்க. இதுக்கு எல்லாம் புதிய திரட் ஓபன் பன்னகூடாதுனி சொல்லிடாதிங்க, பழைய பக்கம் போய் தேடுர மாதிரி நான் இல்ல. ரொம்ப கக்ஷ்டமாக இருக்கு. அதான் புதிதா தேடினேன்பா. கோச்சிகாதிங்க, முக்கியமாக நான் அருசுவை உறுப்பினர்களுக்கு தான் நன்றி சொல்லனும். எனக்கு அம்மாவா அக்காவா தங்கையா தோழீயா இருந்து எனக்கு நான் மனம் வருந்தும் போது அறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றிபா. ஏன்னா 2வருடம் கழித்து நான் இப்பம் தான் கடவுள் கிருபையால் கர்ப்பம் அடைந்து இருக்கேன். நான் வெளிநாட்டில் தனியாக கனவருடன் இருக்கேன். பெரியவங்க யாரும் இல்லை. அதனால் தான் உங்க அட்வெய்ட்ஸ் கேட்க வந்து இருக்கேன். என் கனவர் ரொம்ப சந்தோசமாக இருக்காங்க, அதனால சும்மா சாப்ட சொல்ராங்க, என்னால முடியல. இப்போதே எனக்கு ஜூஸ் ரொம்ப கலந்து தாராங்க, அப்புரம் நான் என்ன என்ன பயிர் வகைகள் இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அது எப்படி சமச்சி சாப்ட வேண்டும். என்ன என்ன கடலை வகைகள் சாப்ட வேண்டும் அதை எப்படி சமச்சி சாப்ட வேண்டும். எந்த நேரத்தில் சாப்ட வேண்டும்பா. புதிய திரட் ஓபன் செய்த்துக்கு சாரிப்பா. கோச்சிக்காதிங்க, உங்களுக்கு பதில் போட முடியாவிட்டாலும் எனக்காக அந்த திரட் தேடியாவது இங்க தந்தா நல்லா இருக்கும். என்னா ரொம்ப நேரம் இருக்க முடியலபா. சாரி,

உங்க பதிலுக்காக காத்து இருக்கேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா
முதல்ல வாழ்த்துக்கள்பா. எப்படி இருக்கீங்க..(நீங்க தானே முட்டைக்கோஸ் கூட்டு கேட்டது)
என்ன மாதிரியான பயறு வகைகள் னு கேளுங்கப்பா.. பயிர் பச்சை எல்லாம் சாப்பிடாதீங்க சரியா? :)

பயறு வகைகள் இப்ப 6 மாசம் சாப்பிடலாமா என்பது தெரியவில்லை. பயறு வகைகள் வாயு தன்மை அதிகம் கொண்டவை. வாயுப்பிடிப்பு இப்ப ஏற்பட்டா டெலிவரி ஆகுற வரைக்கும்போகாதுன்னு சொல்லுவாங்க. அதனால நிறைய பழரசம் குடிங்க.அதாவது ஃப்ரஷ் ஜுஸ். சீரகக்கஷாயம் குடிக்கலாம்.
அதிக காரம் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் குறைச்சுக்கோங்க.

இந்த லிங்க் போய் பாருங்க. உபயோகமா இருக்கும் உங்களுக்கு
http://www.arusuvai.com/tamil/node/9520

நல்லா ரெஸ்ட் எடுங்க. 7 மாசம் ஆனதும் நல்லா வாக்கிங் போங்க. வீட்டு வேலைகளை தாராளமா பாருங்க. கண்டிப்பா நார்மல் டெலிவரி நடக்கும். வாழ்த்துக்கள்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சோனியா வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
மனசை சந்தோஷமா வைச்சுக்குங்க. இந்த லின்க் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/16326
http://www.arusuvai.com/tamil/node/16150
http://www.arusuvai.com/tamil/node/3407

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் ராதா ரொம்ப நன்றிபா. ஆனால் நான் இப்போது தான் 6வாரம் கர்ப்பமாக இருக்கேன். அதற்க்கு ஏற்தார்போல சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் தோழீஸ் என்னப்பா நான் கேட்டத்துக்கு பதில் வரல. என்ன என்ன பயிர் வகைகள் உண்டு. அதை எந்த நேரத்தில் நான் சாப்ட வேண்டும். எப்படி அதை சமைக்க வேண்டும் சொல்லுங்கப்பா. மகேஸ் நன்றி. உன் குழந்தை நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹை சோனியா... கர்ப்பமா??? :) ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். எந்த குறையும் இல்லாம நல்லபடியா குழந்தை பெற்ரெடுக்க பிராத்திக்கிறேன். வாழ்த்துக்கள் சோனியா. பச்சை பயிறு முளைகட்டி சாப்பிடுங்க. சுக பிரெசவம் ஆகும்'னு சொல்வாங்க. பொதுவாவே எல்லா பயிறும் (கொண்டைகடலை, மொச்சை, காராமணி, பச்சை பயிறு) அளவா சேர்த்துக்கங்க.... உடம்புக்கு நல்லது. கொள்ளு மட்டும் வேண்டாம், அது சூடு. சந்தோஷமா இருங்க... ஆரோகியமா சாப்பிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டிப்பெண் சோனியாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் வனிதா அக்கா ரொம்ப நன்றி. நீங்க சொன்னத நான் செய்ரேன். இமா அம்மா தாங்க்ஸ்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு எதுவும் சாப்ட பிடிக்கலபா. எனக்கு இப்பம் கல்யாண வீட்டில வைக்கிர ரசம் சாப்ட ரொம்ப ஆசையா இருக்கு. யாருக்காவது கல்யாண வீட்டு ரசம் வைக்க தெரியும்மாபா. தெரிந்தா சொல்லுங்க. என் கனவர் புல்லா நான் வெஜ் தந்து சாப்பாடு மேல வெருப்பே வந்த்துடுபா. யாராவது கல்யான வீட்டு ரசம் வைக்க தெரிந்தா சொல்லுங்கபா. அப்படியே கல்யாண விட்டில சாப்டுரது போல இருக்கனும் :))

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னப்பா யாரும் பதில் போடல

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்