கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

எல்லாரும் நல்லாருக்கீஙகளா? சாரிங்க நான் கெட்டூகெதர் முடிஞ்சு என் வீட்டுக்கு வரதுக்கே 9மணி ஆய்ருச்சு. இப்பதான் டைம் கிடைச்சுது மன்னிக்கவும் எல்லாரும் லேட்டா வந்து பேசறதுக்கு...

ரொம்ப சந்தோஷம் இன்னிக்கு... பாபு அண்ணா எதிர்பாத்ததுக்கும் மேல சிறப்பா கெட்டுகெதரை நடத்தி முடிச்சுட்டாங்க. செல்விம்மா, சுகந்தி, மஞ்சு மேம், கரோலின் மேம், சௌமியன் அண்ணா அவங்க துனைவி, சந்தினி மேம் அவங்க அம்மா, அப்பா, பொண்ணு, கவிசிவா அண்ணா, தவமணி அண்ணா அவங்க பொண்ணு பாரதி இன்னும் நிறைய பேர் வந்துருந்தாங்க எல்லாரோட பேரையும் சொல்ல முடிலை மன்னிக்கவும் பேர் விடுபட்டவங்களை சுகந்தி வந்து சொல்லுவாங்க.....

சௌமியன் அண்ணா கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிச்சாங்க அப்பறம் சுய அறிமுகம்... அது முடிஞ்சு அறுசுவையைப் பத்தி பகிர்தல்... அடுத்து பட்டிமன்றம் தலைப்பு அட்மின் அண்ணா சொன்னதுதான் திருமணத்திற்க்கு பிறகு மிகவும் சிரமப்படறது ஆண்களா? பெண்களா? அதுல ஆண்கள் பக்கம் பெண்களும் பெண்கள் பக்கம் ஆண்களும் பேசினாங்க. நடுவர் செல்விம்மா. நடுநிலையா நின்னு ரெண்டு பேருமே கஷ்டமும் படறாங்க அதனால சந்தோஷத்தை அடையராங்கன்னு தீர்ப்பு சொன்னாங்க. அப்பறம் போட்டோஸ், மவுனமொழி மீண்டும் போட்டோஸ்.... மதியம் சாப்பாடு, சாம்பார், தயுர், கோஸ் பொரியல், கூட்டு, இஞ்சிபுளி ஊறுகாய், அப்பளம், சூப்-னு நல்ல ஃபுல் சாப்பாடு... மறுபடியும் போட்டோஸ் அப்பறம் என்ன பேசிட்டு எல்லாரும் கிளம்பிட்டோம். ரொம்ப அழகான ஒரு நாளா இருந்துச்சு மறக்க முடியாத்தாவும்தான்....

இன்னும் நிறைய விஷயங்களை தோழிகள் வந்து சொல்லுவாங்க நானும் சொல்லறேன் இப்ப நேரம் இல்லை சோ நான் கிளம்பறேன்.

நிறைய தோழிகளை எல்லாருமே அப்ப நினைச்சுக்கிட்டோம்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஜிஜூ மேம், அவங்க பொண்ணு, கணவரோட வந்துருந்தாங்க இன்னும் யார்யாரை சொல்லலயோ அவங்கல்லாம் கோச்சுக்காதீங்க எனக்கு ரொம்பவே மறதி ஜாஸ்தி அதான். ப்ளீஸ் மன்னிச்சுக்கங்க...

ஹாய் கல்ப்ஸ் விரிவா சொல்ல முடியலைன்னாலும் சுருக்கமா சொல்லிருக்கேன் சோ நான் பாவம் பழசை அனுப்பி என்னை பழிவாங்கிராதீங்க ஓகே...... சொன்னவங்க நிறைய பேர் வராம போய்ட்டாங்க சோ அவங்களுக்கெல்லாம் அதை பார்சல் பன்னி அனுப்பிவைங்க ஓகே.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நல்லாருக்கீங்களா? இந்த த்ரெட் ஆரம்பிச்சதுக்கு தேங்க்ஸ்ங்க. எனக்கு அங்க நடந்ததை பகிர்ந்துக்கனும்கற ஆர்வத்துல தான் பதினோரு மணிக்கு வந்து பதிவு குடுத்துட்டு இருக்கேன். ஹாஹாஹா. ஓகே செம டயார்ட் நான் கிளம்பறேன்.

