அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),
பிரிய மனமில்லாமல்........
என்னப்பா இப்படி கோவையில் உள்ளோர்கூட வீட்டுக்கு இன்னும் போகலையா?யாரையும் பிரிய மனமில்லாமல் அங்கேயே இன்னும் உள்ளீர்களா?
ரேணு
நாம பேசாம கெட்டூகெதர் கலந்திருக்கலாம்;-)
Don't Worry Be Happy.
ஜெயா
என்ன பண்ணறது ஜெயா வரமுடியலையே......
ஜெயா, ரேணு
காலைலருந்து நாமளும் இவ்வளவு ஆசையாக வந்து பாத்துட்டு இருக்கோம், யாருமே எதுவும் சொல்லலையே இன்னும். ஹும்!
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா
சீதா நாளை யாருடனும் பேசாமல் விட்டுடலாமா?
சீதாம்மா,ரேணு,ஜெய்
சீதாம்மா,ரேணு,ஜெய், நான் தான் இங்கே லூசு மாதிரி புலம்பிட்டு இருக்கேன்னா, நீங்களுமா? சரியாப்போச்சு. என் நினைப்பெல்லாம் கோவைல தான் இருக்கு. ஆத்துக்கார்கிட்ட சொல்லி பினாத்திட்டே இருந்தேன். அவருக்கு காதே புளிச்சு போச்ச்ச்ச்சு ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அவர்கள் எல்லாம் ரொம்ப டயர்டா
அவர்கள் எல்லாம் ரொம்ப டயர்டா இருப்பர்கள்பா.ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுங்களேன்.
தப்ப இருந்தால் sorry
ஹசீன்
ஹசீனா
ஹசீனா, எதுக்குப்பா சாரி கேட்டீங்க? எனக்கு உண்மை தெரிஞ்சாகனும். என்ன தப்பா சொன்னீங்கன்னு சாரி கேட்டீங்க? எனக்கு இப்பவே சொல்லுங்க பதில் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ரேணு, கல்பனா
ரேணு,
பேசாம எங்கே இருக்கறது? ஃபோன் நம்பர் இருந்தா இப்பவே பேசிடலாம், சரி, பாக்கலாம், தூங்கப் போற வரைக்கும் அறுசுவை பாத்துட்டுதான் இருப்பேன்னு நினைக்கிறேன்.
கல்பனா,
நினைப்பு பூராவும் கோவைலதான் இருக்கு. நான் சென்னை கெட் டு கெதர்ல கலந்துகிட்டப்ப, மதியமே வந்து, இங்க பதிவு போட்டேன், மத்தவங்களும் அப்படித்தான்.
சரி, பாக்கலாம், நாளைக்காவது வந்து சொல்லல....
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா
சீதாம்மா, எல்லாரும் உங்களை மாதிரி வர முடியுமா? எங்க அவசரம் தெரிஞ்சி நீங்க சென்னை கெட்-டூ-கெதர் முடிஞ்சவுடனே பதிவு போட்டிங்க. அந்த பொறுப்பு இருக்கா? இப்ப கோவை போனவங்களுக்கு :( நாளைக்கு வரட்டும் அறுசுவைக்கு, அதுக்குள்ள பழசை ரெடி பண்ணி வைக்கிறேன். பார்சல் பண்ண ;))
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.