கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

”வரும் ஆனா வராது “ என்பது போல் போனேன் ஆனால் போகலை என ஆகி விட்டது நாங்கள் கோவைக்குப் போனது..

சொந்த ஊருக்கு 7 மாதங்களுக்குப் பின்னால் அக்டோபர் 25ல் தான் போனேன்.. 7 மாத விஷேசங்களின் கமிட்மெண்ட்ஸ் இருந்தததால் அவற்றைப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.. அம்மா வீட்டில் இணையம் இல்லை..
சென்டருக்குச் சென்று கெட் டு கேதர் நிலவரம் பார்க்கவும் எனக்கு நேரம் இல்லை.. என்னவர் 31ம் தேதி காலை தான் ஊருக்கு வந்தார்... என்ன நேரமோ தெரியவில்லை காலை ஆறரைக்கே வர வேண்டிய சபரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதம்.. அவர் வீட்டிற்கு வந்து, மேலும் என் அண்ணா அவரின் வேலைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பவே மணி 10க்கும் மேல் ஆகி விட்டது... பேருந்து நிலையம் சென்று கோவை பேருந்து புறப்படும் போது மணி 11.30.. கோவை சென்று சேரும் போது மதியம் 2 மணியை நெருங்கி விட்டது.. பேருந்தில் இருந்து இறங்கிதான் அட்மின் அவர்களுக்குப் ஃபோன் செய்தேன்.. பெயரைக் குறிப்பிட்டு கெட்டுகேதருக்கு வந்திருப்பதாகக் கூறியதும் அவர் சிரித்த ஒரு சிரிப்பிலேயே மிகப் பெரிய பன் கிடைத்தது போல்தான் இருந்தது...

”என்னங்க கெட்டுகேதர் முடிந்து எல்லோரும் கிளம்பிட்டு இருக்காங்க நீங்க இப்போ வரீங்க? .. சரி பரவாயில்லை சீக்கிரமா ஹோட்டலுக்கு வாங்க” என இடத்தைக் குறிப்பிட்டார்.. ஆட்டோ பிடித்து மெயின் ரோட்டில் ஹோட்டலை எதிர்பார்த்துப் போனால் அது அட்மின் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு குறுக்குச் சந்தில் தான் இருந்தது.. கீழேயே கெட்டூகேதர் ஹால்.. ரிஷப்ஷனில் கேட்டு உள்ளே நுழைந்தால் எல்லோரும் தம்சரட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.. நுழைந்த மாத்திரத்தில் கண்ணில் பட்டது என்னவோ அட்மின் தான்.. அவர் தான் அட்மின் பாபு என உள்மனது சொன்னாலும் கற்பனையில் இருந்த கல கல, துறு துறு ஆசாமிக்கு பதிலாக அமைதியாகத் தெரிந்தார்..(பொறுப்பு அதிகம் என்பதால் போலும்:))மேலும் ஆர்க்குட் ஃபோட்டோவில் இருந்த கலருக்கும் நேரில் இருந்ததற்கும் பெரிய்...ய வித்தியாசம் இருந்ததால்
குழப்ப ரேகை மனதில் ஓடியது...ஒருவர் கையில் கேமாராவுடன் விளையாட்டைப் பதிவு செய்து கொண்டு இருந்தார். அவரை நான் யாரோ கேமராமேன் என நினைத்த நேரத்தில் அட்மின் தன்னை நாகை சிவா எனவும் கேமராவுடன் இருந்தவரை பாபு எனவும் அறிமுகப் படுத்த , அதிலேயே தெளிவாகத் புரிந்து விட்டது அட்மின் பாபு யார் என்பது..:))

