புக்மார்க் செய்வது எப்படி?

தேதி: October 30, 2010

4
Average: 3.9 (11 votes)

 

Ohp ஷீட்
க்ளாஸ் கலர்ஸ்
க்ளாஸ் லைனர்
கத்திரிக்கோல்
வெல்வெட் துணி
ரிப்பன் - பச்சைநிறம்
மெல்லிய லேஸ்
கோல்டுநிற கிலிட்டர்ஸ்
ஸ்கெட்ச் பென்

 

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Ohp ஷீட்டில் 11 செ.மீ நீளமும், அகலம் ஒரு பக்கம் 5 செ.மீ அளவும், மற்றொரு பக்கம் இருமுனைக்களிலிருந்து 2 செ.மீ அளவுக்கு கோடு வரைந்து கொள்ளவும். நடுவில் ஒரு செ.மீ இடைவெளியில் அரை வட்டம் வரைந்து கத்திரிக்கோல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதேப்போல் Ohp ஷீட்டின் மற்றொரு பக்கத்தில் நீளம் 6 செ.மீ அளவும், அகலம் மேலே சொல்லியது போல் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதன் ஓரங்களில் கருப்புநிற க்ளாஸ் லைனரால் மெல்லியதாக அவுட் லைன் போட்டுக் கொள்ளவும்.
11 செ.மீ அளவில் உள்ள Ohp ஷீட்டின் கீழ் பகுதியில் 5 செ.மீ நீளத்திற்கு "ப" வடிவில் லைனரால் அவுட் லைன் வரைந்து முடிக்கவும். அதன் பின்னர் படத்தில் உள்ளது போல் அரை வட்டங்கள் வரைந்து முடித்து அவை காய்ந்ததும், அதில் நீங்கள் விரும்பிய க்ளாஸ் கலரை நிரப்பிக் கொள்ளவும்.
வெல்வெட் துணியில் சிறிய ஹார்ட் டிசைனை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பச்சைநிற ரிப்பனை 3 செ.மீ அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொண்டு, அதன் ஒரு பக்கத்தின் அடியில் "வி" வடிவில் நறுக்கிவிடவும்.
பிறகு நீளம் 6 செ.மீ உள்ள ஷீட்டில் படத்தில் இருப்பது போல் முதலில் ரிப்பனை ஒட்டி விட்டு அதன் மேல் ஹார்ட் டிசைனை ஒட்டவும். அடுத்து க்ளாஸ் கலரால் டிசைன் செய்யப்பட்ட ஷீட்டில் கோல்டுநிற கிலிட்டர்ஸால் மூன்று ஸ்டார் வரைந்துக் கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து அரைவட்டம் உள்ள இடத்தின் நடுவில் துளையிட்டு 8 செ.மீ அளவுள்ள மெல்லிய லேஸை கோர்த்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
அனைவராலும் மிகவும் எளிதாக செய்யக்கூடிய புக்மார்க் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வித்தியாசமா யோசிச்சு வித்தியாசமா செய்து காட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்க தான். சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு டீம். கட்டாயம் செய்வேன்.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்குபா வாழ்த்துக்கள்;-)
கைவசம் எல்லாமே இருக்கு, இந்த மாதிரி ஒன்னு செய்யறதுக்காகவே இனி நான் புக்ஸ் படிப்பேன்;-)

Don't Worry Be Happy.

book mark is super team.i can also do this.

kalaimathi

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta