உதவி ப்ளீஸ்!!!!!!!pco+rubella negative

அன்பு தோழிகளுக்கு
வணக்கம். என் சந்தேகளுக்கு கண்டிப்பாக உங்களிடம் இருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.எனக்கு கல்யானமாகி ஒரு வருடம் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.DOCTOR idam சென்று check up செய்த போது PCOS (2.3/2.3 in the right ovary)இருப்பதாக சொன்னர்கள். இது சிறியது தான் என்றும் இதற்கு மாத்திரை வேண்டாம் என்றும் சொன்னார்கள்.weight reduce செய்தால் போதும் என்றும் சொன்னார்கள்.pcos ku treatment எடுத்தால் twins பிறப்பதற்க்கு வாய்ப்பு உண்டு அதனால் treatment வேண்டாம் என்று சொன்னர்கள்.என்னுடைய சந்தேகம் pcos உடன் கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டா.?யாருக்காவது இந்த மாதிரி நடந்திருக்கா.duphaston 10mg (regulate the irregular periods)என்ற மாத்திரை மட்டும் use பண்ண சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி அனுபவம் யாருக்கேனும் உண்டா.

அடுத்து rubella . test எடுத்ததில் rubella negative(0.27) ஆக இருக்கிறது.இதற்கு vaccination எடுத்துக சொன்னார்கள். அது எடுத்தால் 3 months கு கர்ப்பம் தரிக்க கூடாது என்றும் சொன்னர்கள். நான் இந்த மாதம் எதிர்பார்ப்பதனால் 3 monhts wait பண்ண விருப்பம் இல்லை.கடவுள் மேல் நம்பிக்கை வைத்து நல்லதே நடக்கும் என்று நம்புகிறென் இந்த மாதிரி அனுபவம் யாருக்கேனும் உள்ளதா . எந்த பாதிப்பு இன்றி குழந்தை பிறந்திற்கா தயவு செய்து இங்கு பகிரிந்து கொள்ளுங்கள்.

பிசிஓ எஸ் பத்தி எனக்கு தெரியாது..ஆனால் ருபெல்ல வேக்சின் போட்டு மூனு மாசம் வெயிட் பன்ன சொன்னாங்க தானே..பிறகு ஏன் இப்படி அவசரப்படறீங்க?ஆரோகியமான குழந்தை கிடைக்க தானே 3 மாசம் சொல்றாங்க..எதோ தெரியாம நடந்தாலும் ஓ கே காத்திருக்க விருப்பமில்லைன்னு சொல்றீங்க..இந்த மாதிரி விஷயங்களில் விளையாட்டு காம்மிக்காதீங்க ப்லீஸ்.
நமது அவசரம் பெரிய அவஸ்தையில் கொண்டு போய் விட வாய்ப்புண்டு