லேட்டாக வந்ததற்கு ரம்யாவிடம் திட்டு கிடைக்கும் என எண்ணி ரம்யாவைத் தேடினால் உடல் நலக் குறைவால் ரம்யா ஆப்செண்ட்.. எனவே மனது கொஞ்சம் அப்செட் ஆனது.. கல்யாணப் பொண்ணு திருமண அழைப்பிதழ்கள் மற்றும் நட்புகளுக்கு கொடுக்க கிஃப்ட், கெட்டூகேதருக்கு என புது ட்ரெஸ் எல்லாம் வாங்கி வைத்திருந்த்தும் காய்ச்சல் காரணமாக வர இயல வில்லை..
விதி வலியது போலும். :( இருந்தாலும் கல கல துறு துறு சமர்த்து சுகந்தி இருந்தது ரம்யா இல்லாத குறையைப் போக்கியது போல் இருந்தது... :) நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என நினைத்த உமா.k அவர்களும் வர இயலவில்லை போலும், உ மாமியும் ஆப்செண்ட்,ஜெ மாமியின் உறவினர் முந்தினமே வந்து விட்டு சென்றதை அறுசுவையைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.செல்வி அக்காவை ஏற்கனவே ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிந்தது... சௌம்யன் அவர்களையும் தவமணி அவர்களையும்,சுகந்தி,லதாவினீ குடும்பத்தினரையும் அறிந்து கொண்டு,அட்மின் அவர்கள் கொடுத்த ஸ்வீட்டுடன் ஜோதியில் ஐக்கியம் ஆனோம்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சுவையான லன்ச். லன்ச்சில் லதா தவற விட்ட தக்காளி சூப்பும், ரசமும் ஊறுகாயும் எனக்கு ஸ்பெஷலாகப் பிடித்து இருந்த்தது..
அட்மின் அவர்களின் உபயத்தால் அறுசுவையின் ஆரம்பகால தூண்களில் ஒருவரான விஜி அவர்கள் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.. அவர்களின் குட்டிப் பெண் எங்கள் வீட்டு அருகாமையில் இருந்த சுட்டிப் பெண்ணைப் போல் இருந்தாள்.. :)

கெட்டூகேதருக்கு வந்த சந்தோஷமோ என்னவோ எப்போதும் வீட்டில் லேட்டாக சாப்பிடும் நான் அன்று சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு, பக்கத்து டேபிலிலேயே தவமணி அவர்களும் நானும் அரட்டையை ஆரம்பித்து விட்டோம்..அட்மின் வந்து கூறித்தான் தெரிந்தது உள்ளே ஹாலில் ஃபோட்டோ செஷன் போய்க் கொண்டு இருப்பது.அனைவரும் ஃபோட்டோ செஷனை முடித்து விட்டு இருக்க லேட்டாகச் சென்ற நாங்கள் தவமணி அண்ணா, சுகந்தி மற்றும் லதா குடும்பத்தினரும் ஃபோட்டோ செஷனை முடித்துக் கொண்டோம்..

பின் இலந்தை ஜூஸ்,கமர்கட் வகையறாக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தோம், தேன் மிட்டாயைத் தேடினேன்.. அட்மின் அவர்களிடம் தேன் மிட்டாய் எங்கே எனக் கூடக் கேட்டேன் அவர் அதற்கு பதிலாக ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்தார்.. சரி வாங்கி வர வில்லை போலும் என நினைத்துக் கொண்டேன்.. ஆனால் அறுசுவையைப் பார்த்த பின் தான் தெரிந்தது வாங்கி வந்தவை உடனே காலி ஆகி விட்டன என்று..:( இலந்தை ஜூஸ்,வடை, கமர்கட் நிறைய இருந்தது.. வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அட்மின் வற்புறுத்த, கொண்டு போனாலும் சாப்பிட ஆள் இல்லாத்தால் எடுத்துச் செல்ல வில்லை... இடைப்பட்ட நேரத்தில் நாகை சிவா அவர்களிடம் சரியாக இரண்டே இரண்டு வாக்கியங்கள் பேசினேன்..
பின் குரூப் ஃபோட்டோ செஷன்.. வரிசையாகப் போடப்பட்ட சேர்களில் பலரும் அமர்ந்து விட்டிருக்க நின்று கொண்டிருந்த என் பக்கத்தில் ஒரு சேர் மட்டும் காலியாக இருந்தது.. யாரை அமரச் சொல்லலாம் என் குழம்பி கடைசியில் நானே அமர்ந்து விட்டேன்.. அங்கே பக்கத்தில் அம்ர்ந்து இருந்த
கரோலின் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.. :).அட்மின் அவரகள் இல்லாமல் ஒரு ஃபோட்டோ மற்றும் அட்மின் அவர்களையும் சேர்த்துக் கொண்டு என க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் பட்டது..கேமராவுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தம் கேமராக்களிலும் எடுத்துக் கொள்ள ஃபோட்டோ செஷன் இனிதே நிறைவடைந்தது.