சாப்பிட்ட உடன் ஐஸ்கிரீம் குடுத்தாங்கப்பா அதை சொல்ல மறந்துட்டேன் அதான் இப்ப சொல்லிட்டேன்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா, கெட்-டூ-கெதர் கலந்துட்டு வந்த களைப்புலயும் எங்களுக்கு அதை உங்களால முடிஞ்சவரைக்கும் சொன்னீங்களே. அதுவே பெரிய சந்தோஷம் பா. நல்லா என் ஜாய் பண்ணீங்களா? அது போதும். நல்லவேளை என்னோட பழைய ஐட்டத்துல இருந்து நீங்க தப்பிச்சுட்டீங்க. எவ்ளோ பவர் பழசுக்கு ;) நாளைக்கு வர்றவங்களுக்கு இருக்கு சங்கதி ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லதா இதெல்லாம் டூ மச் மறதி :-(. கெட் டுகெதருக்கு வந்திருந்தது நாகைசிவா அண்ணா. கவிசிவா ஃபோனில்தான் உங்களோட பேசினாங்க(னேன்). முடிஞ்சா ஃபோனிலேயே பட்டியில் கலந்துக்கலாம்னு நினைச்சா நான் போன் பண்ணினப்போ பட்டி முடிஞ்சே முடிஞ்சு போச்சு :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா, இன்னைக்கு கெட்-டூ-கெதர்ல இதெல்லாம் வேற நடந்திருக்கா? சொல்லவே இல்லலல... நானும் அப்போதிலிருந்து மண்டைய போட்டு உடைச்சுட்டு இருந்தேன். கவிசிவா அண்ணா யூஎஸ்-ல இருக்குறதா சொன்னாங்களே. அவர் எப்படி கோவைலன்னு நினைச்சேன். நல்லவேளை வந்து என் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வச்சீங்க. எங்களை கூப்புடாம நீங்க மட்டும் பட்டில கலந்துப்பீங்களா? தி இஸ் டூ பேட்..... சொல்லிட்டேன் ஆமா ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நன்றிங்க நீங்களாவது வந்து சொன்னீங்களே;))

இல்லைனா இன்னிக்கு கனவுல கூட கெட் டு கெதர் என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு புலம்பியிருப்பேன்;(

Don't Worry Be Happy.

கோவை கெட் டு கெதர் இனிதே நிறைவு பெற்றுவிட்டதா? மிக்க சந்தோசம். ஹ
கெட்டுகெதருக்குப் போன எல்லோருமே இதில் உங்கள் அனுபவத்தை தாருங்கள்...

ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்னஎன்னவெல்லாம் கதைத்தார்கள் எனச் சொல்லுங்கள்.... ஆவலாக இருக்கின்றேன்.

முடிந்தால் புகைப்படம் போடுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கெட்டுகதர் பத்தி பேசகூடாதுன்னு 144 ஆ ஒருத்தரும் வரமட்ராங்களே!! லதா வந்து அங்கொன்றும் இங்கொன்றுமா சொல்லீருக்காங்க
நாளைக்குதான் எல்லாரும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்
பொன்னி

லதா சொன்னதிலிருந்து அனைவரும் மிகவும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கீங்கன்னு தெரியுது........ரொம்ப சந்தோஷம், என்ன நாங்கதான் கலந்துக்க முடியலை பரவாயில்லை அடுத்ததில் கலந்துக்கிறோம்.
அட்மின் அண்ணா பட்டியில் இப்படி ஃபோன் ஆப்ஷனெல்லாம் இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே..........
வயிறு நிறைய சாப்பிட்டு மனம் நிறைய சந்தோஷப்பட்டீங்களா?
செளமியன் நீங்கலும் கூட்டு சேந்துட்டீங்க போல ....ஒரு பதிவு போட்டிருக்கலாம்ல..சரி போனாப்போகுது. நல்லா என்ஞாய் பண்ணினீங்களா? மனைவிக்கு சுகந்தி மெகந்தி போட்டுவிட்டாங்களா?

மேலும் சில பதிவுகள்