ஹாய் தோழீ பிசிஓ பத்தி பயப்படாதிங்க. பிசிஒ என்பது எனக்கு தெரிந்து கரு முட்டைகளை சுற்றி சின்ன சின்ன நீர்கட்டிகள் இருக்கும் அவளவுதான் பா. டாகடர் சொன்ன மாதிரி 3மாதம் டீரீட் மெண்ட் எடுத்துகோங்கபா. அது தான் நல்லது. அந்த நீர் கட்டிகள் ஸ்பேம் உள்ள போக விடாது. நீங்க ட்ரீட் மெண்ட் எடுத்த கண்டிப்பா பலன் இருக்கு. நானும் 2வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். 5மாதத்திற்க்கு முன்னாடி தான் இந்தியா போனேன் அங்க ( நான் மட்டும் தான்) போய் டாக்டரிடம் காட்டி என்ன வென்று தெரிந்து கொண்டேன். எனக்கும் பிசிஓ இருந்தாக சொன்னாங்க, ஆனால் தொடக்க கட்டம் தான் சோ ஊசி வேண்டாம் மாத்திரைல குனபடுத்தலாம் என்று சொன்னார்கள். உங்களை போல தான் 3மாதம் மாத்திரை கொடுத்தாங்க. அப்புரம் 4வது மாதம் ஒரு 5மாத்திரை தான் கொடுத்தாங்க, அதுவும் பிரியட் அடுத்த 5நாள் தான் சாப்ட சொன்னாங்க. ஆனால் எனக்கு அந்த மாதம் கர்ப்பம் தரிக்க வில்லை. மறுபடி 2மாதம் முன்னாடி நானும் என் கனவரும் இந்தியா போனோம். அதே டாக்டரிடம் போய் பார்த்தம். எல்லாம் நார்மலாக இருக்கு என்று சொன்னாங்க. அதே 5மாத்திரை மருபடியும் கொடுத்தாங்க. நான் இப்பம் 40நாள் கர்ப்பமாக இருக்கேன். என்னால் டைப் பன்ன முடிய வில்லை. இருந்தாலும் உங்க மனவேதனை நானும் அடைந்து இருக்கேன். அதனால் தான் உங்களுக்கு இந்த தகவல் சொல்கிறேன். டாக்டர் சொல்ரது மாதிரி கேளுங்க. விரைவில் தாயாக வாழ்த்துகள்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி. என் பிரச்சனை pcos-ku இது வரை எனக்கு மாத்திரை தரவில்லை. weight reduce பண்ணுங்க பண்ணுங்க தான் சொல்றாங்க .(my weight now :60kg,before 55 kg)என்னால் முடிந்தவரை try பன்றேன்.ஆனால் நாட்கள் தான் செல்கிறது. மாத்திரை இல்லாமல் நீர்க்கட்டிகளை கரைக்க முடியுமா.அவர்கள் சொல்வது போல் மாத்திரை இல்லாமல் சாத்தியமா?

அன்பு தோழிக்கு வணக்கம். நானும் இதே பிசிஓஸ் ஆல் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்துகொண்டிருக்கின்றேன். தோழியே நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொளவேண்டும், பிசிஓஸ் அளவினை பொறுத்தே அதன் தாக்கத்தை பொறுத்தே மருத்துவர்கள் மாத்திரையோ, ஊசியோ பரிந்துரைப்பார்கள். உங்களுக்கு மிகவும் சிறிய அளவே உள்ளதால் தான் அவர்கள் செல்ப் ட்ரீட்மென்ட் சொல்லியுள்ளார்கள். நீங்கள் தினமும் 1மனி நேரம் வாக்கிங் போங்க மா. இனிப்பை தொடவே தொடாதீர்கள். ஆயில் ஆயிட்டம் வேண்டாம். எதுவாக இருந்தாலும் பொறுமையை கடைபிடியுங்கள் வெற்றி நிச்சயம்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

hema இங்க வந்து பாருங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

thanks rani,hai sree ippa enga irukkenga ippa kulanthai piranthurucha.athuku appuram enna pannineenga,ippa patha pathil sollunga pa

Hai madam eanakku mirage aagi 2 year aakuthu. Child kku treatment eaduthuittdu ierukken. Pcod problem. Karumuittdai varala injection pannenaga nalla valarnthau.next vedikka injection pannenaaga aanalum vedikkala. Marupadeum oru injection poittdaga vedikkala. Aanal karumuittda size konjam kuraiva ierukku. Vedethalum veditherukkalam enntru doctor sonnaga. But eannakku ennapannuvathu enndru thereyala. Please eanakku. Help pannuga please konjam information koduga plesss sis

வணக்கம் & நல்வரவு.

நீங்க பண்ணக் கூடியது, அமைதியாக மனதை வைத்திருப்பதும் சிகிச்சையை சொன்னபடி தொடர்வதும் தான். இங்கு சகோதரிகள் பாசிப்பயறு சாப்பிடச் சொல்லிச் சொல்லியிருக்கிறாங்க. அது உணவும் தான். சாப்பிடுங்க. உதவலாம். //Vedethalum veditherukkalam enntru doctor sonnaga.// என்றால் இந்த மாதமே கூட கருத்தரிக்கலாம் இல்லையா! மனசை பாஸிடிவ் ஆக வைச்சிருங்க. விரைவில் எல்லாம் நலமாகும். என் அன்பு பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்