நான் தான் பலரிடமும் இன்னமும் பேச வில்லையே... சௌம்யன் அவர்களிடம் சென்று பேசத் துவங்கினேன்.. அவர் காலையில் இருந்து நடந்தவற்றை கூறத்துவங்க அட்மின் வந்து இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும் வரவேற்பறையில் போய் பேசிக் கொள்ளலாம் எனக் கூற, வரவேற்பறைக்குச் சென்றால் அங்கு கூட்டணி மாறிவிட்டது...சௌம்யன் அவர்கள் குடும்பத்தினரைத் தவற விட்டு விட்டேன்.. :( லதா வினீத் , சுகந்தி செல்வி அக்காவுடன் பேச்சு. பேச்சு என்பதை விட ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டோம் என்றுதான் கூற வேண்டும்.. :) லதாவினீத் முழுமையாக எக்சைட்டட் ஆக இருந்தார்.லதா எனக்குக் கூற வேண்டிய உண்மைக்கதை ஒன்று இன்னும் பாக்கி இருக்கிறது ;).. [நியாபகம் இருக்கா லதா?? ;) அதை மெயிலில் அனுப்பிடுங்க.. இல்லை எப்போ நீங்க ஆன்லைன் ல வருவீங்கனு சொல்லுங்க நான் வந்து கேட்டுக்கிறேன்.. ;)))] மேலும் வரவேற்பறையில் மஞ்சுளா மற்றும் அவரின் தோழியின் அறிமுகமும் கிடைத்தது.அவர்கள் கிளம்பிக் கொண்டு இருந்ததால் அவர்களிடமும் பேச முடியவில்லை.. :(

எங்கள் வீட்டு சுட்டியும் போலாம் எனக் கூற எனது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியைக் கொடுத்து விட்டுக் கிளம்பினால் மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. எனவே டைனிங் ஹாலிலேயே சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம்.. பின் ஹோட்டல் பக்கம் யாரையோ விட வந்த ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டோம்... கடைசியாகச் சென்ற நாங்கள் தான் முதலில் கிளம்பினோம் என நினைக்கிறேன்.கிளம்பும் நேரத்தில் நல்ல வேளையாக அட்மின் அவர்களே நாங்கள் அமர்ந்து இருந்த பக்கம் வந்தார் இல்லையெனில் அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வாய்ப்பு இல்லாமலே போயிருக்கும்...

வந்தவர்களில் பெரும்பாலும் அறுசுவையின் சைலண்ட் ரீடர்ஸ்.. அவர்களிடம் அறுசுவையில் பேசவும் முடியாது.. லேட்டாகச் சென்று சீக்கிரமே கிளம்ப வேண்டி இருந்ததால் சில பல விளையாட்டுக்களையும், விஷயங்களையும், பல நல்ல உள்ளங்களின் அறிமுகத்தையும் தவற விட்டுவிட்டேன்.. :( இன்னும் சொல்லாத பல விஷயங்களும் இருக்கின்றன.. கெட்டுகேதர் முடிந்த ஓரிரு நாளிலேயே பதிவிட்டிருந்தால் இன்னும் விளக்கமாகக் கூறி இருக்கலாம். அப்போது எழுதவும் நேரம் இல்லை.

எப்படி இருப்பினும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்கும் எனக்கு கோவை கெட்டுகேதர் பல விஷயங்களை உணர்த்திய நல்லதொரு அனுபவமாக இருந்தது... :)) கெட் டுகேதரை ஏற்பாடு செய்த அட்மின் அவர்களுக்கும் அட்மின் அவர்களை மிகவும் உற்சாகப் படுத்திய ”சௌம்யன்” அவர்களுக்கும் நன்றிகள் பல.... :))

பி.கு : நேற்றைய முன் தினம் தான் ஊரிலிருந்து வந்தேன்.. எனவே தான் கெட் டு கேதர் முடிந்து இவ்வளவு நாள் கழித்து பதிவு.. :(...

