கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

நானும் ஆபீஸ் கு வந்துட்டேன், கெட் டு கெதர் பத்தி நிறைய சொல்லணும்.... இப்ப தான் டைப் பண்ண ஸ்டார்ட் பண்றேன். யாரும் கோச்சுக்க வேண்டாம். ஒரு பத்து நிமிடத்துல மறுபடியும் வரேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முதல்ல யார் யார் வந்தாங்கனு சொல்லிடறேன்.
1 .தவமணி அண்ணா, அவங்க பொண்ணு பாரதி
2 .சௌமியன் - அவரு மனைவி
3 . சுஜாதா - அவங்க கணவர், அவங்க பொண்ணு
4 . மஞ்சுளா, வீனா
5 . விமலா கந்தசாமி, அவங்க குடும்பம்.
6 . இமா - அனுப்புன சத்யா,அவங்க அம்மா,அப்பா, சத்த்யாவோட பொண்ணு
7 .அட்மின் அண்ணா ப்ரிண்ட்ஸ் அகிலேஷ்,கரோலின் குடும்பம்
8 . லதா - அவங்க கணவர், அவங்க பொண்ணு
9 . செல்வி அம்மா - அவங்க கணவர், அவங்களோட ப்ரிண்ட்ஸ் குடும்பம்
10 . சாந்தினி - அவங்க கணவர், சாந்தினி அண்ணா குடும்பம்
11 .அட்மின் அண்ணா, நாகை சிவா

இவங்க எல்லாரும் வந்தாங்க. யாராவது பேர் விட்டு போய் இருந்தா ரொம்ப சாரி!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

j மாமி அனுப்புன, அவங்க relative சனிகிழமை நு நினைச்சுட்டு ஹோட்டல் கு வந்துட்டான்கலாமா. அப்பறம் அட்மின் அண்ணா கு போன் பண்ணி கேட்டு இருக்காங்க. அண்ணா அப்பறம், சண்டே நு சொல்லி இருக்கார். அதுனால, அவங்க வரல ப
ரம்யா கு ஒடம்பு சரி இல்லைன்னு வரல.

இவளோ பேர் கோயம்புத்தூர் கெட் டு கெதர் பத்தி தெருஞ்சுக்க ஆசையா இருக்கீங்கன்னு நினைக்கும் போது,ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த அக்கறை தான் அறுசுவை இன் பெரிய பலம்.....இத பத்தி தான் நேத்து எல்லாரும் பேசிட்டு இருந்தோம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லாரும் நல்லாருக்கீங்களா? குட் மார்னிங்க் எல்லாருக்கும்... சாரிங்க கவிசிவா நேத்திய களைப்புல பெயரை மாத்தி சொல்லிட்டேன் நாகைசிவா அண்ணாதான் வந்துருந்தாங்க மாத்தி சொல்லிட்டேன் உங்க பேரை. நீங்க நேத்து என்கிட்ட பேசினப்ப சரியா பேசமுடிலை அதுக்கும் இன்னொரு சாரி.

உண்மையா நாங்க எல்லாருமே ரொம்ப என்ஜாய் பன்னினோம் இப்ப ரொம்ப கவலையா இருக்கு அச்சோ அதுக்குள்ள முடிஞ்சுருச்சேன்னு!!! வராமலே இருந்திருக்கலாம் போல எப்ப வரும் வரும்னு எதிர்பாத்துட்டுட்டு இருந்தப்ப என்ன ஒரு த்ரில்???

நேத்து இன்னும் சொல்ல மறந்த விஷயம் இருக்கு. தேன்மிட்டாய், இலந்தைவடை, தராசுமிட்டாய், ஒரு குட்டி பன் மாறி ஒரு கேக், லால்பப், சாக்லேட்ஸ், கார இலந்தை உருண்டை, அல்வா, ஜூஸ், காபி இன்னும் நிறைய ஐட்டம்ஸ் கூட தந்தாங்க ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. டீலா நோ டீலா கூட விளையாடினோம், அதுமட்டும் இல்லை சுரண்டல் விளையாட்டு கூட விளையாடினோம். செம ஜாலியா இருந்துச்சு.....

மீண்டும் மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

//இத பத்தி தான் நேத்து எல்லாரும் பேசிட்டு இருந்தோம்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
;))

‍- இமா க்றிஸ்

நல்லாருக்கியாடா??? நீ எல்லாரையும் சரியா சொல்லிருக்க இப்பதான் தெரியுது எத்தனை பேரை நான் சொல்லாம மறந்துட்டேன்னு... சொல்லாத்தால மன்னிச்சுக்கங்க. ப்ளீஸ்.....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

பத்து மணிக்கு தொடங்கலாம் நு நினைச்சது,எல்லாரும் வரைக்கு 12 மணி ஆய்டுச்சு. கோயம்புத்தூர் ல ரெண்டு குழந்தைகள, கடத்தி கொலை பண்ணிட்டாங்க,அதுக்காக ஊர்வலம் போனாங்க, அந்த ஊர்வலத்துல நம்ம லதா குடும்பம் மாட்டிட்டாங்க, அதுனால அவங்க வரைக்கு லேட் ஆய்டுச்சு. அப்பறம் செல்வி அம்மா சேலம் ல இருந்து வந்தாங்க, ஒரே மழை அதுனால லேட் ஹ வந்தாங்க. எப்படியோ எல்லாரும் வந்து, நிகழ்ச்சி தொடங்கரக்கு,12 மணி ஆய்டுச்சு.

சௌமியன், நல்ல கடவுள் வாழ்த்து பாடி தொடங்கி வெச்சாரு. அப்பறம் நாகை சிவா பேச தொடங்கினார். அட்மின் அண்ணா வ பத்தி கொஞ்சம் அறிமுகம் தந்தார். அப்பறம், எல்லாரும் அறிமுக நிகழ்ச்சி நடந்துச்சு. இதுல பெரிய காமெடி என்னன்னா, எல்லாரும் நாகை சிவா ந ஒரு கற்பனை வெச்சு இருப்போம் இல்ல?? அது அப்படியே opposite ஹ இருந்தார்.

சொன்ன நம்ப மாடீங்க,ரொம்ப சின்ன பையன் மாதிரி இருந்தார். எல்லாரும் அவர அண்ணா அண்ணா நு கூப்பிட்டோமா, மனுஷன் டென்ஷன் ஆய்டார் பாவம். அவரு 87 ல பிறந்தவராம, நாங்க எல்லாம் அண்ணா நு கூப்பிட கோபம் வரமல இருக்கும்????நீங்களே சொல்லுங்க ??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய்.. எல்லாருக்கும் எனது காலை வணக்கம். சுகந்தி 86 சொல்வது போல எல்லோருடைய அக்கறையும் ,அன்பும்தான் அருசுவையின் மிகப் பெர்ய பலம்.
இந்த அக்கறை அட்மின் பாபுவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த கெட் டு கதர் ஏற்பாடு செய்த அட்மின் பாபுவுக்கு நம் அனைவர்ரின் சார்பாக
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அய்யோ, லதா மறுபடியும் நாகை சிவா வ அண்ணா நு சொல்லிடீகளா???இத பாத்தாரு, ரூம் போட்டு அழுகபோறார்....

விமலா மேடம், சுகந்தி சொன்ன போதுமே. 86 உம் கூடையா???? ஹ்ம்ம்ம் அழுக போறேனாமா!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

;)))

ஒரு டிஷ்யூ பாக்ஸ் அனுப்பட்டுமா!! ;))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்