லேட்டா பதிவு போட்டாலும் விபரமா எழுதி இருக்கிறீங்க. ;)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி.. இப்போதான் உங்களிடம் முதல் முறை பேசுகிறேன்.. அதிலும் மிக்க மகிழ்ச்சி.. உங்கள் பக்கத்தைப் பார்வையிட்டிருக்கிறேன் இமா.. ரொம்பவும் தோட்டம் கைவினைப் பொருட்கள் என கலர் ஃபுல்லாக இருந்தது.:) குழந்தைகளுடனான உங்களின் உலகம் மிக அழகு இல்லையா! :))

சாந்தினி
நல்லா இருக்கீங்களா?லேட்டா வந்தாலும் லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்டா இருக்கு. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நான் நலமே.. நீங்க நலமா? வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)

நல்லாருக்கீங்களா? வீட்ல அண்ணா, உங்க அண்ணா அண்ணி குழந்தை நல்லாருக்காங்களா? ஹைத்ராபாத் போய்ட்டீங்களா? க்ளைமேட் எப்படி இருக்கு.

உங்க பதிவைப்பார்த்தேன். லேட்டா சொன்னாலும் ரொம்ப ரசுச்சு ரசிச்சு சொல்லிருக்கீங்க. நானும் ரசிச்சு படிச்சேன். நீங்க கெட்டூகெதர்க்கு லேட்டா வந்தாலும் உங்களைப்பாத்ததே எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான். நீங்கங்கறதால பரவால்ல அவ்ளோ அவசரத்துலயும் வந்துட்டீங்க ஆனா நாங்களா இருந்துருந்தா கண்டிப்பா யோசிச்சுருப்போம்.

சரி அதென்னப்பா சீக்ரெட். எனக்கே நினைவு இல்லையே? என் மெயில்க்கு சீக்ரமா மெயில் பன்னி சொல்லுங்க எனக்கு தலையே வெடிச்சுரும் போலருக்கு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சாந்தினி, லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க :) நல்ல பொறுமையா, அழகா, வர்ணனைகளோடும், ரசனைகளோடும் அற்புதமாக விவரித்து உள்ளீர்கள். நன்றிகள் பல :) நானே கெட்-டூ-கெதர்ல கலந்துட்ட ஒரு பீலிங் கிடைச்சதுப்பா. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய், இன்னைக்கு தான் உங்களோட கெட்-டூ-கெதர் 'ஓய்' எல்லாம் பார்த்தேன். நல்ல கமெண்ட்ரி தான். ஹஹஹஹஹ்.... சஹானா குட்டி எப்படியிருக்கா பா? ஏன் ஒரு மூணு நாளா அறுசுவைக்கே வரல? என் மேல கோபமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோவை சந்திப்பில் கலந்துக் கொண்ட அனைவரும் பதிவுகள் இட்டு உள்ளதால் அதை பதிவிடா கயவன் என்ற நற்பெயர் எனக்கு ஏற்பட்டு விட கூடாது என்ற எண்ணத்தில் இந்த பதிவு.

அந்த சந்திப்பில் கலந்துக் கொண்டவர்கள் எல்லாரும் விருப்பட்டு அல்லது அழைப்பு விடுத்து வரப்பட்ட மக்கள், ஆனா நாம் கொஞ்சம் வித்தியாசமாக அழையா விருந்தாளியாக கலந்துக் கொண்டாச்சு.

அங்கு நடந்த விசயங்களை எல்லாரும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விட்டதால் அதை விடுத்து மற்றவற்றை மட்டும் முன் வைக்கிறேன்.

அறுசுவை விழாக்களில் எனக்கு எப்பவுமே ஒரு அச்சம் உண்டு. அதில் கலந்துக் கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் மைக் கை பிடித்து நம்மை கொல்லும் வாய்ப்பு உண்டு. அட்மின் வழக்கம்போல் சிரித்துக் கொண்டே உள்ளூக்குள் அழுது கொண்டு இருப்பார். அப்புறம் நாங்கள் தான் வேறு வழியே இல்லாமல் ஸ்டேஜ்க்கு பின் இருந்து முன் வந்து "சில" "பல" உபயாங்களை செய்து அவரை அமர வைக்க நேரும். அது போல் ஏதும் இங்கும் நேர்ந்து விட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக தான் செளமியன் ஸ்லோகம் சொல்லி (பாடி) முடித்ததும் மைக் கைப்பற்ற வேண்டியது ஆகிற்று.

அந்த சந்திப்பில் என்னவெல்லாம் பண்ண வேண்டும் என அட்மினிடம் காலையிலே கேட்டேன். அங்க போய் மக்களின் மனநிலையை பார்த்து முடிவு எடுத்துக்கலாம் என்று சொல்லி விட்டார். அதனால் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், பேசிய பேச்சுகள் அனைத்தும் உடனடி நிகழ்வு தான். அதிலும் அறுசுவை மக்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதில் எனக்கும் இருந்த/இருக்கும் ஒரு நீண்ட சந்தேகத்தின் காரணமாகவே முடிந்த அளவு நக்கல், நையாண்டி, Counter Attack எல்லாம் ரொம்பவே அடக்கி வாசிக்க வேண்டியது இருந்தது. இதற்கு காரணம் அறுசுவை முழுவதும் பரவி கிடக்கும் "தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்கப்பா", "கோச்சுக்காதீங்கப்பா", "சாரிப்பா" போன்ற வார்த்தைகள் தான். கருத்து மோதல்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையோ இது என்ற அச்சம் கூட உண்டு.

அதே காரணத்தின் பொருட்டே சந்திப்பின் முடிவில் அறுசுவை மக்கள் அனைவரும் கூடி பேசிய தருமணங்களில் ஒதுங்கி இருக்க வேண்டியது ஆயிற்று. சாந்தினி, லதா, சுகந்தி, செளமியன் போன்றவர்களிடமும் கேட்ட கேள்விக்கு பதிலுடன் நிறுத்திக் கொண்டு அகிலேஷ் வுடன் அளவாள நேர்ந்தது.

அன்று மாலை ஹோட்டலில் தவமணியிடம் பல வித விசயங்களை பற்றி விவாதிக்க முடிந்தது. அதன் மூலம் அன்று காலை சந்திப்பின் போது என்ன நாகை சிவா ரொம்ப அமைதியாக இருக்கிறார் என்ற கருத்தை அவர் மாற்றி இருக்க கூடும்.

செல்வி மற்றும் அவர்கள் கணவரை முன்பே ஒரு சந்தித்து இருந்த காரணத்தால் அவர்களிடம் கொஞ்சம் இயல்பாக இருக்க முடிந்தது. இம்மானுவேல் மனைவிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள் இந்த நேரத்தில்.

ஹண்டி கேமிரா, டிஜிட்டல் கேமிரா, மைக் என எல்லாத்தையும் கையில் வைத்து இருந்ததால் எதையும் உருப்படியாக செய்யவில்லை நான். படங்கள் பெரும்பாலும் கலங்கி இருந்தது. அட்மின் மனதுக்குள் திட்டி இருப்பார். வீடியோக்களை இன்னும் காண வில்லை. நாகையில் பத்திரமாக வைத்து விட்டு வந்துட்டேன் :)

மற்றப்படி இந்த சந்திப்பை சிறப்பாக அமையும் படி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் & வாழ்த்துக்கள் :)

பின்குறிப்பு : விரைவில் ஒரு மூப்பெறும் விழாவை இந்த மாதத்தில் எதிர்பாருங்கள். மேற்கொண்டு தகவல் வேண்டுவோம் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் ........................

.................

................

................

...............

வேற யாரு

நம்ம அட்மின் தான்

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இது கோவையில் நடந்த கெடு டு கெதர் பற்றிய இழை!

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்